
தமிழக மக்களை இனி முட்டாளாக்க எந்த அரசியல் கட்சியாலும் முடியாது . மக்கள் தெளிவாக அதிமுக, திமுகவிடம் பாடம் படித்து விட்டார்கள். அதனால்,இன்று விஜய்க்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள். விஜய் சரியாக செயல்படவில்லை என்றால், இன்னொருவருக்கு வாய்ப்பளிப்பார்கள்.
எந்த அரசியல் கட்சிகள் இனி மக்களுக்காக, உழைக்கிறார்களோ, மக்களுக்காக உண்மையான தியாகத்தை ஏற்படுத்துகிறார்களோ அவர்களுக்கு தான் இனி அரசியல் எதிர்காலம் ! மேலும்,

ஜோதிடர்கள் கடவுள் இல்லை. அவர்கள் கடவுள் போல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ ஒன்று இரண்டு நடந்து விடலாம். ஆனால் இந்த மாற்றம் கடவுளால் மட்டும் தான் நடந்தது. அதேபோல் அரசியல் தவறான பாதையை நோக்கி நகர்ந்தால் நிச்சயம் ஆட்சி என்பது நிலையானது அல்ல இதை அரசியல் கட்சிகள் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், எந்த அரசியல் கட்சி மக்களுக்கானது ?என்பதை மக்கள் தெளிவாகத் தான் இருக்கிறார்கள். மக்களுக்கு தேவையான அரசியல் கொடுப்பவர்களிடம் மட்டும்தான் இனி ஆட்சி! கடந்த காலங்களில் போல அதிமுகவை விட்டால் திமுகவை விட்டால் அதிமுக என்று மாற்றி மாற்றி வாக்களிப்பார்கள் என்று நினைப்பது அரசியல் கட்சிகளுக்கு அது ஏமாற்றமாகத்தான் இருக்கும்.

மேலும் பல கட்சிகளில் ஊழல் செய்துவிட்டு ஊழல் வழக்குகளை வைத்துக்கொண்டு கிரிமினல் வழக்குகளை வைத்துக்கொண்டு இனியும் தேர்தலை சந்தித்தால் அவர்கள் எல்லாம் ஜெயிப்பது கடினம் தான். மக்கள் தெளிவான அரசியல் மாற்றத்தை நோக்கி மக்களுக்கான அரசியல் எது அதை தான் விரும்புகிறார்கள்.
அதனால்தான் தமிழகத்தில் ஒன்றை கோடி மக்களுக்கு மேல், இந்த மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று தான் வாக்களித்திருக்கிறார்கள்.
மேலும்,மீண்டும், மீண்டும் விஜயும் ,அதே தவறு செய்தால், நிச்சயம் விஜிக்கும் முற்றுப்புள்ளி வைப்பார்கள். காரணம் திமுக கூட்டணியில் இருக்கும் வரை, அந்த ஊழல்களுக்கு எல்லாம் இவர்கள் ஒத்து ஊதி விட்டு, இப்போது தூய்மையானவர்கள் போல், தமிழக வெற்றி கழகத்தின் பக்கம் ஒதுங்கிக் கொள்கிறார்கள்.

ஒரு அரசியல் கட்சி கூட்டணியில் இருக்கும் போது, தவறு செய்தால் கேட்கக் கூடாதா? அதுக்கு நீங்கள் அரசியல் கட்சி என்று சொல்லிக் கொள்வதற்கு தகுதி இல்லை. அடிமை கூட்டங்களாக தான் திமுக கூட்டணியில் நீங்கள் இருந்தீர்களா? மேலும்,.
ஒரு வருடத்திற்கு பல ஆயிரம் கோடி இந்த கூட்டணி கட்சிகளுக்கு திமுக கொடுத்திருப்பதாக தகவல். அப்போது பணப்பெட்டி வாங்கும்போது, திமுகவை புகழ்ந்து கொண்டிருந்தார்கள். இப்போது அங்கே பணப்பெட்டி வாங்க முடியாது .எந்த பதவியும் அடைய முடியாது. இங்கே ஓட்டிக்கொண்டால், நமக்கு அதிகாரம், பதவி, பணம் எல்லாம் வந்து விடும் என்ற நம்பிக்கையில் தான், தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,மக்கள் இவர்களைப் பார்த்து வாக்களிக்கவில்லை. இவர்கள் கட்சியை பார்த்து வாக்களிக்கவில்லை, மனசாட்சி உள்ள மக்கள்தான், விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள். மனசாட்சி உள்ள மக்கள் தான் ,மாற்றத்தை விரும்பி இருக்கிறார்கள்.

எப்படியும் வாழ்பவர்கள், எப்படியும் பேசுபவர்கள், வாக்களிக்கவில்லை. அதனால், இவர்கள் தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணியில் நின்றாலும், இனி மனசாட்சி உள்ள மக்கள் திமுக கூட்டணி கட்சிகளுக்கு, வாக்களிக்க மாட்டார்கள். இதை எழுதி வைத்துக் கொள்ளட்டும். எத்தனை பேர் ஜெயிக்கிறார்கள் என்பதை பார்ப்போம்?
இன்று திமுகவை குறை சொல்லும் வை.கோ. அன்று ஸ்டாலினை புகழ்ந்து கொண்டு இருந்தார். கேட்டால் கூட்டணி தர்மமா? பத்திரிகையாளர்கள் நியாயமான முறையில் கேள்வி கேட்டு இருக்கிறார்கள். அவரால் பதில் சொல்ல முடியவில்லை. அவர் மீது சண்டைக்கு பாய்கிறார் .ஏனென்றால் இவர்கள் எல்லாம் கொள்ளையடித்து சொத்து சேர்த்துக் கொண்டு, அடாவடித்தனமாக பேசுகிறார்கள் .

பத்திரிகையாளர்கள் கூலிக்கு கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்வதற்கும் .மற்ற பத்திரிகைகளில் செய்தியாளர்களாக இருப்பவர்களும், இவர்கள் ஈக்குவலாக பணம் வைத்திருந்தால் ,அல்லது காரில் வந்து, இறங்கி பேசினால் ,அப்போது அடாவடியாக பேச மாட்டார்கள் .
ஏனென்றால் இவர்கள் பணத்தோடு, பதவியோடு ,போட்டி போட்டுக், கொண்டிருக்கிறார்கள். மக்களுக்காக போட்டி போடவில்லை. மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும், இந்த போலி அரசியல்வாதிகளை, கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகைகள் தான், கார்ப்பரேட் பத்திரிகை தொலைக்காட்சிகள் தான் ,நல்லவர்களாக, வல்லவர்களாக ,இவர்களுடைய பேச்சுக்களை காட்டிக் கொண்டிருக்கிறது.

அதனால் மக்கள் இப்படிப்பட்ட போலி அரசியல்வாதிகள் கூட்டங்களிடம் ஏமாந்தால், மீண்டும் இதே ஊழல் அரசியல் ,தமிழ்நாட்டில் தலைதூக்கும் என்பது உறுதி.

விஜய் பேசுவதை, செயல்படுத்தி காட்டினால்தான், மக்கள் இனி நம்புவார்கள். கார்ப்பரேட் ஊடகப் பொய்களை எல்லாம் ,யாரும் ,இனி நம்பத் தயாராக இல்லை. அரசியலில் உண்மைகள் என்ன? அரசியல்வாதிகளின் பொய்கள் என்ன? இது தெரியாத வரை தமிழ்நாட்டில் ஒவ்வொருவருக்கும் அரசியல் என்பது ஏமாற்றமே! அதனால், அரசியலை ஒவ்வொரு பாமர மக்களும் படிக்க வேண்டும்.
