தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் முதல் செவிலியர்கள் , சமூக நலன் பத்திரிகைகள் , போக்குவரத்து தொழிலாளர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், விவசாயிகள், சத்துணவு ஊழியர்கள், இப்படி உழைக்கும் வர்க்கும் அத்தனை பேரும் இன்று அவர்களுடைய உரிமைக்காக போராடுகிறார்கள் – திமுக அரசு எதற்காக வந்தது? ஊழல் செய்யவா?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம்

நாட்டில் ஒரு அரசியல் கட்சியை எதற்காக மக்கள் பதவியில் உட்கார வைக்கிறார்கள்?

இவர்கள் ஊழல் செய்து சொத்துக்களை பத்து தலைமுறைக்கு மேல் சம்பாதித்துக் கொள்ளவா? அதுக்கு மக்கள் வேலை வெட்டி இல்லாமல் இவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று உணர்வோடு வாக்களிக்கிறார்கள்? எல்லோருமே இவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு வாக்களித்தார்களா?

மக்களின் உணர்வுகளை மதிக்க தெரியாத அரசியல், நாட்டுக்கு தேவையற்றது. ஒரு பக்கம் இந்துக்களின் உரிமைகளைப் பறிக்கிறது. இன்னொரு பக்கம் அரசு ஊழியர்களின் உரிமைகள், தற்காலிக பணியாளர்கள்,(செவிலியர்கள் , பகுதி நேர ஆசிரியர்கள்) இப்படி பல துறைகளில் அவர்களுடைய 15 ஆண்டுகால உழைப்புக்கு திமுக அரசு எதுவுமே செய்யாமல் ஏமாற்றிவிட்டது.

மக்கள் சுயநலமாக சிந்திக்காதீர்கள். ஒவ்வொருவரும் சுயநலமாக சிந்தித்தால் நாட்டு மக்கள் அனைவரும் நலமாக வாழ முடியாது.

அதுமட்டுமல்ல, 50 ஆண்டுகளுக்கு மேலாக பத்திரிக்கை துறையில் கார்ப்பரேட்டுக்கு மட்டுமே சலுகை விளம்பரங்கள் என்று ஒரு கருப்பு சட்டம் சர்குலேஷன் என்று கொண்டு வந்து பத்திரிக்கை துறையே அழித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை மக்கள் அதிகாரம் தான் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த செய்தியை எமது வாசகர்களுக்கு புரியும்படி தெரிவித்திருக்கிறேன்.

அதாவது, மக்களுக்கு எந்த செய்தி முக்கியம் எந்த செய்தி முக்கியமில்லை அதுதான் பத்திரிகை இவர்கள் வியாபாரத்திற்காக தேவையற்ற செய்திகளை எல்லாம் போட்டு பெரிய பக்கங்களை கொடுத்து அதில் விளம்பர ஏஜென்ட்கள் மூலம் 30% கமிஷன் வாங்கிக்கொண்டு செய்தி துறை இந்த பத்திரிக்கை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

பத்திரிக்கை வகைகளை விட பத்திரிகை சங்கங்களே அதிகமாக இருக்கிறது. தகுதியான உழைப்பும் பத்திரிகைகள் எத்தனை ?என்பதுதான் அதில் கேள்வியாக உள்ளது. செய்திகளுக்கும், தகவல்களுக்கும், உண்மைகளுக்கும், அர்த்தம் தெரியாது செய்தி துறை நாட்டில் இருப்பது எதற்கு?

இவர்கள் சம்பளம் வாங்கிக்கொண்டு, எவன் எந்த செய்தி போட்டாலும் ,அதை மாவட்ட ஆட்சியருக்கும் மற்றும் மந்திரிகளுக்கும் கட்டிங் போட்டு போஸ்ட் ஆபீஸ் வேலை செய்யவா? இல்லை, அவர்கள் பேச்சு எல்லாம் உண்மை என்று அதை மக்களிடம் விளம்பரப்படுத்தி மக்களை ஏமாற்றவா?

எதற்கு உங்களுக்கு இந்த செய்தி துறையில் வேலை? 10 பேர் உட்கார்ந்து தண்ட சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கவா? ஒரு நாளைக்கு எத்தனை செய்தி நீங்கள் கொடுக்கிறீர்கள்?இவர்களுக்கு பத்திரிகை பற்றி எதுவுமே தெரியாது.மேலும்,

எல்லாம் அரசியல் கட்சியின் பின்புலத்தில் வந்தவர்கள். இவர்களுக்கு பத்திரிகையை பற்றி தெரியாது. மேலும்,சமூக நலன் பத்திரிக்கை பற்றி தெரியாது. பத்திரிகைகளின் தரம் தெரியாது செய்திக்கே அர்த்தம் தெரியாதவர்கள் எல்லாம் செய்தித் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ஜால்ரா பத்திரிகைகள் தான் தெரிகிறது.

நீ எந்த செய்தி கொடுத்தாலும், அதைப் போட்டுக் கொண்டு போய் கொடுத்தால், இவர்களுக்கு சலுகை, விளம்பரங்கள் கிடைக்கும். இதுவா பத்திரிகை? பத்திரிகைத்துறை என்பது செய்தி துறையின் அடிமையா? தவறான செய்தி போட்டால் கேளுங்கள்.

மக்களுக்கான நோக்கம் என்ன? அவர்களுடைய அடிப்படைத் தேவை என்ன? எதுவுமே தெரியாத ஒரு செய்தித் துறைக்கு இவ்வளவு அதிகாரங்கள் பத்திரிக்கை துறையில் கொடுக்கப்பட்டிருப்பது மிக ,மிக தவறு.

இவர்களெல்லாம் பத்திரிக்கை துறையை பற்றி படித்திருக்கிறார்களா? தமிழ்நாட்டில் எத்தனை PRO க்கள் பத்திரிகை துறையை பற்றி படித்து வந்திருக்கிறார்கள்? அதுவாவது திமுக அரசுக்கு தெரியுமா? ஏதோ அறிக்கை விட்டுக் கொண்டு, மேடைப்பேச்சு பேசிக்கொண்டு, அங்கே கைதட்டி கொண்டு, ஒருவரை பற்றி இன்னொருவர் விமர்சனம் செய்து கொண்டு, இருக்க மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள்?

இதுக்கு வாக்களிப்பவர்கள் உங்களிடம் ஓட்டுக்கு பிச்சை பணம் வாங்கி கொண்டு இருப்பவர்கள் தான் வாக்களிப்பார்கள். உழைக்கும் வர்க்கும் ஒரு காலமும் ,இதற்கு வாக்களிக்காது.

அதனால் ,இந்த திமுகவுக்கு, 2026 இல் சரியான பாடத்தை புகட்டுங்கள். மக்களாட்சிக்கு அர்த்தம் தெரியாதவர்கள் அரசியலுக்கு தகுதியற்றவர்கள். மக்களை ஏமாற்றுவது அரசியல் அல்ல மக்களின் உணர்வுகளை மதித்து செயல்படுத்துவதற்கு தான் அரசியல் தேவை என்பதை ஒவ்வொரு வாக்காளர்களும் இனி புரிந்து தமிழகத்தில் வாக்களியுங்கள். அப்போதுதான் இப்படிப்பட்ட போலிய அரசியல்வாதிகள் அரசியல் தமிழ்நாட்டில் இருந்து அகற்ற முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *