திருவள்ளூர் மாவட்டத்தில் மனசாட்சியுடன் பணியாற்றிய நிருபர் வினோவின் இறப்பு !பத்திரிக்கை துறைக்கு இழப்பு .

அரசியல் ஆன்மீகம் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தொழில்நுட்பம் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

பத்திரிக்கை துறையில் எத்தனையோ பேர் பணியாற்றுகிறார்கள். ஆனால், மனசாட்சியோடு பணியாற்றியவர்கள் ,பணியாற்றுபவர்கள் மிக, மிகக் குறைவு. அந்த இடத்தை பிடிப்பது என்பது மிகவும் போராட்டமான வேலை.

அப்படி போராட்ட களத்தில் வாழ்ந்தால் தான், அல்லது வாழ்பவர்கள் தான், மனசாட்சியுடன் பத்திரிக்கை துறையில் பணியாற்ற முடியும். அது எல்லாராலும் முடியாது.அப்படி தடம் மாறாமல், 20 ஆண்டு காலத்திற்கு மேலாக ,இந்த துறையில், பணியாற்றி அந்த இடத்தை பிடிப்பதுதான், ஒவ்வொருவருக்கும் ,அது போராட்டமான நிலை. அதில் வினோ வெற்றி பெற்றவர் என்று தான் சொல்ல வேண்டும்.மேலும்,

இங்கே பணம் சம்பாதித்தவர் எல்லாம், வெற்றி பெற்ற நிருபர் அல்ல. அல்லது வெற்றி பெற்ற பத்திரிகையாளர் அல்ல. ஏதோ குறுக்கு வழியில் ,பணத்தை சம்பாதித்து விட்டால், அல்லது காரில் வந்து இறங்கினால், தன்னை பெரிய நிருபராக நினைத்துக் கொள்ளலாம். ஆனால்,இது வேறு, அது வேறு.

திருவள்ளூர் மாவட்டம், புன்னப்பாக்கம் கிராமத்தில், ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, வாழ்க்கையை எளிமையாக வாழ்ந்தவர். சமூகத்தின் போராளி என்றுதான் வினோவை சொல்ல வேண்டும்.

மேலும்,தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்து இருந்தாலும், எண்ணங்கள் உயர்ந்தது. எல்லோரிடமும் மரியாதையுடன் பழகக் கூடியவர். நல்ல பண்பாளர். தரம் தாழ்ந்த வேலைகளை செய்ய மாட்டார். ஊழலுக்கு எதிராக போராடிய ஒரு நிருபர். சொந்த சமுதாயத்தில் தவறு செய்தாலும், அதை நேர்மையாக எதிர்த்தவர்.

இந்த சமுதாயம் நல்லவர்களையும், நல்லதையும் எப்போதும் ஏற்றுக் கொள்ளாது. பணத்தை மட்டுமே மதிக்கக்கூடிய இந்த சமுதாயத்தில், மனிதாபிமானத்தை மதித்து, மனசாட்சியுடன் வாழ்ந்து, ஒரு சமூக போராளியாக, பத்திரிக்கை துறையில், எந்த சம்பாத்தியத்தையும் எதிர்பார்க்காமல், வாழ்ந்த ஒரு நபர். அது மட்டுமல்ல, ஒன்றிய கவுன்சிலராகவும் இருந்தவர் . அப்போதும் எந்த சொத்துக்களையும், வாங்கவில்லை. இதுதான் ஒரு மனிதனின் நேர்மையான வாழ்க்கை.

சொத்துக்கள் இருக்கிறது. அதை அனுபவிக்க முடியாத நிலைமை. இருப்பினும், எல்லா மக்களிடமும் அன்பாக பழகக் கூடியவர். அது எல்லோராலும் முடியாது. தான் வறுமையில் இருந்தாலும் ,யாரிடம் உதவி கேட்க வேண்டும்? எப்படிப்பட்டவரிடம் உதவி கேட்க வேண்டும்? என்று அறிந்து நடந்து கொண்டவர்.

ஹோட்டலுக்கு போனாலும், அந்த நாலு இட்லிக்கு மேல், சாப்பிட மாட்டார்.அவருடைய ஆசைகள் இந்த ஜென்மத்தில், நிறை வேறாவிட்டாலும், அடுத்த ஜென்மத்தில் ,அது இந்த ஆன்மா நல்ல இடத்தில் பிறந்து, உயர்வான நிலைக்கு செல்லும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. போகும் போது, யாரும் எதுவும் கொண்டு போக முடியாது. ஆனால், நல்ல பெயரை கொண்டு செல்வது ,ஒரு சிலருக்கு மட்டுமே !

வினோத்தின் ஆத்மா சாந்தியடைந்து இறைவன் அருள் புரியட்டும் என்று மக்கள் அதிகாரம் பத்திரிக்கை சார்பாக எங்களது மனமார்ந்த ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *