கடந்த திமுக ஆட்சியில்! பல லட்சம் கோடி மதிப்புள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை மீட்ட அறப்போர் இயக்கத்தின் வெற்றி! மனித குல வாழ்வின் வெற்றி! அதுவாவது சேகர் பாபுவுக்கு தெரியுமா ?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

திமுக ஆட்சியில் தங்களிடம் அதிகாரம் இருக்கிறது எதை வேண்டுமானாலும் மடக்கிக் கொள்ளலாம் எதை வேண்டுமானாலும் தங்களுக்கு எடுத்துக் கொள்ளலாம் இதுதான் திமுக ஆட்சியாக இருந்தது. இந்த சதுப்பு நிலங்கள் சதுப்புநில காடுகள் எதற்கு என்று கூட தெரியாத இந்த முட்டாள்கள் பள்ளிக்கரணையில் உள்ள இந்த சதுப்பு நில 2000 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து அதை டாக்குமெண்ட் செய்து அதற்கு அப்ரூவல் வழங்கி சுற்றுச்சூழல் என். ஓ.சி வாங்கி வீடுகள் கட்ட

இந்த சதுப்பு நிலம் என்ற ஈர நிலத்தில் எப்படி சுற்றுச்சூழல் என். ஓ .சி கொடுக்கப்பட்டது? இது மனித வாழ்வில் பாதுகாக்கப்பட வேண்டிய இயற்கையின் பொக்கிஷம் .

மேலும், அவர்களுக்கு என்ன ?எழுதினாலும் ,என்ன சொன்னாலும், மண்டையில் ஏறாது. இந்த கிரிமினல்கள் எல்லாம் தெரிந்த மேதையை போல், சட்டத்தை வளைத்து , தங்கள் பாக்கெட்டில் வைத்துக் கொள்வார்கள். அதே சட்டம் இவர்கள் கழுத்தை நெரிக்கும் போது, தங்களுக்கு பாதுகாப்பு தேட சட்டத்தின் முன் காலில் விழுவார்கள். இதுதான் திமுக.மேலும்,

ரவுடியிசமும் ,பேச்சும் , தெரிந்த இவர்கள் ,பேசியே நாட்டை கவிழ்ப்பவர்கள். இதிலிருந்து மக்கள் தப்பித்துக் கொண்டார்கள். பிழைத்துக் கொண்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இதை சாதுக்கள் ,சாமியார்கள், ஆன்மீகவாதிகள் ,இந்த திமுக ஆட்சி மீண்டும் வந்திருந்தால் நாமெல்லாம் வாழ முடியாது என்று என்னிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

அதனால் அவர்கள் எப்படிப்பட்ட ஆட்சி ¿திமுக ஆட்சி என்பது அவர்கள் தெரிந்திருக்கிறார்கள். மேலும்,ஈர நிலங்கள் என்று சொல்லக்கூடிய சதுப்பு நிலங்கள் !மனித வாழ்வில் மற்றும் மனித வாழ்வின் உணவாதாரம் அதாவது வறட்சி காலங்களில் இந்த நீர் மக்களின் பயன்பாட்டுக்கு முக்கியமானது.

இதனால் பறவைகள், விலங்குகள் நீர்வாழ் உயிரினங்கள், நாட்டில் வெள்ளம் வரும்போது நீரை ஒரு அதிகப்படியாக உறிஞ்சுகின்ற நிலமாகவும், மனித வாழ்வின் குடிநீருக்கு முக்கியமானதாகவும் இருக்கக்கூடியது. இந்த ஈர நிலங்களில் இதில் போய் ஆக்கிரமித்து, பட்டா போட்டு , வீடுகள் கட்டுகிறார்கள் என்றால், இவர்கள் எல்லாம் அரசியலுக்கும், ஆட்சிக்கும் தகுதியானவர்களா?

இதை தான் அறப்போர் இயக்கம் நீதிமன்றத்தில் போட்ட வழக்கு மனித குலத்தின் வெற்றி என்றேன். நீதிபதிகள் இதை ஆய்வு செய்து தான், இவை அத்தனையும் கேன்சல் இருக்கிறார்கள். மேலும்,இவர்களிடம் பத்திரிக்கை என்பது கைக் கூலிகளாக பார்த்தவர்கள். அதிகாரம், ஆணவம் ,அத்தனையும் ஒருங்கிணைந்து செயல்பட்ட திமுக ஆட்சிக்கு, இயற்கை இனிமேல் எந்த காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது என்ற தண்டனையை கொடுத்திருக்கிறது.

மேலும்,நீங்கள் எத்தனை கோயில்கள் போனாலும், எத்தனை சாமி கும்பிட்டாலும் ,துர்கா ஸ்டாலின் இனி திமுகவை நீ காப்பாற்ற முடியாது. தர்மத்தின் எல்லைகளைக் கடந்து, சத்தியத்தின் எல்லைகளைக் கடந்து, இயற்கை என்ற ஒரு கடவுள் உங்களுக்கு மிகப்பெரிய தண்டனை கொடுத்திருக்கிறார் .இன்னும் கொடுக்கப் போகிறார், எழுதி வைத்துக் கொள்ளுங்கள். காலம் உங்களுக்கு எதிரான தீர்ப்பை எழுதியிருக்கிறது.

எங்கெல்லாம் கை வைக்கக் கூடாதோ, அங்கெல்லாம் நீங்கள் இயற்கைக்கு எதிராகவே, கை வைத்திருக்கிறீர்கள். நான் பலமுறை மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில், எழுதி இருக்கிறேன் இயற்கையை மனிதன் அழித்தால்! மனிதனை இயற்கையை அழித்து விடும். இயற்கை என்பது வெறும் பூமி மட்டும் அல்ல அந்த பூமியில் வாழும் உயிரினங்களும், மனிதன் உட்பட அதில் அடக்கம் . அது மட்டுமல்ல, இந்த ஈர நிலங்கள் கார்பன் களஞ்சியத்தின் முக்கியத்துவம் ஆனது.

அதாவது கார்பன் டை யாக்சைடு என்ற நச்சுவை உறிஞ்சி ,புவி வெப்பமயமாதலை தடுக்கின்ற சக்தி இந்த ஈர நிலத்திற்கு உண்டு.அதனால்,தான் நீதிபதிகள் இதற்கு முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள். இதுவே இவர்கள் ஆட்சி என்றால், உடனே இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று இருப்பார்கள்.பல ஆண்டுகள் வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே ,இந்த கட்டுமானப் பணிகளை நிறைவேற்றி விடுவார்கள்.

ஆனால், இயற்கை உங்களை அந்த அளவுக்கு விடவில்லை. அதை யாரும் ஒன்றும் அசைத்துக் கூட பார்க்க முடியாது. அதை அழித்தால், அதை எப்படி சரி செய்துக் கொள்ள முடியும்? என்பது இயற்கைக்கு தெரியும் .

எனவே, நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று, தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில் முதல்வர் ஜோசப் விஜய் பிரிகேட் என்ற கட்டுமான நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட அத்தனை சான்றுகளையும் கேன்சல் செய்து உத்தரவிட்டது மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று.

மேலும், இந்த பிரச்சினையை கையில் எடுத்து, பல ஆண்டுகளாக திமுக ஆட்சியில் போராடி வந்த அறப்போர் இயக்கத்தின் தன்னலமற்ற தொண்டு, மனித குல வாழ்வின் வெற்றி என்று தான் சொல்ல வேண்டும். அது பல கோடி மக்களுக்கு பயன்பட வேண்டிய அந்த நிலம், இவர்கள் பட்டா போட்டு, வீடு கட்டி ,வியாபாரம் செய்ய தங்களுடைய ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

மேலும்,இவர்களை எதிர்த்து பத்திரிக்கை நடத்துவதும் ,பத்திரிகைகளில் எழுதுவதும், இந்த ஊழலுக்கு எதிராக போராடுவதும், சாதாரண வேலை அல்ல .அதை அனுபவத்தவர்களுக்கு தான் தெரியும். தவிர,திமுக ஆட்சி ரவுடிகளின் சாம்ராஜ்யம் .

அதை எதிர்த்து ஒருவர் சட்ட போராட்டத்தின் மூலம் வழக்கு தொடர்ந்து ,வெற்றி பெற்று அவர்களிடம் விலை போகாமல், ரவுடிகளின் மிரட்டலுக்கு பயப்படாமல்,இந்த காரியத்தை அறப்போர் இயக்கத்தின் தலைவர் ஜெயராமன் செய்திருக்கிறார் என்றால், இயற்கை அவருக்கு நன்றி சொல்லும் .அது வாழ்த்தும்.

கடவுள் ஒருவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் கொடுப்பார் இவருக்கு கூலி !இவருக்கு என்ன கொடுக்க வேண்டும்? என்பதை அவர் தீர்மானிப்பார். இது சாதாரண வேலை அல்ல. இதை அவரிடமே தெரிவித்திருக்கிறேன்.

அவர் இதை நாங்கள் ஒரு டீம் ஒர்க்காக செய்திருக்கிறோம் என்றாலும், அத்தனை பேருக்கும், இயற்கையின் சக்தி இவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

தற்போது இயற்கையை பாதுகாக்க ஒவ்வொரு மனிதருக்கும் முக்கிய கடமை உண்டு என்பதை மனித சமுதாயம் எப்போது புரிந்து கொள்ளும்? நாட்டில் எத்தனையோ அரசியல் கட்சிகள் இருந்தும் மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி நினைக்காமல், சுயநலத்திற்காக அரசியல் கட்சி நடத்திக் கொண்டிருந்தால், இது எவ்வளவு பெரிய முக்கியத்துவமானது என்பது தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *