அரசியலில் ஊழலுக்கு அர்த்தம் தெரியாமல்! மீண்டும் ஊழல்வாதிகளை ,தேர்வு செய்வது ,அது அவர்கள் அறியாமையா? அதன் பாதிப்பும், பின் விளைவும், மக்களின் வாழ்க்கை போராட்டங்கள்.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

அரசியலில் ஊழல் என்றால்! அர்த்தம் தெரியாதவர்கள், பல கோடி பேர் இருக்கிறார்கள். அதனால் தான் அரசியலில், மீண்டும்,மீண்டும் ஊழல்வாதிகள் பணத்தை கொடுத்து தேர்வு செய்யப்படுகிறார்கள்.There are crores of people who don’t know what corruption means in politics. That’s why in politics, corrupt people are elected again and again with money.

மேலும்,இந்த ஊழலுக்கு அர்த்தம் தெரியாமல், பல பேர் பத்திரிகைகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பல பத்திரிகைகளில் செய்தியாளர்களாக இருக்கிறார்கள். தவிர, படித்தவர்கள் இருக்கிறார்கள் ,பாமர மக்கள் இருக்கிறார்கள். அதை ஏன் எதிர்க்க வேண்டும்? என்று கூட தெரியாத பத்திரிகைகள் கூலிக்காக நடத்திக் கொண்டிருக்கிறார்கள், கூலிக்காக செய்தியாளர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லோருக்கும் சேர்ந்து தான் மக்கள் அதிகாரத்தின் இந்தப் பாடம். இதைப் பற்றி எந்த விமர்சனமானாலும் வரட்டும், கவலை இல்லை. உண்மையை சொல்ல வேண்டியது கடமை.Moreover, many people are running newspapers without knowing the meaning of this corruption. They are journalists in many newspapers. Besides, there are educated people and common people. Why should we oppose it? They are running newspapers for hire, and they are claiming to be journalists for hire. This lesson of makkal adhikaram media is shared by all of them. No matter what criticism comes about this, it doesn’t matter. It is our duty to tell the truth.

மேலும்,நாட்டில் ஊழல் என்பது ஏதோ ஐயாயிரம், பத்தாயிரம், ஒரு லட்சம், 10 லட்சம், 50 லட்சம் ஏன் ?அதிகபட்சம் ஒரு கோடி என்றே கூட வைத்துக் கொள்ளுங்கள் .இவை எல்லாம் ஊழல் அல்ல, அது லஞ்சம். இந்த லஞ்சத்தால் நாட்டுக்கும் ,நாட்டு மக்களுக்கும் , பெரிய பாதிப்பு ஏற்படுத்தாது. அது சிறிய அளவில் தான் பாதிப்பு .Also, why is corruption in the country something like five thousand, ten thousand, one lakh, 10 lakh, 50 lakh? Even if it is a maximum of one crore. All these are not corruption, they are bribery. This bribery does not cause any major harm to the country and its people. It only causes harm to a small extent.

ஆனால், அரசியலில் ஊழல் என்பது மிகப் பெரிய பொருளாதார பாதிப்பை மக்களிடம் ஏற்படுத்தி விடும். அதாவது, அந்தப் பணம் ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு, விலைவாசி உயர்வை ஏற்படுத்துவது மட்டுமல்ல, சமூகப் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவாகும். சமூகம் முன்னேற்றமே, ஒரு நாட்டின் முன்னேற்றம். அது அழிக்கும் போது, மக்கள் எப்படி பொருளாதாரத்தில் முன்னேறுவார்கள்? இதுதான் ஊழல்.But, corruption in politics can cause a huge economic impact on the people. That is, that money not only causes price increases for the poor, simple and middle class, but also causes socio-economic impact. As a result, employment for educated youth is a dream. Society is progress, the progress of a country. When it destroys, how will people progress economically? This is corruption.

மேலும்,ஒரு அரசு அதிகாரி லஞ்சம் வாங்கினால் கூட, எங்கேயாவது கொஞ்சம் சொத்து வாங்குவார்கள். இல்லை, நகை, நட்டு வாங்குவார்கள். அல்லது அவர்களுடைய பிள்ளைகளை படிக்க வைப்பார்கள். அல்லது கல்யாண செலவு செய்வார்கள் .எல்லாமே இங்கேயே அந்த பணம் சுற்றுகிறது.

ஆனால், அரசியலில் கொள்ளையடித்த பணம் ,இவர்கள் 100 கோடி ,500 கோடி ,200 கோடி, 1000 கோடி ,ஒரு லட்சம் கோடி ,50,000 கோடி ,என்று இந்தக் கோடிகளை எல்லாம் கருப்பு பணமாக வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் என்ன செய்ய முடியும்? செய்தால் மாட்டிக் கொள்வார்கள்.

அதனால், சட்டத்தை ஏமாற்ற என்ன வழி என்று தேடும் போது,வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று, அங்கு சொத்து வாங்கி போடுகிறார்கள் .வெளி மாநிலத்தில் சொத்து வாங்கி போடுகிறார்கள். வெளிநாடுகளில் தொழில் ஆரம்பிக்கிறார்கள். இங்கு கொள்ளையடிக்கப்பட்ட பணம் வெளிநாடுகளில் போய் சேர்ந்து விடுகிறது. அதனால், அது யாருக்கு பயன்? என்றால், அந்த நாட்டில் வாழக்கூடிய மக்களுக்கு அது பயன். இங்கே இருக்கின்ற மக்களுக்கு அது பயன் அளிக்காது.

மேலும்,இந்த கொள்ளையடித்த பணம் எங்கு பதுக்குகிறார்கள்? பதுக்கப் பட்ட பணம் உடனே வெளியில் வராது. அது வெளிநாடுகளிலே முதலீடு செய்யலாம் அல்லது அங்கிருந்து யாரையாவது ஏற்பாடு செய்து, அவர்கள் மூலம்,அந்த பணத்தை கொண்டு வந்து, இங்கே முதலீடு செய்யலாம் .இப்படி செய்யும்போது தான் அமுலாக்கத்துறை (enforcement directorate ) ED உள்ளே வருகிறது. அதுதான் பிரிவென்ஷன் ஆப் மணிலாண்டிரி ஆக்ட் (prevention of money laundry act) இந்த மோசடி செய்யும்போதுதான் இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைகிறது.

அதாவது ,இந்தியாவில் பணப் புழக்கத்தை நிறுத்தினால், என்ன ஆகும்? விலைவாசி உயர்வாகும். இதனால், பாதிக்கப்படுவது ஏழை, நடுத்தர மக்கள். ஒரு பொருளை பணக்காரன் என்ன விலை வேண்டுமானாலும், விலை கொடுத்து அதை வாங்கி சாப்பிடுவான் .ஆனால், ஏழையோ, நடுத்தர மக்களோ, குறிப்பிட்ட அளவுக்கு மேல், விலை உயர்ந்தால் அந்தப் பொருளை வாங்க முடியாது. உதாரணத்திற்கு ஒரு கிலோ தக்காளி ஆயிரம் ரூபாய் என்றால், எப்படி வாங்குவார்கள்? அவர்கள் வாங்க மாட்டார்கள்.That is, if the circulation of money in India is stopped, what will happen? Prices will rise. Due to this, the poor and middle class people will be affected. The rich will buy and eat an item at any price they want. But if the price rises beyond a certain level, the poor and middle class people will not be able to buy that item. For example, if a kilo of tomatoes costs a thousand rupees, how will they buy it? They will not buy it.

அப்போது பாதிப்பது யார்? இப்பவாவது இந்த ஊழலையும், ஊழல்வாதிகளையும் ஏன் எதிர்க்க வேண்டும்? நம்முடைய வாழ்க்கைக்கு பாதிப்பை உருவாக்குகிறது. மேலும்,ஊழலை சட்டத்தின் மூலம் சரி செய்ய சட்டத்தின் ஓட்டையை தேடுகிறார்கள். அந்த ஓட்டை சட்டத்தை வைத்து ,இவர்களுடைய ஊழலை நியாயப்படுத்த கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளுக்கு, அரசு மூலம் சலுகை, விளம்பரங்களை மக்களின் வரிப் பணத்திலே, கொடுப்பது தான் மிகப்பெரிய கொடுமை.

