திருவண்ணாமலை மலையே சிவன் படுத்திருப்பது போன்ற ஒரு அமைப்பு. மலைகள், காடுகள், ஏரிகள்,ஆறுகள், இயற்கையை மனிதன் அழித்து அங்கே குடியேற நினைத்தால்! மனிதனை இயற்கையே அழித்து விடும்.
ஒன்றே ஒன்று!செய்யவில்லை,கடலை ஆக்கிரமித்து அங்கே வீடு கட்டவில்லை. அதுவும் எளிதென்றால்,அங்கேயும் ஆக்கிரமித்து இருப்பார்கள். மனிதனின் தவறு மனிதனிடமே வந்து சேர்கிறது. ஆன்மீகம், அரசியல்,சுற்றுச்சூழல் பாதிப்பு,மனித இனமே இதற்கு முக்கிய பொறுப்பு.
மனிதனின் பேராசை,அதன் விளைவு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என்பதை இன்று வரை எந்த ஊடகமும் வெளியிடவில்லை. இதற்கு ஏன் என்ற காரணமும், இன்னமும் அரசும்,சுற்றுச்சூழல் வல்லுனர்களும், புவியியல் வல்லுனர்களும் ஏன்? இது குறித்த விளக்கம் தரவில்லை என்பதுதான் மிகப்பெரிய ஆச்சரியம்.
இதுவரையில் மலைகளில் நிலச்சரிவு என்பது இருந்ததில்லை. எப்போது மனிதன் மலையை சுற்றி மலையை உடைத்து வீடுகளை கட்ட ஆரம்பித்தார்களோ,இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
வயநாடு, திருவண்ணாமலை, மலை மலையாக இருக்க வேண்டும்.குளங்கள் குளமாக இருக்க வேண்டும்.ஏரிகள் ஏரியாக இருக்க வேண்டும். ஏரியில் வீடு கட்டி விட்டு தண்ணீர் வருகிறது,தண்ணீர் வருகிறது என்றால்,ஏரியில் தண்ணீர் வராமல் எங்கு வரும்?
பகுத்தறிவு பேச்சாளர்கள், பகல் வேஷ பேச்சாளர்கள்,ஓட்டுக்காக அரசியல் செய்து கொண்டு, எப்படியும் பேசிக் கொண்டு, எப்படியும் வாழ்ந்து கொண்டு இருக்கும் கூட்டங்களுக்கு, இந்த இயற்கையின் சட்டங்கள் தண்டிக்கும். இவர்களுடைய சட்டங்களைப் போல் அது மாற்றி எழுதாது.
அங்கே யாராயிருந்தாலும் ஒன்றுதான். ஐயோ நான் ஏழை,எனக்கு வீடு இல்லை, வேற வழியில்லாமல் வீடு கட்டிக் கொண்டேன். அதனால் எனக்கு சலுகை அளிக்க வேண்டும் என்றால் இயற்கை அளிக்காது. இங்கே மிகப்பெரிய கோடீஸ்வரனும் ஒன்றுதான்.பிச்சைக்காரனும் ஒன்றுதான்.அரசனும் ஒன்றுதான்,ஆண்டியும் ஒன்றுதான். அதற்குஎந்த ஜாதியும் இல்லை, எந்த மதமும் இல்லை.நீ யாராக இருந்தாலும் இயற்கையின் சட்டத்திலிருந்து ஒருவரும் தப்பிக்க முடியாது.
அதனால்,அரசாங்கம் உடனடியாக மலைகள், ஆறுகள்,ஏரிகள், பாதுகாக்க முன் வர வேண்டும். இனி,இது போன்ற இயற்கையின் பேரிடர் நாளுக்கு நாள் அதிகரிக்கும். இப்போதாவது அரசாங்கம் இதையெல்லாம் ஓட்டுக்காக அரசியல் பார்க்காமல்,அரசியல் கட்சிகள் மற்றும் இதில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல்,இயற்கைக்கு மதிப்பளித்து பேரிடர் வராமல் தடுப்பது அரசின் முக்கிய கடமை . ஆசிரியர்.