
டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மத்திய அரசு எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் கடந்த மாதம் இருபதாம் தேதியிலிருந்து தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
இந்தப் போராட்டத்திற்கு பின்னணியில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இருக்கிறார் என்பதுதான் மத்திய அரசின் உளவுத்துறை ரிப்போர்ட். அதற்காகத்தான் இந்த போராட்டம் குறித்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இவர் பேச முற்பட்டபோது அதற்கு மோடி அமித்ஷா வாய் திறக்கவில்லை மைக் ஆப் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியானது.
இருப்பினும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இளைஞர்கள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு போலீஸ் அனுமதி மறுத்திருந்தாலும், தொடர்ந்து போராட்டத்தை கைவிடாமல், நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையில் ராகுல் காந்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரை சந்தித்து பேசி இருக்கிறார். இந்த விஷயம் அரசியல் ஆக்கப்பட்டுள்ளது. இதனால் தான், மத்திய அரசு இப் பிரச்சினையை பற்றி நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதிக்க அனுமதிக்கவில்லை.
மேலும்,கோரிக்கை என்பது வேறு, கோரிக்கையை வைத்து போராட்டத்தை தூண்டி, அரசியல் செய்வது வேறு, இது இரண்டுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. அதுதான் இங்கே ராகுல்காந்தி பின்னணியில் இருக்கிறாரா ?என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும், மத்திய அரசின் அமைச்சர் ஜெ. பி. நாட்டா போராட்டக்காரர்களின் குழுவை சந்தித்து பேசி உள்ளார். அவர்கள் மூன்று கோரிக்கையை வைத்துள்ளார்கள்.

அதில் நீட் தேர்வு வினாக்கள் கசிவு குறித்து, அமைச்சர் பிரதான் பதவி விலக வேண்டும். கல்வி முறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் .இவர்கள் கேட்பது நியாயமான கோரிக்கை தான், அதை தவற சொல்ல முடியாது.
இருப்பினும், எதிர்க்கட்சிகளின் பின்னணியில், இந்த கோரிக்கையை வைத்து போராடுவது, இதில் அரசியல் செய்வதை மத்திய அரசு விரும்பவில்லை .இதுதான் முக்கிய உண்மை.
மேலும்,இப்படிப்பட்ட பிரச்சனைகள் நடுத்தர மக்களின் சமூக நலன் பிரச்சனை .இது உண்மையிலே வரவேற்க வேண்டிய பிரச்சினை தான், தீர்க்க வேண்டிய பிரச்சனை தான் ,இதே போல், ஒரு அரசியல் கட்சி தலைவர்கள் கூட ,இந்த நடுத்தர மக்களின் பத்திரிகை பிரச்சனைகளை பற்றி பேசுவதில்லை.

இதில் மத்திய அரசும் சரி, எதிர்க்கட்சிகளும் சரி, கார்ப்பரேட் பத்திரிகை ஊடகங்களுக்கு தான் பக்கபலமாக இருக்கிறார்கள். மக்கள் போராடும் போது தான் ,எல்லோரும் சமூகத்திற்காக பாடுபடுவது போல், காட்டிக் கொள்கிறார்கள்.
ஆனால் அரசியல் கட்சிகள் எல்லோருமே இந்த ஓட்டுக்காக தான் இவர்களுடைய அரசியலா? இந்த உண்மையை மக்கள் எப்போது புரிந்து கொள்வார்கள்?
