தேர்தல் ஆணையம்! வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறதா? அது அரசியல் கட்சியினருக்கும் ,அந்த விழிப்புணர்வு ஏன் ?கொடுக்கக் கூடாது ?

அரசியல் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நாட்டில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு தேவை ! என்று தேர்தல் ஆணையத்திற்கு பல மாதங்களுக்கு முன்பாகவே மக்கள் அதிகாரத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

அதாவது தேர்தல் ஆணையம் மக்களுக்கு இலவசமும், ஓட்டுக்கு பணமும், கொடுக்கின்ற அரசியல் கட்சியினரிடம், இருந்து மக்கள் வெளியில் வரவேண்டும். அதற்கு அவர்களிடம் அவசியம் விழிப்புணர்வு தேவை.

இதற்கு என்ன காரணம் ?என்றால் கடந்த திராவிட கட்சிகளின் 50 ஆண்டுகால அரசியல் ,ஓட்டுக்கு பணமும், இலவசமும் கொடுத்து ,வாக்காளர்களை, இதுதான் தேர்தல் என்று அவர்களின் மன நிலையை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் .

அது ஒரு பக்கம் , மற்றொரு பக்கம்,அவர்களுடைய வறுமையை பயன்படுத்தி, இந்த வாக்குகளை அவர்கள் வியாபாரமாக செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே, தேர்தல் ஆணையம், மக்களுக்கு மட்டும் விழிப்புணர்வு என்பது போதாது.

அரசியல் கட்சி தலைவர்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும் ,வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல், தேர்தலில் நிற்க வேண்டும் என்று அவர்களுக்கும் விழிப்புணர்வு கொடுக்க வேண்டும்.

அது மட்டுமல்ல, அரசியல் கட்சிகள்,பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற சட்டமும் கொண்டு வர வேண்டும். தவிர, இலவசங்கள் அறிவிக்கும்போது அதற்கான நிதியை எதன் மூலம் கொடுப்பீர்கள்? என்பதை தேர்தல் ஆணையம் , கேள்வி கேட்க வேண்டும்.

மேலும்,மாநிலத்தின் நிதி ஆதாரத்தை வைத்து தான், மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்த முடியும். ஆனால், கடன் சுமை அதிக அளவு இருக்கும் போது, எப்படி இலவச அறிவிப்புகள் கொடுக்கலாம்? இலவசத்தை விட, மக்களுக்கு வரி சுமையை குறைக்கலாம். மின்சார கட்டணத்தை குறைக்கலாம். பஸ் கட்டணம் குறைக்கலாம். கல்வி கட்டணம் இல்லாமல் தரமான கல்வியை தவிர தரமான மருத்துவத்தை மக்களுக்கு கொடுக்கலாம்.

ஆனால் ,இலவசம்! என்ற பெயரில் பிரிட்ஜ் கொடுப்பது, பத்தாயிரம் கொடுப்பது, 2500 கொடுப்பது ,2000 கொடுப்பது, இது எல்லாம் மக்களை ஓட்டுக்காக கவரும் வேலையா?

இப்படிப்பட்ட இலவசங்கள்,மீண்டும் ஊழலைத்தான் மக்களிடம் ஊக்கி வைக்கிறது. ஊழலற்ற ஆட்சிக்கு தான் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு தேவை. நேர்மையான மக்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதுதான் வாக்காளர்களின் விழிப்புணர்வின் நோக்கமாக இருக்க வேண்டும்.

மேலும், மக்கள் அதை நம்பி வாக்களிப்பவர்களும், இருக்கிறார்கள் .எனக்கு இது கிடைக்கும். இவர் வந்தால் அதை செய்கிறேன். இதை செய்கிறேன். என்று சொல்லி இருக்கிறார் .இப்படி எல்லாம் நம்ப கூடிய வாக்காளர்களும் இருக்கிறார்கள்.

எனவே, வாக்காளர்கள் ஒரு பக்கம் அமைதியாக இருந்தால் கூட, இந்த அரசியல் கட்சியினர் ஊழல் செய்த பணத்தை வைத்துக்கொண்டு,எப்படி எல்லாம் யோசித்து வாக்காளர்களை வாக்களிக்க வைக்க வேண்டும் என்று அதே சிந்தனையில் இருக்கிறார்கள்.

கறி விருந்து, சாப்பாடு ,குவாட்டர் பாட்டில் கொடுத்தால், அதற்கென்று ஓட்டு போடும் கூட்டம் இருக்கிறது. பணம் கொடுத்தால் அதற்கென்று ஓட்டு போடும் கூட்டம் இருக்கிறது. இவை நகரத்தை விட கிராமங்களில் தான் இப்படிப்பட்ட மக்கள் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அவசியம் விழிப்புணர்வு தேவை.

நீங்கள் என்னதான் விழிப்புணர்வு கொடுத்தாலும், அவர்களை திருத்த முடியுமா என்பது சந்தேகத்தின் கேள்விக் குறியாகவே உள்ளது. ஏனென்றால், தன்னைப் பற்றி மட்டும் தான் அவர்கள் சிந்திப்பார்கள். ஆடு, மாடு எப்படியோ அதே போல் தான், தனக்கு புல் கிடைத்தால் போதும், தான் சாப்பிட்டால் போதும் ,அந்த மாடு போயி தூங்கிவிடும். பிறகு காலையில் அது சாணியை போட்டுவிட்டு மீண்டும் மெய்வதற்கு செல்லும் .

எங்கே ?எது நடந்தால் என்ன? நாம் நன்றாக இருந்தால் சரி. மேலும், நாட்டில் எங்கேயோ கற்பழிக்கிறார்கள் ,எங்கேயோ கொலை செய்கிறார்கள், எங்கேயோ சண்டை போட்டுக் கொள்கிறார்கள். எங்கேயோ துன்புறுத்துகிறார்கள். நாம் நன்றாக இருக்கிறோம்.

நாடு எக்கேடு, கெட்டு போனால் என்ன? நமக்கு நல்லது செய்கிறார்களா? நமக்கு எந்த தொந்தரவும் இல்லை. நாம் கூலிக்கு போகிறோம் .வேலை செய்கிறோம். கூலி கொடுக்கிறார்கள். யார் வந்தால் என்ன? யார் போனால் என்ன? இப்படி சுயநலமாக நினைக்கக்கூடிய மக்கள் கூட இருக்கிறார்கள்.

இந்த மக்களை திருத்துவது, அதாவது என்னதான் விழிப்புணர்வு கொடுத்தாலும் ,அவர்கள் யார் பணம் கொடுக்கிறார்களோ, யார்? இலவச பொருட்கள் கொடுக்கிறார்களோ, அவர்கள் பின்னால் ஓடுவார்கள்.

மேலும், இவர்கள் எப்போது கொடுப்பார்கள்? என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால், வாங்குபவர்களுக்கும், கொடுப்பவர்களுக்கும் ,இரண்டு ஆண்டு ஜெயில் தண்டனை, அபராதம் கொடுக்க வேண்டும். அது மட்டுமல்ல,

ஒரு தொகுதியில் பணத்தை பெருவாரியாக கொடுத்து வெற்றி பெற்றால், அது செல்லாது என்று அறிவிக்க வேண்டும். மேலும், பாண்டிச்சேரியில் ட்ரோன்கள் பறக்கவிட்டு, பணம் கொடுப்பவர்களை பிடிப்பது போல், இங்கேயும் தேர்தல் ஆணையர் அதை கொண்டு வர வேண்டும்.

மேலும்,ரகசிய கேமராக்கள் ,பல இடங்களில் வைத்து, ஓட்டுக்கு பணம், கொடுப்பவர்களை பிடித்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். வெறும் விழிப்புணர்வு மட்டுமே, ஓட்டுக்கு பணம் வாங்குவதை நிறுத்த முடியாது. மேலும் கடமைக்கு விழிப்புணர்வு என்பது தேவையற்றது ‌. அந்த விழிப்புணர்வால் மக்களுக்கு பயன் இருக்க வேண்டும்.அதனால்,

கடுமையான சட்டங்கள் ,கொண்டு வர வேண்டும். அரசியல் கட்சியினருக்கும், விழிப்புணர்வு தேவை .வாக்காளர்களுக்கு மட்டும் விழிப்புணர்வு என்பது ஒரு பக்கம் பேசுவது போல் ஆகிவிடும் .தவறு இரண்டு பக்கமும் இருக்கிறது.

அதனால், இந்த விழிப்புணர்வு இரண்டு பக்கமும் தேவை என்பதை தேர்தல் ஆணையத்திற்கு மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் தெரிவிக்கும் முக்கிய செய்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *