தமிழக முதல்வர் விஜய் சமூக நலன் பத்திரிகையாளர்களில் ஒருவரான பிலிக்ஸ் ஜெரால்டை மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் சேர்மனாக நியமித்தை வரவேற்கும்! சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

பத்திரிகையாளர்களில் ஒருவரான பிலிக்ஸ் ஜெரால்ட் கடந்த திமுக ஆட்சியில்! அவர் பட்ட வேதனை, மற்றும் கொடுமைகள்,பத்திரிக்கை துறைக்கே தெரிந்த ஒன்று.

மேலும், கொடுங்கோளர்கள் ஆட்சியில், மக்களுக்கு உண்மையான செய்திகளை அளிக்கக்கூடிய பத்திரிகைகள், உண்மையை சொல்லும் பத்திரிகையாளர்கள், பாதிக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகின்ற ஒன்று.

இப்போது உண்மைக்கு மாறாக செய்திகளை வெளியிடுபவர்கள் தான், தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில் பாதிக்கப்படுவார்கள் என்பது உறுதி.

மேலும் ,ஒரு சமூக நலன் சார்ந்த பத்திரிக்கையாளரை தமிழக முதல்வர் விஜய் மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் சேர்மனாக நியமித்திருக்கிறார். அவரை இன்று மரியாதை நிமித்தமாக மக்கள் அதிகாரம் பத்திரிகை ஆசிரியர் மற்றும் சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் என்ற முறையில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தேன்.

மேலும், தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில் !சமூக நலன் பத்திரிகையாளர்களை ஊக்குவிப்பது ,அவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை கொடுத்து, பதவியில் அமர்த்துவதை, வரவேற்று , மனமார்ந்த நன்றியை தமிழக தமிழக முதல்வர் விஜய்க்கு சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *