
காற்று அரசியல் என்றால் தமிழ்நாட்டில் தற்போது அதுதான் மிக முக்கியமான அரசியலாக போய்க்கொண்டிருக்கிறது. அதாவது ஹேரில் (Air) அரசியல் செய்வது இது என்னடா? இது புதுமையாக இருக்குது? அப்படி ஒரு அரசியல் இருக்கிறதா? ஆம் தமிழ்நாட்டிலே இப்போது கண்டு கண்டுபிடித்திருக்கும் ஒரு புது விதமான அரசியல் .
அந்த அரசியல் என்பது தொலைக்காட்சி ஊடகங்களில் பேசிவிட்டு போவது! அதற்கு விஜய் மாதிரி நடிகர்கள் ஒரு ஆயிரம், 500 கோடி செலவு செய்து மாநாடு நடத்திவிட்டு, மக்களை வரவழைத்து, அங்கே காற்றிலே தங்களுடைய அரசியலைப் பேசி விட்டுப் போவார்கள். இந்த அரசியலை மக்கள் காதுக்கும், கண்ணுக்கும் விருந்தளிப்பவர்கள். கார்ப்பரேட் பத்திரிகை தொலைக்காட்சிகள்.

தமிழ்நாட்டின் அரசியல் கூட்டத்தைக் கூட்டி ஒலிபெருக்கிகளில் ஏர் அரசியல் செய்வதுதான் இன்றைய அரசியல் தலைவர்களின் மாடல் ஆட்சியாகிவிட்டது. இந்தக் கூட்டத்தை வைத்து ஆளும் கட்சிகளை அசிங்கமாக பேசிக் கொண்டிருக்கலாம். அநாகரிகமாக பேசிக்கொண்டு இருக்கலாம் அரசியலுக்கு அர்த்தம் இல்லாமல் பேசிக்கொண்டு இருக்கலாம். ஆனால் ,எதற்கு இது? என்று கூட அர்த்தம் தெரியாமல் பேசிவிட்டு போகலாம்.

இப்படி தான் நடிகர் விஜய் ஸ்டாலினை(UNCLE) அங்கிள் என்கிறார். சொல்லுங்க அங்கிள்? என்ன அரசியல் (basic)க்காவது விஜய்க்கு தெரியுமா? சினிமாவில் ஸ்கிரிப்ட் எழுதி நடிக்க சொல்வார்கள். அதாவது வசனம் பேசி நடிக்க சொல்வார்கள். அதேபோல் இங்கே யாரோ எழுதிக் கொடுத்ததை வசனமாக பேசிக் கொண்டிருக்கிறார். அந்த ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்தவர்களுக்கும், அரசியல் தெரியாது. தமிழக மக்களுக்கு அரசியல் என்பது தெரியாது.

அதனால், இந்த ஏர் அரசியல் எதை வேண்டுமானாலும், பேசிக்கொண்டு போகலாம். மோடியின் அரசியல் என்ன? என்று தெரியாது. மோடியின் உயரமும் தெரியாது. அவர் தூரமும் தெரியாது .அவர் தகுதியும் தெரியாது. ஆனால், அவரைப் பற்றி விமர்சனம் செய்யும் அளவிற்கு விஜய்க்கு தகுதி உள்ளதா? அந்த விமர்சனத்தில் அர்த்தம் இருக்கிறதா? மோடி முஸ்லிம் மக்களுக்கு செய்யாததை விஜய் செய்து விடுவாரா?

அந்த மக்கள் வேண்டுமானால் மதத்தை மட்டுமே பேசிக்கொண்டு அவர்களை அதற்குள், அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அது தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்களுக்கு தெரியுமா? தெரியாதா? என்பது தெரியவில்லை. ஆனால், வடநாட்டில் இருக்கக்கூடிய முஸ்லிம்கள் உண்மையிலேயே மோடியை பற்றி நன்கு தெரிந்தவர்கள். அவர்கள் மோடியை தெய்வமாக மதிக்கிறார்கள். காரணம் இன்று முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையில் ஒளியேற்றியவர் .மோடி முத்தலாக் சட்டத்தை கொண்டு வந்தவர். எத்தனையோ பெண்கள் இன்று அந்த சட்டத்தால் காப்பாற்றப்பட்டு இருக்கிறார்கள். அதுவாவது விஜய்க்கு தெரியுமா?
அரசியல் புரியாத ஒரு கூட்டம் இந்துக்களிலும், முஸ்லிம்களிலும், கிருத்துவத்திலும், சுயநலத்திற்காக, சுயநல அரசியல்வாதிகள் பின்னால் சென்று கொண்டிருக்கிறார்கள். மோடி இந்த தேசம் நலனில்! தேசத்திற்காக ஓடிக்கொண்டிருக்கிறார். அவர் ஓடவில்லை என்றால் இன்று சுற்றி இருக்கும் உலக நாடுகள் இந்தியாவை கட்டம் கட்டி, குழி தோண்டி புதைத்து விடுவார்கள்.

அமெரிக்கா இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை தடுக்கும் நோக்கத்துடன் தான் 50 சதவீத வரி விதிப்பை ட்ரம்பு விதித்தார். எப்படி இங்கு உள்ள அரசியல் கட்சிகளுக்கும், மக்களுக்கும் போட்டி ,பொறாமை இருக்கிறதோ, அதேபோல்தான் உலக நாடுகளுக்கும், இந்த போட்டி, பொறாமை இந்தியாவின் மீது இருக்கிறது. அதனால், மக்கள் உண்மையை புரிந்து அரசியல் என்பதை ஒவ்வொரு பாமர மக்களும், படிக்க வேண்டிய சூழ்நிலை என்று வந்துவிட்டது.

இதை ஏன் சொல்கிறேன்? என்றால் இந்த ஹேர் அரசியலில், திருடனும் தன்னை நல்லவனாக பேசிக் கொண்டிருப்பான். கொலை காரணம் தன்னை நல்லவனாக பேசிக் கொண்டிருப்பான். கொள்ளையடிப்பவனும் தன்னை நல்லவனாக பேசிக் கொண்டிருப்பான். ஊழல்வாதியும் தன்னை உத்தமனாக பேசிக் கொண்டிருப்பான். அப்போது இங்கே யார் தான் நல்லவர்கள்? என்ற கேள்வி எழுகிறது அல்லவா? அந்தக் கேள்விக்கு அர்த்தமே! அரசியலில் நீ என்ன செய்தாய்? என்ன செய்து கொண்டிருக்கிறாய்? இதுதான் மக்களுக்கான அரசியல்.

மக்களுக்கான அரசியலை எந்த அரசியல் கட்சி செய்கிறது? என்பதை தேர்வு செய்யுங்கள். இந்த போலியான ஏர் அரசியலில் இருந்து, ஏமாறாமல் உங்களை காப்பாற்றிக் கொள்ளவும்,தமிழக மக்கள் வருங்கால இளைய சமுதாயத்தை வாழ வையுங்கள்.