அதிமுக இரண்டாக உடையுமா? அல்லது பிரிந்தவர்களை எடப்பாடி ஒன்று சேர்ப்பாரா? அல்லது பிஜேபி தலைமையில் கூட்டணி அமையுமா? – விடை எடப்பாடி பழனிசாமி .

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மக்கள் அதிகாரத்தில் நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். அதிமுக இரண்டாக உடையுமா? அல்லது எடப்பாடி பழனிசாமி இவர்களை ஒன்று சேர்ப்பாரா? இப்படி பல கேள்விகளுக்கு விடை எழுத வேண்டிய காலகட்டத்தில், எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் நின்று கொண்டிருக்கிறார்.

இவர் நினைப்பது போல், அதிமுக வெற்றி பெறுமா ? என்பது புரியாமல் கூட்டத்தை காண்பித்து பேசிக் கொண்டிருக்கிறார். காசுக்காக கூட்டம் கூடுவது ,கூட்டத்தை காட்டுவது பெரிய வேலை அல்ல. மேலும், அவர்களெல்லாம் கொள்கைவாதிகளும் அல்ல. இவர்களை எல்லாம் எளிதில் விலைக்கு வாங்கி கொண்டு போய் கொண்டு இருக்கலாம். இது ஒன்றும் பெரிய விஷயமும் அல்ல.

இங்கே ஏதோ ஒரு கற்பனையில் அதிமுகவில் கொடி பிடிக்கிறார்கள். அதேபோல் ,திமுகவில் கொடி பிடிக்கிறார்கள். பிஜேபியில் அப்படி பிடிப்பவர்கள் மிகவும் குறைவு தான். அங்கே கொள்கைக்காக தான் கொடி பிடிப்பார்கள் . ஆனால் ,வேலை செய்ய மாட்டார்கள்.

மேலும், எடப்பாடி பழனிசாமி தோற்றாலும், ஜெயித்தாலும் நான் அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று அதே இடத்தில் நின்று கொண்டிருக்கிறார். இந்த கட்சியை நம்பி எத்தனையோ பேர் எம்எல்ஏவாக வேண்டும், எம் பி ஆக வேண்டும், மந்திரியாக வேண்டும் என்று கொடி பிடிக்கிறவர்கள் .கனவில் இருந்து கொண்டிருக்கிறார்கள். இதை எப்படி இவர் செய்வார்? இவரால் அது சாத்தியமா? ,மேலும்,

சோசியல் மீடியாவில் ஆளுக்கு ஒரு கருத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை என்னவோ,` மக்கள் அதிகாரத்தில் சொன்ன விஷயங்கள்தான் இப்போது நடைமுறைக்கு வரும் போல தெரிகிறது. இவர் சசிகலா ,டிடிவி தினகரன் ,ஓ பன்னீர்செல்வம், செங்கோடையன் ,இவர்களை எல்லாம் இணைக்கவில்லை என்றால் !

இன்னொரு புதிய அதிமுகவாக அது உருவாக்கி விடும் . அதுவும் களத்தில் நின்று ஜெயிக்கும். அந்த கட்சிக்கு பிஜேபி தலைமையில் சிறிய கட்சிகள் எல்லாம் ஒன்று சேரும். அப்போது எடப்பாடி பழனிசாமி ஜீரோவாக போகிறார்.

இவருக்கு இவர்களை சேர்த்தாலும் பாதிப்பு ,சேர்க்காவிட்டாலும் பாதிப்பு, இதுதான் எடப்பாடி நிலைமை. 2026 தேர்தல் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், தமிழ்நாட்டில் தேர்தல் களம் ஒரு கடுமையான போட்டி. யாரை யார்? எப்படி எல்லாம் திட்டிக் கொள்ளப் போகிறார்கள்? இனி வரும் அரசியல் ,மிக கேவலமாக இருக்கும் . திமுக எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்ற மனநிலையில் என்னவெல்லாம் பேசப்போகிறார்கள்? என்பது போகப் ,போக தெரியும் .

அதனால், மக்களுக்கு மாற்றத்தை கொடுக்க கூடிய ஒரு அரசியல் கட்சி தான் தேவை ! அது யார் கொடுப்பார்கள்? என்பதுதான் மிகப்பெரிய கேள்வி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *