
அரசியல் கட்சிகள் ஜாதி மத மதச்சார்பின்மை கொள்கையை பேசி பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஒரு அரசியல் ! – மக்கள் விழித்துக் கொள்வார்களா?
நாட்டில் மதச்சார்பின்மை கொள்கை என்று சொல்லி மக்களை ஏமாற்றும் அரசியல் கட்சிகள், இதுவரை அது பற்றி உண்மையான மதச் சார்பின்மையை ஒரு அரசியல் கட்சிகள் கூட தமிழ்நாட்டில் கடைபிடிக்கவில்லை.

மேடையில் பேசுவதற்கும் ,நடைமுறைக்கும் சம்பந்தமே இருக்காது. இவர்கள் பேட்டி கொடுப்பதற்கும் ,செயல்படுவதற்கும் சம்பந்தமே இருக்காது .

அந்த வகையில் பிஜேபி தன்னுடைய கொள்கையை வெளிப்படையாகவே சொல்லி, செயல்பட்டு வருகிறது. அதில் தவறு கிடையாது. நாங்கள் எல்லா மதத்தையும், மதிப்போம் .அதே சமயத்தில் இந்துக்களுக்கு ஆதரவாக இருப்போம் .அதில் எந்த தவறும் கிடையாது.
ஆனால், காங்கிரஸ் கட்சி ,திமுக, கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள், போன்ற அனைத்தும் மதச்சார்பின்மை கொள்கை என்று வாய் கிழிய பேசுவார்களே ஒழிய, அதன்படி இதுவரை நடக்கவில்லை.

பேசுவதற்கும் செயல்படுவதற்கும் இவர்கள் சம்பந்தமே இதுவரை இருந்ததில்லை. காங்கிரஸ் கட்சி மதச்சார்பின்மை என்று சொல்லி கொண்டு, முஸ்லிம்களின் மதம் சார்ந்த கட்சியாக இருந்து வருகிறது. சொல்லப்போனால் இது முஸ்லிம்களின் பி.டீம் என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த அளவுக்கு இவர்களுக்குள் மறைமுக ரகசிய மத ஒற்றுமை உள்ளது. இது இன்று, நேற்றல்ல, நேருவின் காலத்தில் இருந்து தொடர்கதையாக வருகிறது.அதேபோல் திமுக கடவுள் மறுப்பு கொள்கை சொல்வார்கள், நூற்றுக்கு 99 .9 % கடவுளை வணங்கிக் கொண்டிருப்பார்கள். கேட்டால் அது வேறு ,இது வேறு,

இது அத்தனைக்கும் யார் காரணம்? கார்ப்பரேட் பத்திரிகை ,தொலைக்காட்சிகள் தான் இதை நியாயப்படுத்தி மக்களிடம் செய்தியாக வெளியிட்டுக் கொண்டு வருகிறார்கள்.மேலும்,அதில் அவர்கள் எவ்வளவு பொய் வேண்டுமானாலும், சொல்லிக் கொள்ளலாம். அது அத்தனையும் செய்திதான், இதுவும் செய்தி துறை !சர்குலேஷன் என்று ஏற்றுக் கொள்வார்கள். மேலும்,
அது எல்லாம் உண்மை ஏனென்றால் !பணக்காரன் பத்திரிகைகள், பணக்காரன் உடைய தொலைக்காட்சிகள், நாட்டில் பணக்காரன் பேசினால் ,அது உண்மை. அதுவே சாமானிய மக்கள், பேசினால் அது உண்மையில்லை.

மேலும்,அறிவு சார்ந்த ஊடகத்துறையிலே இப்படிப்பட்ட ஒரு ஏற்றத்தாழ்வு செய்தித் துறையில் இருப்பது கேவலமானது. இந்த,சமூக நீதிக்காகத் தான் பத்திரிக்கை துறையில், சமூகநலன் பத்திரிகைகள் போராடிக் கொண்டிருக்கிறது. மக்களின் வரிப்பணம் கார்ப்பரேட்டுக்கு மட்டுமே என்று செய்தித் துறையில் பட்டா போட்டு வைத்திருக்கிறார்கள்.

நேற்று முன் தினம் எனக்கு வேண்டிய ஒரு நீதிபதியிடம் இது பற்றி விவாதித்தேன். அப்போது அய்யா நீங்கள் தற்போது ஓய்வு பெறவில்லை என்றால், இந்த செய்தி துறையை நிச்சயம் இதற்கான பதில் சொல்ல உங்களிடத்தில் கொண்டு வந்து நிறுத்திருப்பேன். இருப்பினும், இப்போதும், அவருடைய செல்வாக்கு நீதித்துறையில் எப்போதும் இருக்கிறது.

மேலும்,மக்கள் பணத்தை வைத்து அரசியலில் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். பணக்காரர்களை வைத்து அரசியல் என்று ஏமாந்து கொண்டு இருக்கிறார்கள். அதே போல் தான், செய்து துறையில் கார்ப்பரேட்டை நம்பி தான் மக்கள் இருக்கிறார்கள் என்று செய்தித் துறையின் நம்பிக்கையாக இருக்கிறது.

காரணம் இவர்களுக்கு விளம்பர ஊடகங்கள் தான் தேவை! மக்களுக்கு உண்மையான செய்தி ஊடகங்கள் தரம் பிடிக்காத வரை செய்தித் துறையில் இப்படிப்பட்ட உள்ளடி மோசடி வேலைகள் தொடர்கதையாக தான் இருக்கும்.

எப்படி அரசியல்வாதிகள் கொள்கை என்று பேசிவிட்டு, கொள்கைக்கும், பேசுவதற்கும் சம்பந்தம் இருக்காது .அதே போல் தான் இந்த கார்ப்பரேட் பத்திரிகையின் வியாபார நிறுவனங்கள் ,செய்தி தன்மையை நடுநிலையான உண்மையை பிரதிபலிக்காது.
மேலும், இந்த அரசியல் கட்சிகள் ஏதோ மக்களுக்கு தினந்தோறும் படி அளப்பது போல ,அரசியல் கட்சியினர் பேசிக் கொண்டிருப்பார்கள். அதையும் முட்டாள்கள் கேட்டுக் கொண்டு , தான் இருப்பார்கள். தவிர,அவர்கள் போடும் ரீல்ஸ் youtube களையும், சோசியல் மீடியாக்களை வரும் செய்திகளையும், பார்த்துக் கொண்டு, பொழுது போக்கிக் கொண்டிருப்பது வாடிக்கையாகிவிட்டது.

அவர் சொன்னார் ,இவர் சொன்னார், அவர் இப்படி சொன்னார், அப்படி சொன்னார், இதுவும் செய்தி .அதனால், மக்கள் அரசியலில் ஏமாறுவதற்கு, ஏமாற்றுவதற்கு, எவ்வளவு பேர் துணை நிற்கிறார்கள்? என்பதுதான் இனியாவது பொதுமக்கள் சிந்திப்பார்களா?
