ஜூலை 28, 2024 • Makkal Adhikaram
போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் டெல்லியில் உள்ள ncb-யிடம் மாட்டியதால் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஜாபர் சாதிக் யார் யாருக்கெல்லாம்? இந்த போதைப்பொருள் விற்பனை செய்த பணத்தை, எத்தனை கோடி கொடுத்துள்ளான்? என்ற விவரத்தை தெரிவித்துள்ளான் .
அதில் திமுகவை சேர்ந்த அமைச்சர்களுக்கும், உதயநிதி ஸ்டாலின் குடும்பத்திற்கும் எத்தனை கோடி கொடுத்துள்ளது? அதேபோல், சினிமாத்துறை இயக்குனர் அமீருக்கு எத்தனை கோடி கொடுக்கப்பட்டுள்ளது? இவை அத்தனையும் ஜாபர் சாதிக் மற்றும் அவரது குடும்பத்தினர் வாக்குமூலம் மற்றும் பேங்க் ஸ்டேட்மென்ட், தவிர ,எந்தெந்த நேரத்தில் யாரிடம் எப்போது? எதற்காக கொடுக்கப்பட்டது? அனைத்து ஆவணங்கள் மற்றும் புள்ளி விவரங்கள் எடுக்கப்பட்டுள்ளதாம்.
இப்படி ஆளும் கட்சி திமுக ,தமிழ்நாட்டில் போதைப் பொருள் சப்ளை செய்பவரிடம் பணம் கைமாறி இருக்கிறது என்று அது பற்றிய செய்திகளை வட இந்தியா முழுவதும் உள்ள செய்தி சேனல்கள், பத்திரிகைகள் இச்செய்தியை வெளியிட்டுள்ளது .ஆனால், தமிழ்நாட்டில் இதை ஒரு ஊடகங்கள் கூட வெளியிடவில்லை .ஏனென்றால், வெளியிட்டால் அவர்களுக்கு வருமானம் போய்விடும். நாட்டு மக்களை விட, இந்த பத்திரிக்கை, தொலைக்காட்சிகளுக்கு வருமானம் தான் முக்கியம் .
மேலும், மக்களுக்கு தெரிந்து மட்டும் என்ன செய்து விடப் போகிறார்கள்? மீண்டும் பணம் கொடுத்தால், அதே திமுகவிற்கு வாக்களிக்க தான் போகிறார்கள் என்பது ஊடகங்களின் கருத்து என்னவோ தெரியவில்லை. புரிந்தவர்கள் புரிந்து கொள்ளட்டும், புரியாதவர்கள் போதைகளில் அழியப் போகிறார்கள் .அதனால், நாட்டில் மக்கள் தான் ஏமாந்தவர்கள் .அவர்களை தான் எல்லோரும் சேர்ந்து ஏமாற்ற முடியும்.
ஏமாறும் மக்கள் இருக்கும் வரை, ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டு தான் இருப்பார்கள். நீ எப்போது விழித்துக் கொள்கிறாயோ, அப்போது இந்த அரசியல் உங்களுக்கானது .அதுவரையில் அரசியல் கட்சிக்கும், ஆட்சியாளர்களுக்குமானது.புரிந்து கொண்டால் சரி .