
பத்திரிக்கை துறையில் அரசியல் பின்னணியை வைத்து தானும் பத்திரிகை என்று கணக்கு காட்டும் பத்திரிக்கைகள் பத்திரிக்கை துறையை ஏமாற்ற முடியுமா? முடியும், அது எப்படி என்றால்?

கடந்த காலங்களில் ,அதிமுக, திமுக ஊழல் ஆட்சியில்! தகுதி பற்றியோ, தரத்தை பற்றியோ, செய்தி பற்றியோ, எதுவும் கவலைப் பட்டதில்லை. காரணம் ,தவறை மூடி மறைக்க வேண்டும். மக்களிடம் தெரியப் படுத்தக் கூடாது.

தவிர, மக்களுக்கு உண்மை தெரியாமல் இருந்தாலே, அவர்களுக்கு பன்மடங்கு லாபம். ஏனென்றால், திருடன் நல்லவனாக மக்களிடம் நடிக்க வேண்டும் என்றால் இப்படிப்பட்டவர்கள் தான் தேவை! கொள்ளையடிப்பவன் நல்லவனாக நடிக்க வேண்டும் என்றால், இப்படிப்பட்ட பத்திரிகைகளும், பத்திரிகையாளர்களும் தான் தேவை. நேர்மையான ஆட்சி மக்களுக்கு கொடுப்பவர்கள் தான் இதைப் பற்றி சிந்திப்பார்கள்.

எனவே ,யாரெல்லாம் அதற்கு தகுதியானவர்கள் ?என்று தேர்வு செய்து திமுக, அதிமுக ஆட்சியில் மக்களுடைய வரிப்பணத்தை அப்படிப்பட்ட பத்திரிக்கை, தொலைக்காட்சிகளுக்கு வீணடித்துக் கொண்டிருந்தார்கள்.
தவிர, அரசியல் கட்சியினருக்கும், இந்த உண்மைகள் தெரிய வாய்ப்பில்லை. நேற்று கூட, அதிகாரிகளிடம் நீங்கள் தான்,இந்த உண்மையை புரிய வைத்தால் தான், அவர்களுக்கு தெரியும். மேலும்,அவர்களாக இதை விரும்பி படித்து ஆய்வு செய்து எடுக்க மாட்டார்கள்.

தவிர,அவர்களுடைய அரசியல் நோக்கம் வேறு, பத்திரிக்கை பற்றி தெரிந்ததெல்லாம்,நம்முடைய செய்தி வந்தால் போதும், நம்முடைய போட்டோ வந்தால் போதும், நாம் பேசியது வந்தால் போதும், இவ்வளவுதான். இந்த போட்டோ சூட் வேலைகளைப் பார்ப்பவர்கள் தான் ,இன்றைய பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையாளர்கள்.

மேலும், இது கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு இது எளிதான வேலை. அதேபோல், கணக்கு காட்டும் போலி பத்திரிக்கை கூட்டத்திற்கும், இதை பார்த்து ,காப்பியடித்து, அதுவும் எளிதான வேலை. அதனால்தான்,அவர்கள் அரசியல் பின்னணியை தேடிக்கொண்டு, ,பத்திரிகை என்று பத்திரிக்கை துறையை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள். அது மட்டுமல்ல,

கடந்த கால திமுக ,அதிமுக ஆட்சியின் ஆட்சியாளர்கள்,நடிப்பையும் , வசனத்தையும், அரசின் செய்திகளாக கார்ப்பரேட் பத்திரிகைகள், விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இந்த விளம்பரத்தால் மக்களுக்கு என்ன பயன்?
இது தவிர, ஒவ்வொரு அரசியல் கட்சி சார்ந்த பத்திரிகைகளும் பத்திரிகை என்று எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? பத்திரிக்கை என்றால்! நடுநிலை மற்றும் தவறுகளை சுட்டிக் காட்டும் பணி. ஆனால், இங்கே கட்சி பத்திரிக்கையும், சலுகை ,விளம்பரங்களை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் செய்தித் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நிச்சயம் மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மத்திய, மாநில அரசின் செய்தி துறைக்கு முடிவுரை எழுதும் காலம் விரைவில் நெருங்குகிறது.

மேலும், இவர்கள் ஊழலுக்கு துணை போய்க் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான்,மக்களிடம் இந்த ஆட்சியாளர்களை நல்லவர்களாக காட்டிக் கொண்டிருப்பது தான் பத்திரிக்கை வேலையா ?இல்லை பத்திரிகை சுதந்திரமா? இல்லை, அந்தந்த பத்திரிகைகளின் சுயநலமா?

மேலும்,மக்களுக்கு அரசியல் தெரியாத காரணத்தால் ,இவர்கள் எழுதிக் கொண்டிருப்பதெல்லாம் ஒரு காலத்தில் எழுத்துக் கூட்டி படிக்கும் மக்கள், படித்துக் கொண்டிருந்தார்கள். அது ஆட்சியாளர்களுக்கும் லாபம் , தினசரி பத்திரிகை என்று வெளிவந்து கொண்டிருந்த பத்திரிக்கைகளுக்கும் லாபம்.

