
தமிழக முதல்வர் விஜய் இதை எப்போது ?சரி செய்யப் போகிறார்? தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை, குற்ற வழக்கு சம்பவங்கள், வளரும் தீவிரவாத இயக்கங்கள், ரவுடிசம், போதை பொருள், போன்ற குற்றங்கள் அதிகரிக்க காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாமல், மேலும் தேவையான காவலர்களை எடுக்காமல் இருப்பதால், பெயருக்கு காவல் நிலையங்கள்,செயல்படுகிறதா?

இதனால், தமிழ்நாட்டில்,சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறையாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகத் தான் இருந்து வருகிறது. காவல்துறையில் உள்ள காவலர்கள் பற்றாக்குறையால் இருக்கின்ற காவலர்களுக்கு பணிச்சுமை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், காவலர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும், காவல்துறையில் தகுதியான காவலர்கள் நியமனம் மிக முக்கியமானது. லஞ்சம் கொடுத்தோ, சிபாரிசு செய்தோ ,காவல் பணிக்கு வந்தால் ,அவர்கள் நேர்மையான முறையில் பணியாற்ற மாட்டார்கள்.

அப்படி சிபாரிசு பேரிலும், லஞ்சம் கொடுத்தும் வருபவர்கள், அரசியல் கட்சியின் சிபாரிசில் வந்தாலும், அவர்கள் தான் காவல்துறையில் அதிகமாக குற்றவாளிகளுக்கு மறைமுகமாக துணை போகிறார்கள்.
இது பற்றி, பெரும்பாலும் அப்படி வந்தவர்களின் ஒரு பட்டியல் எடுத்து ஆய்வு செய்தால், பெரும்பாலும் இவர்கள்தான் அரசியல் கட்சியினர் கிரிமினல்களுக்கு மறை முக சப்போர்டிவாக இருக்கிறார்கள்.

அதனால், காவல் துறையில் அவசியம் தேவையான காவலர்களை சிபாரிசுகள் இன்றி உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும். அடுத்து, ஓய்வு பெற்ற பிறகு கூட அவர்கள் பிளேசுக்கு ,போடாமல் இருக்கக்கூடிய காவலர்களை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும்.
அது மட்டுமல்ல ,காவலர்களின் பணி சுமை, நாலு பேர் செய்யக்கூடிய ஒரு இடத்தில் இரண்டு பேர் செய்ய முடியாத ஒன்று. ஏனென்றால் ,சமூகத்தில் குற்றவாளிகள் அரசியல் கட்சிகளின் பின்புலத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாட்டில் எத்தனை அரசியல் கட்சிகள் இருக்கிறதோ, அத்தனை அரசியல் கட்சிகளின் பின்புலத்தில் ரவுடிகள், ஊழல் குற்றவாளிகள் ,இந்த ஊழல் குற்றவாளிகளுக்கு பின்னால், பத்தாயிரம் பேர் இருப்பார்கள் .ஒவ்வொரு ஊழல் குற்றவாளிகளுக்கும் பின்னால் தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான அரசியல் கட்சியினர் ,என்ற பெயரில் ரௌடிகள் உலா வருவார்கள். இப்போதும் வந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் தான் கனிம வள கொள்ளைக்கு முக்கிய பேக்ரவுண்ட் . இதையெல்லாம் எப்படி கட்டுப்படுத்துவது? போதைப் பொருள் புழக்கத்தை நாட்டில் இவர்களே மறைமுகமாக அரசியல் கட்சி பின்புலத்தில் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால், போதைப் பொருள் ஒழிக்க வேண்டும் என்று கொடி பிடித்துக் கொண்டு, கோஷமும் போடுவார்கள்.

எல்லாம் சினிமாவில் காட்டிய விஷயங்கள்தான், நிஜத்தில் நடந்து கொண்டிருக்கிறது.இது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. அதனால் இந்த வில்லன்களை கட்டுப்படுத்த ஹீரோ என்ற காவல்துறை கண்டிப்பாக தேவைப்படுகிறது.


மேலும், மாநில அளவில் காவல்துறையில் 40 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பற்றாக்குறை காரணமாக இருக்கின்ற காவலர்கள் கடுமையான பணி சுமை மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடுகிறார்கள். இது தவிர காவல்துறையில், ஒரு வருடத்திற்கு சுமார் 5000 பேர் ஓய்வு பெறுகிறார்கள் என்றால், பேருக்கு 500 காவலர்களை நியமனம் செய்துவிட்டு, மீதி எல்லாம் கிடப்பில் போட்டு விடுகிறார்கள்.

இது ஒரு பக்கம் பற்றாக்குறை இருக்கும்போதே,தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறை அதிகாரிகள் வீடுகளில் ஆபீஸ் டியூட்டி ,அதிகாரிகள் வீட்டு டூட்டி, முகாம் அலுவலக டூட்டி ,காக்கி உடுப்பு அணியாத தனிப்பிரிவு மற்றும் உளவுத்துறையினர் ,

இப்படி ஆயிரக்கணக்கானோர் தேவையே இல்லாத பணிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களை உடனே காவல் பணிக்கு எப்போது அதிகாரிகள் பயன்படுத்த போகிறார்கள்? மேலும் ,மக்கள் பணிக்கு காவலர்கள் பயன்படாமல், அதிகாரிகளின் சொந்த நலனுக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், கோயில் திருவிழா காலங்களில், தேர்தல் நேரங்களில் ,கூடுதல் காவலர்கள் தேவைப்படுகிறார்கள் . அப்போதும் எட்டு மணி நேரம் வேலை பார்த்த காவலர்கள், மீண்டும் 8 மணி நேரம் காவல் பணி என்பது எல்லோருக்கும் சிரமமான வேலையல்லவா?
மேலும்,காவல்துறையில் பல பிரிவுகள் இருக்கின்றன. அதாவது,குற்றப்பிரிவு, சைபர் கிரைம், குழந்தைகள் கடத்தல், சட்டம் ஒழுங்கு, உளவு பிரிவு, தீவிரவாத இயக்கங்களை கண்காணிக்கும் பிரிவு,போன்றவற்றில் இருக்கும் காலி பணியிடங்களை நிரப்பாமல் இருப்பதால், தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு பிரச்சனை முதல் அனைத்து பிரச்சனைகளுக்கும் இது தொடர் கதையாக இருக்கிறதா?

எனவே, தமிழக முதல்வர் ஜோசப் விஜய், காவல் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நியமனம் செய்து, மக்களின் பாதுகாப்பு விஷயத்தில் காவல்துறையின் பங்களிப்பு நாட்டு மக்களுக்கு அவசியமானது என்பதை சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும், மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பிலும், தமிழக மக்களின் சார்பிலும் இக் கோரிக்கையை தங்களின் கவனத்திற்கு இச்செய்தி .
