திருமாவளவனுக்கு தவெக வின் பேரம் படிய வில்லையா? மதச்சார்பின்மை கொள்கைக்கு! எதிர்க்கட்சிகள் கூட்டணி ஆதரவு மட்டும் எப்படி ஏற்றுக் கொள்கிறீர்கள்? – அரசியல் கட்சியினர் பேச்சு .

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

விஜய் மதச்சார்பின்மை அரசியல் என்று பேசுகிறவர் , எதிர்க்கட்சி அணிகளோடு ,கூட்டணி ஆட்சி ஏற்படுத்துவது அது?எந்த கொள்கை? மேலும்,அது அரசியல் கொள்கையா? அல்லது பதவி ஆசை கொள்கையா? எந்தக் கொள்கை ?என்று அரசியல் கட்சியினர் விமர்சிக்கின்றனர்.

மேலும்,இப்படி ஒரு ஆட்சி அமைப்பதில் எவ்வளவு சிரமங்கள் இருக்கும் ? எவ்வளவு குதிரை பேரங்கள் நடக்கும்? எந்தக் கட்சிக்கும், பெரும்பான்மை இல்லை என்றால், ஒவ்வொரு கட்சியின் எதிர்பார்ப்புகளுக்கு! எப்படி ஆட்சியை மக்களுக்காக கட்டமைக்க முடியும்?

மேலும்,இந்த அரசியல் கட்சிகள் ஓட்டு போட்ட மக்களை மறந்து விட்டார்கள். எந்த நோக்கத்திற்காக மக்கள் இவர்களுக்கு வாக்களித்தார்களோ , அதை விட்டு விட்டு தங்களுடைய சுயலாபத்தை மட்டுமே அரசியலாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த சுயலாபத்திற்கு ஒத்து ஊதக் கூடிய பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் இவர்களுடைய பில்டப்கும், எதிர்பார்ப்புக்கும், இவர்கள் என்ன பேசினாலும் என்ன சொன்னாலும் அதை அப்படியே அதுதான் அரசியல் என்று மக்களை முட்டாளாக்கும் இந்த கார்ப்பரேட் பத்திரிகை தொலைக்காட்சிகள் இருக்கும் வரை இப்படிப்பட்ட அரசியல் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தான் இருக்கும்.

மேலும்,இவர்கள் மக்களுக்காக, தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் நடத்தவில்லை இவர்கள் அரசியல் கட்சியினருக்கும், ஊழல்வாதிகளுக்கும், அரசியல் கிரிமினல்களுக்கும், ஆட்சி, அதிகாரத்திற்கும், பத்திரிக்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மக்களும் அதுதான் அரசியல்! அதுதான் பத்திரிக்கை என்றும், இதுதான் அரசியல் என்றும் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். அரசியலின் நோக்கத்தை அரசியல் கட்சியினரும் ஆட்சியாளர்களும் நினைக்காத போது, பத்திரிகைகள் அதை சுட்டிக்காட்டு தவறி விட்டார்கள்.

சொல்லப்போனால், அவர்களுடைய எலும்பு துண்டுக்கு இவர்கள் பத்திரிகை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் போலி பத்திரிக்கை பிம்பத்தின் அரசியலில், இருந்து மக்கள் வெளிவராத வரை இப்படிப்பட்ட போலி அரசியல்வாதிகள் தமிழ்நாட்டை சீரழித்துக் கொண்டிருப்பார்கள். மக்கள் தொடர்ந்து ஆட்சியாளர்களிடம் எதிர்பார்த்து ஏமாந்து கொண்டிருப்பார்கள்.மேலும்,

தேர்தல் முடிந்த பிறகு, பெரும்பான்மை இல்லாததால், விஜய்யிடம் ஆட்சி அதிகாரத்தை பெறுவதற்கு பேரம் பேசிக் கொண்டு, ஓட்டு போட்ட மக்களை முட்டாளாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

மேலும்,உங்களுக்கு பதவி கொடுக்க வேண்டும் என்று மக்கள் வாக்களிக்கவில்லை .அதை எந்த ஒரு அரசியல் கட்சி தலைவர்களும், அரசியல் கட்சியினரும் ,இன்னும் கூட அதை சரியாக உணரவில்லை. மக்கள் வாக்களித்தது, நல்லாட்சி !மக்களுக்கான சேவை, இதை எதிர்பார்த்துதான் வாக்களித்திருக்கிறார்கள்.

ஆனால், திருமாவளவன் போன்ற அரசியல்வாதிகளின் சுயநலம் துணை முதல் அமைச்சர் பதவி கேட்கலாமா? அல்லது வேறு ஏதாவது பல கோடிகளை சம்பாதிக்கக்கூடிய அமைச்சர் பதவியை கேட்கலாமா? இப்படி எல்லாம் ,இந்த பதவி அதிகாரத்தின் மூலம், மக்களை முட்டாளாக்கி, ஊழல் செய்து எத்தனை கோடி கொள்ளை அடிக்கலாம்?

மேலும்,மக்களின் முன்னேற்றத்திற்கு அரசியல் என்றால் ,இவர்களுடைய முன்னேற்றத்திற்கு அரசியல் ஆக்கி விட்டார்கள். அதனால் தான் ,மக்கள் முட்டாளாக இருந்தால் ,இவர்கள் எல்லாம் முதலாளிகளாக ஆகிவிடுவார்கள்.

ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் இவர்களுடைய எதிர்பார்ப்பும், கனவுகளாகவும் இருக்கிறது. இதற்கு திருமாவளவன் எவ்வளவு பில்டப் கொடுக்கிறார்? ஒரு பக்கம் சோசியல் மீடியாவில் திருமாவளவனை கூட்டணியில் சேர்ப்பதும், திருடனை உள்ளே விடுவதும் இரண்டும் ஒன்று தான் என்று விஜய்க்கு அட்வைஸ் செய்கிறார்கள்.

மக்கள் ஏமாளிகளாக இருந்தால், 1000,500, ஓட்டுக்கு பிச்சை போட்டு உங்களை அடிமைகளாக வைத்திருப்பார்கள் . இந்த அடிமைத்தனம் தான் உழைக்கும் மக்களுக்கு இவர்கள் எதிரிகளாக இருக்கிறார்கள்.

மேலும்,இவர்கள் பின்னால் ஊரை ஏமாற்றும் கட்சி கூட்டம், கொடியைப் பிடித்துக் கொண்டு ,இவர்கள் எந்த உழைப்பும் இல்லாமல் ,இவர்கள் முன்னேற துடிக்கிறார்கள். ஆனால் உழைப்பவன் முன்னேற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறான்.

தவிர, கஷ்டப்பட்டு படித்தவன் வேலை இன்றி ஒரு பக்கம் தவிக்கிறான். கிடைத்த வேலையும் அந்த உழைப்புக்கு ஏற்ற சம்பளம் இல்லாமல், இளைஞர்கள் வேதனைப்படுகிறார்கள்.

இதனால், உழைக்கும் மக்கள் எவ்வளவு போராடுகிறார்கள்? அதைப் பற்றி எல்லாம் இவர்களுக்கு கவலை இல்லை. அதேபோல், அரசு ஊழியர்கள், அவர்களுக்கு சம்பளம் விகிதம் ஏற்ற வில்லை இன்னொரு பக்கம் ஓய்வூதியம் தருவதாக விஜய் அறிவித்துவிட்டார்.

இது எல்லாம் செய்ய முடியாத வாக்குறுதிகள் எல்லாம் கொடுத்து, இப்படிப்பட்ட கூட்டணி கட்சிகளை இணைத்துக் கொண்டு, கடவுளே வந்தாலும் இவர்களை திருத்த முடியாது. இவர்களை வைத்துக்கொண்டு, மக்களுக்கு நல்லது எதுவும் செய்ய முடியாது. அதை நினைத்து தான் வேதனைப்படுகிறேன்.

மேலும்,கடவுள் இவர்களை எல்லாம் கொண்டு வந்து, அரசியலில் உட்கார வைத்து , அரசியல் என்பது சட்டப்படி கொள்ளையடிப்பதற்கு , என்று நினைக்கும் இவர்களின் செயல்பாடுகளைப் பார்த்து அரசியல் தெரிந்தவர்கள் வேதனையுடன் கொந்தளிக்கிறார்கள்.

ஆனால், தெரியாதவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு , யாராவது பேசினால், அப்படியா? என்று வாயை பிளக்கிறார்கள்.

அதனால் ,அரசியல் தெரிந்தவர்கள் தான், இந்த அரசியல் பற்றி வேதனை தெரிவித்து புலம்புகிறார்கள். அவர்கள் புலம்புவதில் நியாயம் இருக்கிறது. ஆனால், விஜய் சொன்ன வாக்குறுதியை நம்பி மக்கள் வாக்களித்து விட்டார்கள்.

இப்போது எப்படி அவர் ஆட்சியை நிலை நிறுத்தப் போகிறார்? என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *