
மக்களை ஏமாற்ற அதிக ஆசைகளை தூண்டி, அந்த ஆசை வலைக்குள் மக்களை விழ வைத்து ,மோசடி செய்யும் கும்பல் அதிகரித்துவிட்டது.
தான் ஒருவன் வாழ்வதற்காக 100 அல்லது 1000 பேரை கூட ஏமாற்றலாம் என்று நினைக்கிறார்கள். அப்படிப்பட்ட கும்பல் தான் இந்த கிரிப்டோ கரன்சி ,பிட்காயின் போன்ற வற்றின் ஏஜென்ட்களாக இருக்கிறார்கள்.
நீண்ட நாட்களுக்கு முன் எனக்கே லேசான ஞாபகம்தான் வருகிறது சிதம்பரம் கோயிலுக்கு போன இடத்தில் என்னிடம் நிருபராக பணி கேட்டு வந்தவரை என்ன தொழில் என்று கேட்டேன்? அவர் பிட்காயின், கிரிப்டோ கரன்சி போன்றவற்றை செய்வதாக சொன்னார்.
என்னையும் நீங்கள் இதில் முதலீடு செய்யுங்கள். உங்களுக்கு பல லட்சம் கிடைக்கும். லட்சாதிபதியாகவும், கோடீஸ்வரராகவும் ,ஆகிவிடலாம் என்றார்கள். எனக்கு வேண்டாம் என்றேன்.

மேலும், இது பற்றி அவர்களிடம் கேட்டபோது ,எல்லாம் வெளிநாடுகளில் தான், இது பற்றிய தலைமை இருக்கிறது. உங்களுக்கு கரக்டா அந்த தேதி பிரகாரம், பணம் வந்துவிடும் என்கிறார்கள். ஒரு லட்சம் போடுங்க அதிலிருந்து பெருக்கிக் கொண்டே வந்துவிடலாம் என்கிறார்கள்.நான் அவர்களிடம் இதற்கான தலைமை அலுவலகம் மற்றும் எம்டி யார்? அது அவர்களுக்கே தெரியவில்லை.
ஏதோ வந்த வரைக்கும் ,இந்த நாடு, அந்த நாடு என்று சொல்லிவிடுகிறார்கள். இப்படி எல்லாம் மோசடி செய்வதில் கிராமங்களில் இருந்து நகரங்கள் வரை கமிஷனுக்காக, சொந்த ஜாதியாக இருந்தாலும் ,சொந்த உறவாக இருந்தாலும், இன்று பணத்தால் ஏமாற்றப்படுகிறார்கள்.
இதில் தற்போது தென் மாவட்டங்களில் தான் அதிகம் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். வட மாவட்டங்களில் இது பற்றி அதிக அளவில் தெரியவில்லை.
இப்படிதான் இன்றுஇந்த மோசடி கும்பல், முதலில் சிறிய அளவில் ஆரம்பித்து ,அது பெரிய அளவில் பெருகி இருக்கிறது. முதலில் ஐந்து பேர் ,பத்து பேர் ஆரம்பித்து , ஒரு செயின் லிங்க் போல,MLM என்று சொல்வார்களே அதுபோல்,பிறகு 100 பேர் ,பிறகு ஒரு கிராமமே என்று முடிந்து இருக்கிறது.

மேலும் ,இந்த ஏமாற்று கும்பல்,மக்களின் வீக்னஸ் என்ன? என்று நன்றாக புரிந்து கொள்கிறார்கள் .ஒரு லட்ச ரூபா போட்டால் ,இரண்டு லட்சமாக ஒரு மாதத்தில் வரும் என்றால் ஆ ஆ அப்படியா?
மக்கள் சிந்திக்காமல், கம்ப்யூட்டரையும், செல்போனையும் ,வைத்து நாம் பெரிய ஆள் ஆகிவிடலாம் என்று நினைக்கிறார்கள். எப்படியாக முடியும்?

உழைக்காமல் ஆக வேண்டும் என்றால் !அரசியலில் மக்களை ஏமாற்றி அதிமுக ,திமுக கட்சியினர் போன்று கொலையடித்து, அது சட்டப்படி கொள்ளை என்கிறார்கள். அதற்கு நாங்கள் ஏன் கணக்கு காட்ட வேண்டும்?