மேலும், நாட்டில் ஊழலுக்கு எதிராக போராடும் பத்திரிகைகளுக்கு , எவ்வித சலுகை விளம்பரமும்,கொடுக்காமல், ஒரு பக்கம் மக்களையும் ஏமாற்றி, சமூக நலன் பத்திரிகைகளையும் ,ஏமாற்றுவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.Furthermore, it is unacceptable to deceive the public and social welfare newspapers while not providing any preferential advertising to newspapers that fight against corruption in the country.

மேலும், எப்படி ஊழல்வாதிகள் சட்டத்தை ஏமாற்றுகிறார்களோ ,அதே போல் தான், இந்த சர்குலேஷன் சட்டம் பத்திரிக்கை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. இதை வைத்து, செய்தித் துறை அதிகாரிகள்,பத்திரிக்கை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ,Moreover, just as corrupt people cheat the law, this Circulation Act is cheating the journalism industry. Using this, the news department officials are cheating the journalism industry. ,

மேலும்,சிறிய பத்திரிகைகள், பெரிய பத்திரிகைகள் எதுவாக இருந்தாலும் சமூக நலன் சார்ந்த பத்திரிகைகள் அதில் எது? அதனால்தான், மக்கள் அதிகாரம் தொடர்ந்து செய்தித் துறையில் , காலத்திற்கு ஏற்ப நாட்டில் சட்டங்கள் மாற்றப்படாமல் இருப்பது, இதற்கெல்லாம் மிக முக்கிய காரணம் என்று வலியுறுத்துகிறது.Furthermore, whether it is small newspapers or big newspapers, which of them are social welfare newspapers? That is why People’s Power continues to emphasize that the failure to change the laws in the country in line with the times is the most important reason for all this.

மேலும்,இதைவிட ஒரு கொடுமை, நாட்டில் !ஊழல்வாதிகளை உடனே தண்டிக்க சட்டங்கள் கூட இல்லை. நீதிமன்றத்திற்கு சென்று அவர்களை பாதுகாக்கும் சட்டங்களாக தான் இருக்கிறது. எதற்கு நீதிமன்றம் செல்ல வேண்டும்? ஊழல் செய்த ஒருவரை ஏன் அமலாக்கத்துறை கைது செய்யக்கூடாது?Moreover, what is even worse is that there are no laws in the country to immediately punish corrupt people. There are only laws that protect them by going to court. Why should they go to court? Why can’t the Enforcement Directorate arrest a corrupt person?

இது தவிர, உடனே அவர்களை கைது செய்யாமல் ,,அவர்களை கைது செய்வதற்கு, 1008 கண்டிஷன், பெயில் ,அதற்கான சட்டப் போராட்டம்? இந்த சட்டப் போராட்டத்திற்கு நீதிமன்றம் செலவிடக் கூடிய நேரம், பணம், காவல்துறை செலவிடக் கூடிய நேரம், அதற்கான பணம்,அதற்குள் ,அந்த ஆட்சியே முடிந்து விடுகிறது.Apart from this, instead of arresting them immediately, what about the 1008 conditions, bail, and legal fight for their arrest? The time and money that the court could spend on this legal fight, the time and money that the police could spend on it, by then, that regime itself would be over.

மேலும்,மக்களுக்காக தான் கட்சியேத் தவிர, இவர்களுக்காக கட்சி என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதனால், எந்த கட்சியாக இருந்தாலும்,கைது செய்து உள்ளேவை. அவர்களுடைய ஊழல் சொத்துக்களை முடக்கி, அதில் ஒரு பைசா கூட, அனுபவிக்க முடியாமல் , செய்தால் தான் ஊழலை நாட்டில் ஒழிக்க முடியும். அதுவரை ஒழிக்க முடியாது.Moreover, they are deceiving the people by saying that the party is for them, not the people. Therefore, no matter which party it is, arrest them and put them in jail. Only by freezing their corrupt assets and making them unable to enjoy even a single penny of it can we eradicate corruption in the country. Until then, it cannot be eradicated.

மேலும், இந்த ஊழல்வாதிகளுக்கு அரசியலில் படிப்பு இல்லை, எந்த வேலையும் இல்லை ,எந்த தொழிலும் தெரியாது. ஆனால், பல ஆயிரம் கோடி சொத்து எப்படி அரசியலில் வந்தது? இவர்களை கணக்கு கேட்கக் கூடாது. கேட்டால் அவனை எதிர்க்கட்சி ஆக்கி விடுவார்கள். இல்லையென்றால், நக்சலைட் என்று சொல்லி விடுவார்கள்.Moreover, these corrupt people have no education in politics, no job, and no profession. But how did the wealth of thousands of crores come into politics? They should not be held accountable. If they are asked, they will make him an opposition party. Otherwise, they will call him a Naxalite.

இவ்வளவு திறமை பேச்சாளிகளை , அரசியல் கிரிமினல்களை, அரசியலில் மக்கள் மீண்டும் ,அவர்களை வெற்றி பெற செய்து, அவர்களுக்கு வாக்களிக்கக்கூடிய மக்கள் ,உண்மையிலே படித்தவர்களாக இருந்தாலும், படிக்காதவர்களாக இருந்தாலும், அவர்கள் ஒரு முட்டாள்களாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.The people who can make such talented orators, political criminals, win again in politics and vote for them, whether they are truly educated or uneducated, are living as fools.

மேலும்,யார் வந்தாலும் ,அப்படிதான் இருப்பார்கள் என்று நினைப்பதே ஒரு முட்டாள்தனம். ஒவ்வொரு மனிதனுக்கும், ஒரு தகுதி என்பது உண்டு. அந்தத் தகுதி ! அந்த நேர்மை!எந்த கட்சியில்? எந்த அரசியல்வாதிக்கு இருக்கிறது ?என்பதை தேர்வு செய்யக்கூடிய தகுதி இல்லாதவர்கள் தான் அப்படி பேசுவார்கள்.Also, it is foolish to think that whoever comes, will be the same. Every human being has a qualification. That qualification! That honesty! Which party? Which politician has it? Only those who do not have the ability to choose will speak like that.

மேலும்,இப்போது பொதுவெளியில் விஜய் தான் ,ஊழலுக்கு எதிரானவன் என்பதை பேசுகிறார். அரசியலுக்கு புதியது .ஆனால் ,பழையது அத்தனையும் ஓட்டை, உடைச்சலாக இருந்தால், எப்படி ஏற்றுக் கொள்வது? இன்றைய அரசியல் கட்சிகளில் ஊழல்வாதிகளாகவும் , இவர்களுக்கு பின்னால், நாட்டில் சமூகவிரோதிகள் அரசியல் கட்சியினர் போர்வையில் அதிகரித்திருக்கிறார்கள் அதுவாவது இந்த மக்களுக்கு தெரியுமா?Moreover, now Vijay is talking in public that he is against corruption. Politics is new. But if everything old is full of holes and brokenness, how can we accept it? Today’s political parties are corrupt, and behind them, anti-social political parties have increased in the country. Do these people even know that?

அரசியல் கட்சியினர் போர்வையில், இன்றைய பொது மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கி இருக்கிறது. அவர்கள் தான் அரசியல் தனக்குப் பின்னால் இருக்கிறது என்று கற்பழிப்பு, பாலியல் வன்கொடுமை ,கொலை , சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பாதுகாப்பு இன்மை, கஞ்சா பழக்கம், போதைப்பொருள் புழக்கம்,மக்களின் வாழ்க்கை போராட்டங்கள் ,சட்டப் போராட்டங்கள், அனைத்திற்கும் காரணம் இதுதான். ஆய்வு செய்து பாருங்கள். உண்மை உங்களுக்கே புரியும்.Under the guise of political parties, they have created a huge impact on the common people of today. They say that politics is behind them, and this is the reason for all the rape, sexual assault, murder, law and order problems, lack of security, cannabis addiction, drug trafficking, people’s struggles for life, legal struggles. Do your research. You will understand the truth.

மேலும், ஊழல் என்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் ,சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியும் ,அழிக்கக் கூடிய வேலையை செய்து கொண்டு, எப்படி மக்களுக்கு நல்லது செய்வார்கள்?Furthermore, how can they do good for the people by doing work that can destroy the economic development of the country and the economic development of society?

மேலும்,இவர்களை நியாயப்படுத்தும் பத்திரிகை, தொலைக்காட்சிகள் , இதுதான் அரசின் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகைகளா? ஊழலை நியாயப்படுத்தவும், இவர்களுடைய தவறுகளை நியாயப்படுத்தவும் அரசின் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகைகளா? இதற்கு தான் அரசின் சலுகை, விளம்பரங்களா?இதுவாவது புரிகிறதா? இதுதான் பெரிய பத்திரிகையா? இதில் என்ன பெரிய பத்திரிக்கை ?சிறிய பத்திரிக்கை?Also, the newspapers and televisions that justify these people, are these government-approved newspapers? Are these government-approved newspapers that justify corruption and justify their mistakes? Is this what government concessions and advertisements are for? Do you understand this at least? Is this a big newspaper? Which is a big newspaper in this? A small newspaper?

மேலும்,மக்களின் அறியாமை, அலட்சியம் ,இப்படிப்பட்ட அரசியல்வாதிகளால், உங்களுடைய எதிர்காலம் , உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம்,அழித்துக் கொண்டிருக்கிறது.Furthermore, the ignorance and indifference of the people, and the politicians like this, are destroying your future, the future of your children.

எனவே, மக்கள்,ஊழல் வழக்கு உள்ளவர்களையும், ஊழல்வாதிகளையும், தேர்வு செய்தால், அது எவ்வளவு பெரிய தவறை செய்து கொண்டிருக்கிறார்கள்? என்ற உண்மை இப்போதாவது புரிகிறதா?So, do people now understand the truth of how big a mistake they are making if they elect people with corruption cases and the corrupt?

மேலும்,இவர்களை தேர்தலில் நிற்க தேர்தல் ஆணையம் எப்படி அங்கீகரிக்கிறது? அதுவே, ஒரு தவறான சட்டம். இது பற்றிய முந்தைய செய்தி ,தேர்தல் ஆணையத்திற்கு இமெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.Also, how does the Election Commission approve these people to stand in the elections? That is a wrong law. The previous news about this has been sent to the Election Commission via email. What action will they take? Let’s wait and see.

மேலும்,தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் வறுமையும் ஏழ்மையும் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால் ,அந்த வாய்ப்பை உருவாக்கி ஓட்டுக்கு லஞ்சம் கொடுத்தால் ,இவர்கள் நமக்கு தொடர்ந்து வாக்களிப்பார்கள். இதுதான் இன்றைய திமுகவின் அரசியல். உழைப்பவனை முன்னேற்றுவதற்கு தான் அரசியல் தேவை.Moreover, there is no chance for poverty and destitution in Tamil Nadu and India. But, if we create that chance and bribe them for votes, they will continue to vote for us. This is the politics of today’s DMK. Politics is needed to advance the working class.

ஆனால், இன்று அரசியல் அதற்கு நேர் எதிர் மாற்றாக அதாவது,ஊரை ஏமாற்றுபவனையும், இவர்களுக்கு கொடி பிடித்துக் கொண்டிருப்பவனையும், முன்னேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.But, today, politics is promoting the exact opposite, that is, those who deceive the people and those who hold the flag for them.

இப்போதாவது மக்களுக்கு ஊழலின் அர்த்தம் புரிகிறதா? அதன் பின் விளைவும் ,பாதிப்பும் புரிகிறதா? எதற்காக ஓட்டுக்கு, பணமும், இலவசமும் கொடுக்கிறார்கள்? என்பது புரிகிறதா? புரியாமல் வாக்களித்தால் மீண்டும் உங்களுடைய முன்னேற்றம் இருக்காது. அவர்களுடைய முன்னேற்றம் தான் இருக்கும். என்பதை சிந்தித்து வாக்களியுங்கள்.Do people now understand the meaning of corruption? Do they understand the consequences and effects of it? Why do they give money and freebies for votes? Do they understand? If you vote without understanding, you will not see any progress. Only their progress will. Think about this and vote.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *