திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதா? சமூக வலைதளங்களில் சமூக ஆர்வலர்கள்.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

திமுக ஆட்சியில் கடந்த ஐந்தாண்டுகளில் பள்ளி மாணவிகள் முதல் கல்லூரி மாணவிகள் வரை எவ்வளவு பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்கள்?

தவிர, எவ்வளவு கற்பழிப்பு நடந்துள்ளது? இது பற்றி சமூக ஆர்வலர்கள் தங்களுடைய கருத்தை சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்கள். இன்னொரு முறை திமுக ஆட்சிக்கு வந்தால், பெண்களின் பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக்குறி ஆகிவிடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும்,

வயதானவர்கள் கூட கற்பழிக்கப்பட்டு இருக்கிறார்கள். பொதுமக்கள் இந்த ஆட்சியைப் பற்றி அவர்களுடைய உள்ளக் குமுறலை வெளிப்படுத்த, இன்று சோசியல் மீடியா முக்கிய பங்கு வைக்கிறது. அதை மறுக்க முடியாது.

மேலும், கார்ப்பரேட் ஊடகங்களில் வெளிவராத செய்திகள் கூட ,இந்த சமூக ஊடகங்கள் மற்றும் இணையதள செய்திகள், மக்களிடம் உண்மைகளை கொண்டு போய் சேர்க்கிறது. இப்படி இருக்கின்ற காலகட்டத்திலே திமுக ஆட்சியில், இவ்வளவு அராஜகங்கள் ,பெண்களுக்கு பாலியல் வன்கொடுமைகள் ,7 வயசு, 2 வயசு குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகள் ,இதையெல்லாம் கேட்கும்போது உண்மையிலே ஸ்டாலினுக்கு ஆட்சி நிர்வாக தகுதியின்மையை எடுத்துக்காட்டுகிறது.

மேலும்,ஒரு பக்கம் ஊழல் நிர்வாகம் மற்றொரு பக்கம் அராஜகங்கள், பாலியல் வன்கொடுமைகள், பாதுகாப்பின்மை ,நடுத்தர மக்களின் முன்னேற்றங்கள் கேள்விக்குறி, உழைப்புக்கேற்ற ஊதியம், தொழிலாளர்கள் உழைப்பு ஏற்ற ஊதியம் கேள்விக்குறி ,எதுவுமே முறையாக செயல்படுத்தவில்லை.

இதனால் நடுத்தர மக்கள் திமுக ஆட்சியில் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த ஆட்சியில் யார் நன்றாக இருக்கிறார்கள் என்றால்,ஊரை ஏமாற்றி பிழைப்பவர்கள், சட்டத்தை ஏமாற்றி பிழைப்பவர்கள்,ஊர்த்தாலி அறுப்பவர்கள், சமூக விரோத கும்பல்கள், மற்றும் கஞ்சா,அபின் ,டாஸ்மாக் போன்ற போதையில் தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்று இருக்கிறார்கள். இதுதான் திமுக ஆட்சியின் ஐந்தாண்டு சாதனை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *