மழை நீரை சேமிக்க மக்களுக்கு அரசின் உத்தரவு . ஆனால்! தமிழக அரசு மழை நீரை சேமிக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

Uncategorized

தமிழ்நாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில், ஜெயலலிதா கொண்டு வந்த அதே திட்டத்தை , மீண்டும் விஜய் கொண்டு வந்துள்ளார். இதனால், மழை நீர் சேமிப்பு மக்களுக்கு பெரிய அளவில், பயன் அளிக்குமா? என்பதுதான் மிகப்பெரிய கேள்வி?

மேலும் ,இது ஒரு பத்து சதவீதம் என்று எடுத்துக் கொண்டாலும், அரசு சேமிக்க வேண்டிய மழை நீர் எங்கே? குளம், குட்டை ,ஆறுகளில் சேமிக்க வேண்டிய மழை நீரை, சிறிய வீடுகளில் எந்த அளவுக்கு அவர்களால், மழை நீரை சேமிக்க முடியும்? இதுதான் முக்கிய கேள்வி?

மேலும்,யாரோ மழைநீர் சேமிப்பு திட்டத்தை ஜெயலலிதா அமல்படுத்தினார் அதை நீங்கள் அமல்படுத்துங்கள். இப்படிதான் ஐடியா கொடுக்கிறார்கள். இந்த ஐடியா தமிழக மக்களுக்கு இது பயனளிக்குமா? மழைக்காலம் வருவதற்கு முன்பே, ஒவ்வொரு ஏரிகளின் கரைகள் உடைக்கப்பட்டு இருக்கிறது .அதை சரி செய்யவில்லை.

ஒவ்வொரு குளத்தின் கரைகள் எப்படி இருக்கிறது? என்பதை பொதுப்பணித்துறை ஆய்வு செய்யவில்லை அதையெல்லாம் பலப்படுத்தி மழை நீரை அதில் சேமிப்பதற்கு ,எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதை விட்டு,விட்டு வாலை பிடிக்கிறார்கள். எனவே, தமிழக அரசு தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏரிகளின் கொள்ளளவு உயர்த்துவதற்கு கரைகளை பலப்படுத்தி இருக்க வேண்டும்.

தவிர,மழைநீர் கால்வாய்கள் சீர் செய்து அதன்மூலம் நீர் வரத்து ஏரிகளுக்கு எந்த தடையும் இல்லாமல், வருவதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இதையெல்லாம் செய்யாமல், மழை நீர் சேமிப்பு மக்களிடம் அது பயனளிக்குமா?

உடனடியாக ஏரிகளில் ,மண் எடுப்பதை நிறுத்தி, ஏரி கரைகளை பலப்படுத்தி, மழை நீர் வரவு கால்வாய்கள், சீரமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் வருங்காலத்தில் தண்ணீர் பஞ்சத்தை ஓரளவுக்கு நாட்டில் தடுக்க முடியும்.

மேலும்,இதை ஒரு சில மாதங்களுக்கு முன்பே இந்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இனியாவது இதை எடுப்பதற்கு தமிழக அரசு விரைந்து செயல்படுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *