
திமுகவின் முன்னாள் மந்திரிகளிலிருந்து ,அரசியல் கட்சியினர் வரை, அரசியல் தெரிந்தவர்களிடம் இவர்கள் பேச முடியாது . அரசியல் தெரியாத ஆடு, மாடு மேய்க்கும் மக்களிடம் தான் இவர்களால் செய்ய செய்ய வேண்டும்.
மேலும்,முதல்வர் விஜய் கேட்கும் கேள்விக்கும் இவர்கள் சொல்லும் பதிலுக்கும் சம்பந்தமே இல்லை. விஜய் தயாநிதி மாறன் கம்பெனியில் படம் நடித்திருக்கலாம். அவர்கள் நடித்ததற்கு சம்பளத்தை அவர்கள் கொடுத்திருப்பார்கள். அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? அது அவர் செய்த வேலைக்கு கூலி! இது மக்கள் பணி! இவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்!
இது எல்லாம் தெரியாமல் கிராமங்களில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் இடம் பேசலாம் உங்கள் அரசியல்! கருணாநிதிக்கு ரிக் ஷா ஓட்டிய வேலுவுக்கு 15, 20 காலேஜ் என்றால், திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாராக ,முதல்வராக தேர்வு செய்யப்பட்டவர், இந்த கேள்விகளை கேட்கக் கூடாதா? மேலும்,
சட்டமன்றத்திலே ED வழக்கு உள்ளது என்று சொல்லக் கூடாதா? ஏன்? அது என்ன தவறான வார்த்தையா? நாட்டு மக்களுக்கு தெரிந்த ஒரு விஷயத்தை ஒரு முதல்வர் சட்டமன்றத்தில் பேசியதில் என்ன தவறு?

சட்டமன்றம் சட்டத்தை மதிக்கின்ற மாண்பை பெற்ற மன்றம். அந்த மன்றத்திலே நீங்கள் பேசுவது அரசியலா? அல்லது பதிலா? நடந்த விஷயங்களை பேசுவதற்கு கூட உங்களிடம் அனுமதி வாங்கிக் கொண்டிருப்பார்களா?

மேலும்,அமலாக்கத் துறை !வழக்கு பதிவு செய்துள்ளது .அது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது. சட்டமன்றத்திலே ஏன் விவாதிக்க கூடாது ?உங்களுடைய ஊழல் பிரச்சனைகளை எல்லாம் சட்டமன்றத்தில் பேசக்கூடாது ,ஒரே வார்த்தையில் சொன்னால் அதுதான் உங்களுக்கு இடிக்கிறது.
மேலும்,ஒரு நேர்மையான ஆட்சி நடத்த வேண்டும் என்றால், கடந்த கால ஆட்சியின் ஊழல் வரலாறுகள் பற்றி மக்களிடம் பேசி ஆக வேண்டும். ஏனென்றால், இது மக்கள் மன்றம் .மக்கள் மன்றத்திலே நீங்கள் செய்த ஊழல் வரலாறுகளை பேசாமல் வேறு எங்க பேசுவார்கள்?
மேடை போட்டு பேசினால், அதற்கு நீங்கள் ஒரு பதில் சொல்லிட்டு, மக்களை ஏமாற்றலாம் அது இங்கு முடியவில்லை. மேலும், எல்லா நிகழ்வுகளும், லைவில் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் .

இதுதான் திமுகவுக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய அடி .அரசியலென்றால் எப்படி இருக்க வேண்டும்? என்று விஜய் சொல்லித் தருகிறார் .எப்படி இருக்கக் கூடாது என்று இவர்கள் சொல்லிக் கொண்டு ,சட்டமன்றத்திலே கதறிக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் தற்போதைய அரசியல் சட்டமன்ற நிலைமை.