இன்று பத்திரிக்கைத் துறை கால மாற்றத்தால், அது மக்களிடையே செல்போனே பத்திரிக்கையாக மாறி விட்டது. யாரும் பத்திரிகைகளை வாங்கி படிப்பதில்லை. இருப்பினும் அதே சர்குலேஷன் சட்டம் செய்தித் துறையில் இருப்பது தான் வேதனை.

மேலும், இப்படிப்பட்ட பத்திரிகை செய்திகளால், மக்களுக்கு மட்டுமே அது நஷ்டம் . அந்த நஷ்ட கணக்கை தான் ,திமுகவுக்கு, மக்கள் கொடுத்த தீர்ப்பு . இந்த மாற்றத்தை கொடுத்ததில் ,சமூக நலன் பத்திரிக்கைக்கு, முக்கிய பங்கு உண்டு. இருப்பினும், பத்திரிக்கை துறையில் போலிகள் அதிகரித்து விட்டது. சோசியல் மீடியாவில் பேசக்கூடியவர்களும், நானும் பத்திரிகையாளர்கள் என்கிறார்கள். இல்லையென்றால் ,நாங்கள் சமூக ஆர்வலர்கள் என்று பேசி விடுகிறார்கள்.

தவிர,பத்திரிக்கைக்கு அர்த்தம் தெரியாதவர்கள் எல்லாம், இன்று பத்திரிக்கை என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிக்கை ஒரு சமூகத்திற்கு தான் பத்திரிக்கையே தவிர, தனி மனித ஒழுக்கத்தின் குற்றம் குறைகளை சொல்வதற்கு பத்திரிக்கை தேவையில்லை . மேலும்,சிறிய பத்திரிகைகளில் அதிகப்படியான போலிகள், காப்பி அடித்து கணக்கு காட்டி, நானும் பத்திரிகை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதைதான் அதிகாரிகளிடம் பேசினேன்.
இது தவிர,ஒரு பத்திரிகையின் தரம், அது சமூக நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். மக்கள் அதற்கு எந்த அளவுக்கு அந்த பத்திரிகையின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்? என்பது பார்வையாளர்களை வைத்து இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும்,இன்று கார்ப்பரேட் நிறுவனங்கள் ,இவர்களுடைய செய்திகளை மார்க்கெட்டிங் செய்கிறார்கள். அதாவது மக்களிடம் அதை தள்ளி விடுகிறார்கள். அப்போதும் இணையதளத்தில் படிப்பவர்கள், தேவை இருந்தால் மட்டுமே ,அதை கை வைப்பார்கள். இப்போது புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். இணையதளத்தில் படிப்பவர்கள் எழுத்துக் கூட்டி படிப்பவர்கள் அல்ல.மேலும்,

இந்த போலிகளும், ஒரிஜினல் போன்று இமிடெட் செய்வது அல்லது காப்பி அடிப்பது அல்லது சமூகத்தையும், பத்திரிக்கை துறையும், ஏமாற்றுவது, இது தான் தொடர்ந்து இந்த போலிகள் செய்தித் துறையில் ஐ.டி (ID card) கார்டுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இதைத்தான் நேற்று செய்தித் துறை அதிகாரியிடம் பேசும்போது, அவர் கேட்டார் .உங்களுக்கு என்ன? ஐடி கார்டு தானே ,நான் சொன்னேன், இந்த ஐடி கார்டு கொடுத்து நான் பத்திரிக்கையாளன் என்ற அங்கீகாரம் எனக்கு தேவையில்லை. மக்கள் கொடுத்த அங்கீகாரம் இருக்கிறது என்றேன் .
மேலும்,என் மீதும், பத்திரிக்கையின் என் மீதும் ,எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கை தான் இன்று மக்கள் அதிகாரம் இணையதள பத்திரிக்கையில் ,ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இருக்கிறார்கள். தவிர மக்கள் அதிகாரம், இணையதளத்தில் (marketing)செய்திகளை எவ்வித வியாபாரமும் செய்வதில்லை. அப்படி இருந்தும், மக்களிடம் இருந்து வந்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது.

மேலும், இணையதளத்தில்,பத்திரிக்கையை படிப்பவர்கள் ,எழுத்துக் கூட்டி படிப்பவர்கள் அல்ல. அவர்கள் எல்லாம் ஒரு நாலெட்ஜ் அபுல் பர்சன் (knowledgeable person, educated person, political person, officials, teachers,students ,journalists, cine artist, and cine fielders , Central and state intelligent department) இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். மேலும், அவர்கள் ஒரு தடவை செய்திகள் தரமில்லை யென்றால் அந்த இணையதளத்தை விரும்பி படிக்க மாட்டார்கள். காப்பி அடித்துப் போட்டாலும் ,கண்டுபிடித்து விடுவார்கள்.

தவிர,பத்திரிக்கை துறையில் பத்திரிக்கை நடத்துபவர்களுக்கே செய்திக்கும் ,நடந்த சம்பவங்களுக்கும், வித்தியாசம் தெரியாமல் ,செய்தித் துறையில் PRO க்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.(அது just in information ) அவ்வளவு தான் இதை சொல்லக்கூடிய தினசரி பத்திரிகை எல்லாம் இன்று பெரிய பத்திரிக்கையாக பத்திரிக்கை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. இது தவிர, அரசியல் கட்சி செய்திக்கும், மக்களுக்கான செய்திகளுக்கும் அர்த்தம் தெரியாமல் செய்தித் துறை இருந்து வருகிறது.இதற்கு காரணம் செய்தித்துறையில் பணியாற்றக்கூடிய பெரும்பான்மையான அதிகாரிகளுக்கு இதற்கு வித்தியாசம் தெரியவில்லை.

மேலும், இதையெல்லாம் ஐஏஎஸ் அதிகாரிகள் ஏற்றுக் கொள்கிறார்கள் இதில் உள்ள உண்மையை சொன்ன உடனே புரிந்து கொள்கிறார்கள். ஆனால், இவர்களுக்கு அது இன்னும் புரியவில்லை. காரணம் ,அரசியல் கட்சி பின்புலத்தில் இருந்து வந்தவர்கள். ஒவ்வொரு கட்சிக்கும் ,ஒவ்வொரு கொள்கை இருக்கும். அவர்களுக்கு ஏற்றார் போல், பத்திரிக்கை நடத்த முடியாது. அவர்கள் சொந்த பத்திரிக்கை நடத்திக் கொள்ள வேண்டியது தான்.

மேலும், இன்றைய காலம்! இணையதளத்தின் காலம்! நேற்று கூட ஒரு துறையின் இயக்குனரிடம் இது பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அவரும் இதைப்பற்றி கருத்து தெரிவித்துக் கொண்டு இருந்தார். அப்போது அவர் பேசும் போது,அவருடைய துறையில் அந்த சப்ஜெக்ட் (subject ) விஷயத்தைப் பற்றி பேசும்போது, நான் குறைந்த நேரத்தை தான் எடுத்துக் கொள்வேன். காரணம்!

எல்லோரும் செல் போஃன் நோண்ட ஆரம்பித்து விடுவார்கள். அதனால் என்னுடைய துறை சார்ந்த சப்ஜெக்ட் கொடுக்கும்போது அந்த பணியாளர்களுக்கு 10 to 12 நிமிடம் தான் எடுத்துக் கொள்வேன். இல்லை என்றால், அவர்கள் செல் போஃன் நோண்டிக் கொண்டு, இருப்பதை பார்க்கும் போது, நாம் பேசுவதை அலட்சியப் படுத்திக் கொண்டிருப்பார்கள். அதனால் தான் நான் அதிக நேரம் பேசுவதில்லை.

இதை ஏன் சொல்கிறேன் என்றால்?அந்த அளவுக்கு இணையதளம் மக்களிடம் சென்று விட்டது. அப்படி இருக்கும்போது, இந்த இணையதளத்தின் முக்கியத்துவத்தை, மத்திய மாநில அரசின் செய்தி துறை! இன்னும் புரிந்து கொள்ளாமல் இருப்பது, வெட்கக்கேடானது, வேதனையானது. மேலும்,இங்கே இணையதளத்தின் பார்வையாளர்களை மார்க்கெட்டிங் செய்து ,மக்களிடம் தள்ளிக் கொண்டு இருக்கிறார்கள். அதுவும் ஒரு போலியான கணக்கு. மேலும்,

அதேபோல் இந்த கார்ப்பரேட் பத்திரிகை நிறுவனங்கள் சர்குலேஷன் என்று பத்திரிகை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் அதிகாரிடம் கேட்டேன் .எது? சர்குலேஷன்?நீங்கள் பத்தாயிரம் காப்பி அடிப்பதா? அல்லது அந்த பத்தாயிரம் பிரதிகள் விற்பதா? எது? பதில் சொல்ல முடியவில்லை.

மேலும்,பணமிருந்தால் ஒரு லட்சம் பிரதிகள் கூட அச்சடிக்கலாம்.ஒரு லட்சம் என்ன? 10 லட்சம் பிரதிகள் கூட அடிக்கலாம். ஆனால் , அது விற்பனையானால் தானே, அந்த செய்திகள் மக்களிடம் போய் சென்றடையும். அதுதான் சர்குலேஷன் என்றேன். மேலும், பத்திரிக்கை விற்காமல் ,அது திரும்பி வந்தால், எங்கே போகும்? குப்பைக்கு தான் போகும். அ!து எப்படி சர்குலேஷனில் கணக்கு வரும்? இந்த விஷயம் அதிகாரிக்கு தெளிவாக புரிந்து விட்டது.

இதிலிருந்து எது போலி? எது உண்மை ? எது தகுதியான பத்திரிக்கை என்பதை அவர்கள் பிரித்து எடுத்துக் கொள்ளலாம். உண்மை பத்திரிக்கை துறைக்கும், மத்திய மாநில அரசின் செய்தித்துறை அதிகாரிகளுக்கும், புரிந்தால் சரி .
