
நாட்டில் மக்களுக்கு அரசியல் தெரியாது என்று எப்படியும் பேசலாம் என்று திமுகவின் ஏ.வ.வேலு மற்றும் முன்னாள் சில அமைச்சர்களும், திமுக எம்எல்ஏக்களும், பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஊழல் செய்வது எப்படி ?என்று இவர்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். ஊழல் செய்த பணத்தை எப்படி பதுக்க வேண்டும்? என்று இவர்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஊழலின் ஊற்றே திமுக! என்று பேசும் அளவுக்கு மக்கள் இருக்கும்போதே, இந்த ஏ.வ. வேலுக்கு ஊழல் என்றால், ஒன்றுமே தெரியாது. அதனால்தான் இவர் ஒரு 15 கல்லூரிகளுக்கு முதலாளியாக இருக்கிறார். என்று மக்கள் பேசுகிறார்கள். அது பினாமி பெயரில் எத்தனையோ? யாருக்கு தெரியும்? இந்த பினாமிகளுக்கு எப்படி வந்தது இந்த சொத்து என்றால் எல்லாம் ஆட்டம் கண்டுவிடும்? மேலும்,

இவர் எல்லாம் அவருடைய அப்பா தாத்தா வழியில் சம்பாதித்த பரம்பரை சொத்துகளா? மக்கள் தான் இப்பொழுது கேள்வி கேட்கிறார்களே அதற்கென்ன இவர்களுடைய பதில்? மேலும்,சாதாரண ஒரு கிராமத்தில் கூட ஒரு கிராம பஞ்சாயத்து தலைவன் சொத்துக்களை சம்பாதித்தால் அவனைப் பற்றி, அந்த ஊரில் பேசாதவர்களே இருக்க மாட்டார்கள். அதுவும் கிராமங்களில் ஆடு ,மாடு, மேய்ப்பவன் முதல் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

அவன் பத்து ரூபாய் திருடினால் 100 ரூபாய் என்பார்கள். இங்கே கண்ணுக்குத் தெரிந்து ஊழல் வழக்குகள் பதியப்பட்டு வந்தாலும், அதை எல்லாம் நாங்கள் சட்டரீதியாக எதிர்ப்போம் ,சட்ட ரீதியாக எதிர்கொள்வோம், ஏனென்றால்! இவர்கள் சட்டப்படி திருடியிருக்கிறார்களா? சட்டப்படி கொள்ளை அடித்திருக்கிறார்களா? என்று அர்த்தமா?

இது எங்கே சட்டத்தில் ஓட்டையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால்? இவர்களுடைய ஆடிட்டர்கள் தான் ஓட்டையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆடிட்டர்களையும் , சட்டத்தின் வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும்.

அப்போது தெரிந்துவிடும் இவர்களுடைய பொய் கணக்கு! எந்த அளவுக்கு காட்டுகிறார்கள் ?என்பது மக்களுக்கு தெரிய வரும் உண்மை. மேலும், ஒரு தொழில் செய்தால் அல்லது ஒரு வேலைக்கு போனால் எவ்வளவு வருமானம் வரும்? தொழில் செய்யும்போது போட்ட முதலீட்டுக்கு ஏற்றவாறு அதில் ஒரு 10 லிருந்து 20% பிராஃபிட் அல்லது 25% அதற்கு மேல் வருவதற்கு வாய்ப்பே இல்லை.

ஒரு வேலைக்கு போனால், அவரவர் வேலையின் தகுதிக்கு ஏற்றவாறு சம்பளம் கொடுப்பார்கள். ஆனால், இவர்களுக்கு சம்பளமே 1.5 லட்சம் இல்லையென்றால், எல்லா செலவும் சேர்த்து இரண்டு லட்சம் வைத்து கொண்டால் கூட, எப்படி 15 காலேஜ் உருவாக்க முடியும்?

இது எல்லாம் கேள்விப்பட்டது தான், இன்னும் எவ்வளவு இருக்குமோ! சினிமாவுக்கு பைனான்ஸ், இது தவிர ,கான்ட்ராக்டர்களுக்கு பைனான்ஸ் இது எல்லாம் எப்படி வந்தது? பூர்விகத்தில் எங்க அப்பா என்ன வேலை செய்தார் ?இவர் என்ன தொழில் செய்தார்? அதை ஒட்டி தானே இது எல்லாம் கணக்கில் வரும் . அது மட்டுமல்ல,

திருச்சியில் நேருவுக்கு எத்தனையோ தெரு சொந்தமானதாக அதில் வீடுகள் இருக்கிறதாம். இதையெல்லாம் அரசியல் தெரியாத மக்கள் எந்த அளவுக்கு ஏமாறுகிறார்கள் என்பது இவர்களுடைய சொத்து வளர்ச்சி!
ஆனால்,அரசியலில் எப்படி இந்த அளவுக்கு வந்தது? நேர்மையாக சம்பாதித்ததா? இதுதான் தமிழக மக்களின் இன்றைய அரசியல் மாற்றத்திற்கான முக்கிய கேள்வி?
