
எடப்பாடி பழனிசாமி கருத்துக்கணிப்புகளை நம்பி இருக்காமல், வேட்பாளர்களின் தேர்வு மிக மிக முக்கியமானது.
மேலும், தமிழ்நாட்டில் என். டி .ஏ கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும், வேட்பாளர்களின் தேர்வு என்பது மிகவும் மக்களிடம் செல்வாக்கு உள்ளவர்களாகவும், அவர்களை மக்கள் அணுகக் கூடியவர்களாகவும், உள்ள வேட்பாளர்கள் அவசியமானது.

அடுத்தது இந்த வேட்பாளர்கள் ஏற்கனவே, ஊழல் வழக்கு உள்ளவர்கள் ,ஊழலில் சிக்கி இருப்பவர்கள், பலமுறை தோல்வி கண்டவர்கள் மற்றும் போன முறை தோல்வி கண்டவர்கள், இவர்களுக்கு எல்லாம் சீட்டு கொடுத்தால் ,நிச்சயம் அது அதிமுகவாக இருந்தாலும் சரி ,,பிஜேபியாக இருந்தாலும் சரி, ,அவர்களுடைய வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாக தான் இருக்கும்.

மேலும், எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா இருந்தது போல் இவரால் தேர்தலை எதிர்கொள்ள முடியாது. காரணம் ஜெயலலிதாவின் செல்வாக்கு வேறு, எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு வேறு, அதனால் ,ஜெயலலிதா நினைப்பில் இவர் தேர்தல் வியூகத்தை வகுக்கக் கூடாது.
தவிர, அதே போல் வேட்பாளர்களை நிறுத்தக்கூடாது. ஒரு முறைக்கு பலமுறை, தகுதியானவர்களையும், மக்கள் பணிக்கு மற்றவர்களையும் ,தேர்வு செய்து தொகுதியில் வேட்பாளராக நிற்க வைக்க வேண்டும்.மேலும்,

பணம் இருக்கிறது என்று நிற்க வைத்தீர்களானால், நிச்சயம் அது அதிக தோல்வியைத் தான் ஏற்படுத்தும் . அது மட்டுமல்ல,ஒரு சில வேட்பாளர்களிடம் பணம் இருக்காது .
நீங்கள் செலவு செய்து அவர்களுடைய மக்கள் செல்வாக்கை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதனால், இந்தத் 2026 தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு எல்லோருக்கும் கடுமையான போட்டித் தேர்தல்,
அதனால்,ஒரு தடவைக்கு, பல தடவை யோசனை செய்து ஒவ்வொரு வேட்பாளரையும் களம் இறக்க வேண்டும். பதவி இருக்கும் வரை பணத்தை சம்பாதித்துக் கொண்டு, போனவர்கள் எல்லாம் மீண்டும் அதிமுகவில் பதவிக்கு வர துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை தவிர்ப்பது நல்லது.

மேலும், அதிமுகவுக்கு எதிர்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. சசிகலாவும், ராமதாசும் ஒரு தொகுதிக்கு 5000 ஓட்டாவது பிரிக்க வேண்டும் என்ற ஒரு டார்கெட் வைத்து செயல்பட இருப்பதாக தகவல் .இதை முறியடிக்கும் விதத்தில் உங்களின் வேட்பாளர்கள் தேர்வு மிக அவசியமானது. எத்தனையோ பேர் ஆயிரம், இரண்டாயிரம், வாக்குகளில் தோல்வியை காணக்கூடிய நிலைமை ஏற்படும். கடந்த முறையும் இதே போல் நடந்துள்ளது.
மேலும்,ஓ .பன்னீர்செல்வம் உங்களுக்கு எதிராக கடும் முயற்சியில் ஈடுபடுவார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதனால், நீங்கள் போடுகின்ற வேட்பாளரின், வீக் பாய்ண்ட்களை,(weak point) மக்கள் மத்தியில் எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து அதை கொண்டு செல்வார்கள்.

இது தவிர, அதிமுக, பாமக கட்சியினர், நகரங்களிலும் கிராமங்களிலும் செய்து சேவைகளை பார்த்து வாக்களிக்கும் நிலையில் மக்கள் இல்லை. அந்த அளவுக்கு நல்லது செய்து இருக்கிறார்கள். இப்போது மக்கள் ஆட்சி மாற்றம் தேவை என்ற ஒரே நோக்கத்திற்காக தான் மாற்றி வாக்களிப்பார்கள். அதிலும்,அந்த மாற்றம் அதிமுக, திமுகவுக்கு எதிரான வாக்குகள் விஜய்க்கு தான் முதலிடம்.

எனவே, என்.டி .ஏ கூட்டணியில் வேட்பாளர்கள் தேர்வு! வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் இடத்தில் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டால் சரி.