எங்களுடைய கணக்குத் தனி !எங்களுக்கான சட்டம் தனி !இப்படி தான் நாட்டின் சட்டத்தின் ஓட்டைகளுக்குள், ஒளிந்து கொண்டு ,நல்லவர்களாக, வல்லவர்களாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் மக்களை ஆசை வார்த்தைகளை கூறி அரசியலில் ஏமாற்றுகிறாக்கிறார்கள் .இரண்டு ஒன்று தான். இங்கே தனிநபர் பாதிக்கப்படுகிறார்.

அங்கே நாட்டு மக்களின் முன்னேற்றம், நாட்டின் பொருளாதாரம் ,குறிப்பிட்ட சிலரிடம் போய் சேர்ந்து விடுவதால், பணப்பழக்கம் குறைந்து , படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்து, உழைப்பவர்கள் முன்னேற முடியாமல் ஊரை ஏமாற்றுபவர்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.

இரண்டுமே ஆசை வார்த்தைகள் தான், ஆசை வார்த்தைகளுக்கு மக்கள் ஏமாந்தால், அரசியலும் ஏமாற்றும் !தனிநபர் வாழ்க்கையிலும், ஏமாற்றம்! அதனால் ஏமாற்றுவதற்காகவே அரசியலுக்கு வருகிறார்கள் .அதற்காக அரசியல் கட்சிகளில் பதவிக்கு அளைகிறார்கள்.

அவர்களுடைய தோற்றத்தை பார்த்து, உடம்பை பார்த்து, ஆடைகளைப் பார்த்து ,பேச்சுகளை பார்த்து, எத்தனையோ கிராமங்களில், எத்தனையோ நகரங்களில், அரசியலில் மற்றும் அரசியல் கட்சிக்காரர்களிடம் மக்கள் ஏமாந்து இருக்கிறார்கள்.
இதற்கு காரணம்,அரசியல் என்றால் என்ன ?என்று மக்களுக்கு தெரியாது. அதனால் ,எளிதாக ஏமாற்றுகிறார்கள். இன்னொரு பக்கம் அரசியலில் சொந்த ஜாதி, உறவு இதனாலும் ஏமாறுகிறார்கள்.இது பொய்யல்ல, உண்மை நிஜம்.

மேலும் ,மக்களை ஏமாற்றுவதற்கு அரசியலிலும், இருக்கிறார்கள் .சமூகத்திலும் இருக்கிறார்கள், என்பது தான் இந்த பிட்காயின், கிரிப்டோ கரன்சி, FQL – VG போன்ற பல மோசடி வலை பின்னங்கள் சமூகத்தில் பின்னப்பட்டிருக்கிறது. எனவே,

மக்கள் செல்போன், இன்டர்நெட் ,கம்ப்யூட்டர் , சோசியல் மீடியா, போன்ற எத்தனை மின்னணு சாதனங்கள் வந்தாலும் ,வாழ்க்கை என்பது உழைப்பிலும், உயர்விலும், சந்தோஷத்திலும் ,நிம்மதியிலும், வாழ்வது எப்படி ?என்று சிந்திக்காமல்!
பணம் எப்படி கஷ்டப்படாமல் சம்பாதிப்பது? என்று யூட்யூபில் பார்த்து ஏமாறுவது ?செல்போனில் வரக்கூடிய செய்திகளை பார்த்து ஏமாறுவது? பிட்காயின், கிரிப்டோ கரன்சி ,போன்ற பல ஏமாற்றுக் கூட்டங்கள், ஏஜெண்டுகளாக தங்களை அடையாளப்படுத்தி ,தெரியாத அப்பாவி ஜனங்களை ஆசை வார்த்தைகளை கூறி ,ஏமாற்றினால் ஒரு காலும் நிம்மதியாக வாழ முடியாது.

மேலும்,இன்று எத்தனை பேர் லட்சங்கள் இழந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய வேதனையும், கண்ணீரும் ,இவர்களை சும்மா விடுமா? என்பதை மோசடி பேர் வழிகள் புரிந்து கொள்வார்களா? அது மட்டுமல்ல,
மக்கள் அரசியல்! அரசியல் கட்சியின் ஏமாற்று பேர்வழிகள், பண மோசடி செய்யும் கும்பல்,இவர்களை அடையாளம் தெரியாத வரை !அவர்களுக்கு வாழ்க்கை என்பது ஏமாற்றுமே!
