சமூக ஆர்வலர்கள் எல்லா மதத்திலும் இருந்து திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள் !சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வெளியிடுகிறார்கள். இது ஆளும் திமுகவுக்கு அதிர்ச்சியா ?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

கடந்த காலங்களில் சர்ச் பிஷப்புகள், முஸ்லிம் தர்காக்களில் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் ?என்று சொல்கிறார்களோ, அந்த கட்சிக்குதான் வாக்களிப்பார்கள்.

இப்போது அதே போல் சர்ச்சுகளிலும், தர்காக்களிலும் சொல்லும் போது, பிரச்சனைகள் பூதாகரமாக ஆகி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மேலும், கிறிஸ்துவ அமைப்புகளில் உள்ள சமூக ஆர்வலர்கள், சமூகவலை தளங்களில், இந்த கிறிஸ்தவ பாதிரியார்களுக்கும் ,பிஷப்புகளுக்கும் எதிராக கருத்துக்களை தெரிவித்து ,

கிறிஸ்தவர்கள் வாக்கு என்பது நம்முடைய உரிமை! அந்த உரிமையை மதத்தால், இவர்களுக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்று ஒருவரை கட்டாயப்படுத்துவது ஜனநாயகத்தின் தேர்தல் விதிமுறை அல்ல.

இருப்பினும், தேர்தல் ஆணையம் இது பற்றி எந்த வழக்கும் பதிவு செய்யாமல், விசாரணை செய்யாமல் இருப்பது, மிகப்பெரிய தவறு.

இந்த பிரச்சனை பத்திரிகைகளில் வந்தாலும், youtubeபில் வந்தாலும் ,சமூக வலைதளத்தில் வந்தாலும், இணையதள பத்திரிகையில் வந்தாலும், உடனடியாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒருவரை கட்டாயப்படுத்தி அல்லது பணம் கொடுத்து வாக்குகளை வாங்குவதற்கு ஜனநாயகத்தின் தேர்தல் என்று சொல்வது அர்த்தமற்றது.

இதைத் தேர்தல் ஆணையம் எப்போது புரிந்து கொள்ளும்? எப்போது நடவடிக்கை எடுக்கும்? என்பதுதான் சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கேள்வி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *