
மக்கள் அதிகாரத்தின் ஒவ்வொரு தேர்தல் நகர்வுகள் குறித்து வெளியிட்ட செய்திகள், இந்த சர்வே முடிவுகளின் அடிப்படையில் இரண்டும் ஒன்றே என்ற அளவிற்கு ஒத்துப் போகிறது.
தொடர்ந்து மக்கள் அதிகாரம் பத்திரிக்கை முதன் முதலில் தேர்தல் செய்தி வெளியிட்டது.தொங்கு சட்டமன்றம் தான் தமிழ்நாட்டில் அமையப்போகிறது .

அப்போது அச் செய்தியை பத்திரிகைத்துறை ,அலட்சியமாகத் தான், எமது பத்திரிகையின் செய்தியை பார்த்திருப்பார்கள். அது பற்றி கவலை இல்லை. ஆனால், இன்று அதிமுக ரகசியமாக சர்வே எடுத்துள்ளது உளவுத்துறை ரகசியமாக சர்வே எடுத்துள்ளது. திமுக ரகசியமாக சர்வே எடுத்துள்ளது .இவர்கள் அத்தனை சர்வேக்களும் என்ன சொல்கிறது?

தமிழ்நாட்டில் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது .என்பதில் இந்த சர்வே ரிப்போர்ட் தெள்ளத் ,தெளிவாக வெளி வந்துள்ளது.
இது தவிர, ஒரு பக்கம் ஜோதிடர்கள் அதிமுகவுக்கு எத்தனை சீட்டு கிடைக்கும்? திமுகவுக்கு எத்தனை சீட்டு கிடைக்கும்? யாருக்கு பெரும்பான்மை? யார் ஆட்சி அமைப்பார்கள்? எனக்குத் தெரிந்த பல ஜோதிடர்களின் ஆய்வுகள் குறித்து youtube மூலம் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இது தவிர, நானும் சிலரை கேட்டிருக்கிறேன். யாருமே ஒத்த கருத்தை சொல்லவில்லை. ஒருவர் அதிமுக பக்கம் பெரும்பான்மை என்கிறார் .இன்னொருவர் திமுக தான் ஆட்சி அமைக்கும் என்கிறார். யார் சொல்வது நம்புவது? யார் சொல்வது விட்டு விடுவது?
அதில் ஒரு ஜோதிடர் முன்னாள் ராணுவ வீரர் ,உடுமலைப்பேட்டையை சேர்ந்த ராஜேஸ்வரன் என்பவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில், ஸ்டாலின் ஜாதகத்தில் இப்போது நேரம் சரியில்லை. அவருக்கு அஷ்டமத்து சனி நடக்கிறது. அது மட்டுமல்ல, சனி திசையும் நடக்கிறது. மேலும்,புத்திநாதன் ,தசாநாதன் இரண்டுக்கும் சஸ்டஷ்டகம் என்று தெரிவித்தார். எனக்கும் ஓரளவுக்கு ஜோதிடம் தெரியும். அப்போதே புரிந்து கொண்டேன். ஸ்டாலின் நிச்சயம் வர முடியாது.

மேலும்,துர்கா ஸ்டாலின் எத்தனை கோயிலில் பரிகாரங்கள் செய்தாலும், யாக பூஜைகள் நடத்தினாலும், ஒன்றும் பலன் அளிக்காது. கிரகங்கள் என்ன கொடுக்க வேண்டுமோ, அதை கொடுத்தே தீருவார்கள் .ஏன் என்றால், நீங்கள் நல்லது செய்திருந்தால் ,தயவு தாட்சண்யம் பார்ப்பார்கள். இங்கே அதற்கு இடமே இல்லை.
மேலும் சனி தான் நீதிமான். இவர்களுக்கு இன்னும் நீதிமன்றத்தின் மூலம் பல தண்டனைகள் வழங்க இருக்கிறது என்பது ஜோதிடத்தின் மூலம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. அப்படிதான் சூழ்நிலையும், போய்க் கொண்டிருக்கிறது. 2026 இல் நிச்சயம் திமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.