தமிழ்நாட்டை திவால் ஆக்கிவிட்டு, அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலைமை திமுக ஆட்சியில் வருமா ? – அரசியல் ஆய்வாளர்கள்.

அரசியல் இந்தியா சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஜூலை 24, 2024 • Makkal Adhikaram

தமிழ்நாட்டில் ஏற்கனவே அதிமுக 5 லட்சம் கோடி கடன், இப்போது ஒன்பது லட்சம் கோடி கடன் என்கிறார்கள். இதே நிலைமை போனால் இந்த ஆட்சி முடிவதற்குள் தமிழ்நாடு ஒரு பக்கம் கடனில் மூழ்கும் அபாயம், மறுபக்கம் இந்த அரசு ஊழியர்களுக்கு, மக்கள்  நல திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.மேலும்,

 பல தொழிற்சாலைகள், நடுத்தர கம்பெனிகள், கொரோனா காலத்தில் சுமார் ஒரு லட்சம் கம்பெனிகள் மூடப்பட்டு விட்டதாக கேள்விப்பட்டேன் .இருக்கும் கம்பெனிகள் ஆவது மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும். அந்த கம்பெனிகளையும்,ஒழுங்காக நடத்த அவர்களிடம் அரசியல் கட்சிகளின் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும்.அப்படி இருந்தால் தான்,அவர்களால் தொழிலை நடத்த முடியும். மேலும், அவர்கள் வாங்கிய கடனையும் அடைக்க முடியும் .இல்லையென்றால், 

அவர்கள் வாங்கிய கடனை எப்படி அடைப்பார்கள்? தொழிலாளர்களுக்கு எப்படி ஊதியம் கொடுப்பார்கள்? இப்படி பல நிறுவனங்கள் இருந்து வருகிறது. அதிலும் சில கம்பெனிகள் வளர்ச்சி அடைகிறது. அது ஆளும் கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோ ,அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களாக தான் இருக்கிறது .சரி அப்படியாவது இந்த மக்களை வாழ வைக்கட்டும். ஆனால், 

தொடர்ந்து ஏழை ,நடுத்தர மக்களின் வளர்ச்சி, கடந்த அதிமுக ஆட்சியில் இருந்து ஒன்றுமே இல்லை. யார் வளர்ச்சியை அடைந்திருக்கிறார்கள்? என்றால் அரசியல் கட்சிகளே, ஆட்சியாளர்களே, இவர்கள்தான் வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இவர்கள்தான் சொத்துக்களை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். உழைக்கும் மக்கள் சொத்துக்களை விற்க வேண்டிய நிலைமையில் தான் இருக்கிறார்கள்.மேலும்,

டாஸ்மாக் கடை மூலம்  வருகின்ற வருமானம் இல்லை என்றால், இன்று அரசாங்கத்தின் நிலைமை அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலைமை . ஆக கூடி என்று குடிகாரர்கள் வருமானத்தில் தான் பெரும்பகுதி ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் . எவ்வளவு கேவலம்?

 இது எதனால்? மக்கள் ஒழுக்கத்திலிருந்து, மனசாட்சியிலிருந்து ,போட்டி, பொறாமை, வஞ்சகம், சூழ்ச்சி, போலி கௌரவம்,போதை பழக்கவழக்கங்கள், சுயநலம் ,இதில் வாழ பழகியதில் இருந்து ,அவர்கள் தவறான பாதையில் சென்று கொண்டு, இவர்களும் தத்தளிப்பது மட்டுமல்ல, வருங்கால இளைய தலை முறைகளும், இதே பாதையில் சென்றால் தத்தளித்துக் கொண்டு தான் இருப்பார்கள்.தவிர, முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள், எவ்வளவு வறுமை இருந்தும், சந்தோஷத்திற்கு குறைவில்லை. இப்போது வறுமையும் இருந்து, சந்தோஷமும் இல்லை.மேலும்,

 விலைவாசி உயர்வு எவ்வளவு சம்பாதித்தாலும் போதாது என்ற நிலைமைக்கு மனித வாழ்க்கை இன்று தள்ளப்பட்டுள்ளது. ஊரை ஏமாற்றுபவனோடு, அரசியலில் கொள்ளை அடிப்பவனோடு, ரவுடிகளோடு, சமூகவிரோதிகளோடு, உழைப்பவன் போட்டி போட முடியாது .மேலும், அரசியல் என்பது இன்று அவர்களுக்கு தான் சொந்தம் ஆகிவிட்டது .அதனால், மக்கள் யார் வந்தால் என்ன? யார் போனால் என்ன? என்று நினைத்து வாழ்ந்தால், வருங்கால சந்ததிகள் வாழ்க்கை நிச்சயம் கேள்விக்குறியாகும்.தவிர,

 உழைப்பின் பாதியை நீ டாஸ்மாக் கடையில் கொடுத்து விடுகிறாய். எப்படி குடும்பம் நடத்துவது? என்று பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள். அங்கே பிரச்சனைகள் ஏற்படுகிறது.மேலும், இன்றைய இளைஞர்கள் பாதி பேர் சினிமாவைப் பார்த்து, கற்பனையில் வாழ்பவர்களின் இளமைப் பருவம் அது, இப்போது எதைப்பற்றியும் யோசிக்க மாட்டார்கள் .பிறகு ஒருவேளை உணவுக்கு கஷ்டப்படும்போது ,அந்த வறுமை அவர்களுக்கு அப்போதுதான் உணர்த்தும். வாழ்க்கையை இழந்து விட்டோம் என்பதை அப்போது புரிந்து கொள்வார்கள்.

மேலும், திமுக அரசு ,இருக்கின்ற நிதியை கூட முறையாக பயன்படுத்தாமல், எந்த வேலையும் ஒழுங்காக செய்யாமல், அரசு ஊழியர்களை மிரட்டி, பழி எல்லாம் அவர்கள் மேல் போட்டுவிட்டு, இவர்கள் கணக்கு காட்டி எடுக்க பார்க்கிறார்கள் என்பதுதான் ஒட்டுமொத்த அரசு ஊழியர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

 இன்று திண்டுக்கல் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் காத்திருப்பு போராட்டம் நடத்துகிறார்கள். மற்றொரு பக்கம் நகராட்சி, பேரூராட்சி துறை அதிகாரிகள் வேலை செய்ய முடியவில்லை என்று வேதனையும் ,கவலையும் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் கவுன்சிலர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், எந்த கவலையும் இல்லாமல் உதயநிதி ஸ்டாலின் எம்பி எலக்ஷனில் வெற்றி பெற்றதற்கு தனது வீட்டில் மந்திரிகளுடனும், எம்எல்ஏ களுடனும், நன்றாக சிக்கன், மட்டன் ,வஞ்சரம் மீன் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் . வாக்களித்த முட்டாள்களுக்கு என்ன தெரியப்போகிறது?

இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும், நீங்கள் திருந்தவில்லை என்றால், அரசியல் ரவுடிகளும், காவல்துறையும் வைத்து ஊழல் செய்து ஏழை, நடுத்தர மக்கள் இன்னும் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு உழைப்பு கேற்ற ஊதியம் கிடைக்காது. பொருளாதார முன்னேற்றம் கிடைக்காது. சமூக நீதி கிடைக்காது. ஏன்? எங்களைப் போன்ற நடுத்தர வர்க்கத்தினர் நடத்தும் பத்திரிகைகளுக்கே சமூக நீதி? கிடைக்கவில்லை. மக்களுக்கு எப்படி கிடைக்கும்? இவை எல்லாம் மக்கள் எல்லாம் கார்ப்பரேட், தொலைக்காட்சி பத்திரிகைகளில் மட்டும்தான் கிடைக்கும். அதைப் பார்த்து திருப்தி அடைந்து கொள்ளுங்கள் . 

இது தவிர, மின் கட்டணம் சுமை, பத்திரப்பதிவு கட்டண சுமை, விலைவாசி உயர்வு ,எல்லாமே மக்களுக்கு இன்று சுமையாகி இது ஏழை, நடுத்தர மக்களின் வாழ்க்கை அதிகமாக பாதித்துள்ளது. தவிர,ஊரை ஏமாற்றி பிழைப்பவர்களுக்கும் ,சட்டத்தை ஏமாற்றி பிழைப்பவர்களுக்கும், எப்படி பேசி, எப்படியும், வாழ்பவர்களுக்கும், அரசியல் கட்சிகளில் குறுக்கு வழியில் சம்பாதிப்பவர்களுக்கும், இது சுமையல்ல, உழைக்கும் வர்க்கத்திற்கு மட்டும்தான் சுமை .

மேலும், யாரெல்லாம் சொத்து வாங்குகிறார்கள், என்று கணக்கெடுத்து பாருங்கள்? தமிழ் நாட்டில் அரசியல் கட்சிகளில் இருப்பவர்கள், போலீஸ் அதிகாரிகள்,அரசியல் ரவுடிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், ஆளும் கட்சியினர், இவர்கள் தான் சொத்து வாங்கி இருப்பார்கள் . அதனால், மக்கள் திருந்தினால் தான் ,உங்கள் வாழ்க்கை உயரும் .

மேலும் ,வீட்டிற்கு வந்து ஓட்டுக்கு பணம் கொடுத்தால் ,அது உங்கள் வாழ்க்கையோ, உங்கள் வருங்கால இளைய தலை முறைகளையோ,வாழ வைக்காது. அவர்களை வாழ வைப்பதற்கு தான் நீங்கள் பணம் வாங்குகிறீர்கள். உங்களை வாழ வைப்பதற்கு யார்? என்று தீர்மானியுங்கள். சும்மா பேசிட்டு போறவன் எல்லாம் இன்று அரசியல் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதை பார்த்து ஏமாறாதீர்கள்.மேலும் ,

பணத்திற்கும், போதைக்கும், பிரியாணிக்கும் தேர்தல் என்று நீங்கள் ஏமாந்து கொண்டிருக்கிறீர்கள்.மாற்றத்தை உங்களிடம் இருந்து ஆரம்பியுங்கள். அப்போதுதான் உங்களுக்கான அரசியல் மாற்றம். உங்களுக்கான அரசியல் ! ஆட்சியாளர்கள் தகுதி என்ன ?என்று தீர்மானியுங்கள். அதற்கு தான் தேர்தல்.  அதுதான் உங்கள் சொந்த வாழ்க்கையின் வளர்ச்சி .எவன் வந்தாலும் நான் மாடு மேய்க்கப் போகிறேன். எவன் வந்தாலும் நான் விவசாயம் தான் செய்து கொண்டிருக்கப் போகிறேன். இப்படி எல்லாம் நினைத்துக் கொண்டிருக்கும் மக்கள், உங்கள் வருங்கால சந்ததிகளை நினைத்துப் பாருங்கள் .அவர்கள் எப்படி வாழ போகிறார்கள் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *