மார்ச் 22, 2025 • Makkal Adhikaram
வன்னியர் சமூகத்தின் கல்விக் கொடை வள்ளல் ஐயா செங்கல்வராய நாயக்கர்! தன் வாழ்நாளில் சம்பாதித்த பொருளை சமூகத்திற்கே கொடுத்த அழியா புகழுடையவர்.

உலகில் எத்தனையோ பேர் பிறக்கிறார்கள் ,அதிகார பதவியில் அமர்கிறார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டுமே அழியா புகழுக்கு சொந்தக்காரராக இன்றும் இருந்து வருகிறார்கள். அதில் சர் பீ.டி.லீ செங்கல்வராய நாயக்கரும் ஒருவர்.
இன்று வன்னியர் சமூகத்திற்காக பல லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை தன் உறவினருக்கு கூட அதில் ஒரு பங்கு கூட எழுதாமல், அனைத்தையும் சமூகத்தின் கல்வி நலனுக்காகவே ,இந்த சொத்துக்களை எழுதி, அறக்கட்டளையாக நிறுவியுள்ளார். இன்று இவரால் பல லட்சம் குடும்பங்கள் வேற்று ஜாதியினரும், சேர்த்து பயனடைந்துள்ளனர்.

குறைந்த கல்வி கட்டணத்தில் வியாபார நோக்கம் இன்றி செயல்படும் ஒரே கல்வி நிறுவனம் அது சர் பீ. டி. லீ.செங்கல்வராய நாயக்கர் கல்வி நிறுவனம் தான். இன்று பல ஆயிரக்கணக்கான பேருக்கு வேலை வாய்ப்புகளை கொடுத்து, கல்வியின் தந்தையாக அனைத்து சமூகத்திற்கும் விளங்கி வரும் அழியா புகழுக்கு சொந்தக்காரர்.அவர்,
திருவள்ளுவர் சொன்னது போல்!
தோன்றிற் புகழோடு தோன்றுக! அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
என்ற திருக்குறளுக்கு சொந்தக்காரர்.
வன்னியர் சமூகத்தில் பிறந்து, குறைந்த ஆண்டுகளே அதாவது 45 ஆண்டுகள் வாழ்ந்தாலும், அவருடைய பிறப்பு இன்றும் அழியாமல், மக்களின் மனங்களில் அவர் பெயரை எழுதி வைத்துவிட்டு சென்றிருக்கிறார். இன்று வாழ்கின்ற மக்கள் அறிவார்ந்த சமூகம் மட்டுமே பெரும்பாலும், இதை நினைத்துப் பார்க்கும்.
அதனால்தான், இவர் கல்வியை கொடுத்த கொடை வள்ளலாக மாணவர்களின் மனதில் அவர்களுடைய வாழ்நாள் வரை, அவரை மறக்காமல் இருக்கும்படி செய்து விட்டார். இப்படிப்பட்ட பெருமைக்குரிய ஐயா செங்கல்வராய நாயக்கர் வன்னியர் சமூகத்தில் பிறந்தது, சமூகத்திற்கு கிடைத்த ஒரு பெருமை.ஆனால், இவரைப் பார்த்தாவது கோடிகளை கொள்ளை கொள்ளையடித்து, சமூகத்தை முட்டாள்கள் ஆக்கி அதிகாரப் பதவிக்கு அலைந்து கொண்டு,அரசியல் என்று திரியும் அர்த்த மற்ற கூட்டம் திருந்துமா? அய்யாவின் புகழ் உலகம் உள்ளவரை என்றும் நிலைத்திருக்கும்.