
திமுக முதல் பல அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் மீது வாக்குத்திருட்டு என்று ஒரு பொய்யான குற்றச்சாட்டை சுமத்திக் கொண்டு பேசி வருகிறார்கள்.

இதற்கு இவர்கள் வாயிலே சொல்லக்கூடாது .எந்தெந்த நகரில்? எந்தெந்த பகுதியில்? எந்தெந்த ஊரில் ?எந்த இடத்தில்? வாக்குத்திருட்டு நடந்துள்ளது? என்பதை நிரூபிக்க வேண்டும்.
அப்படி நிரூபிக்காமல் போனால், இவர்கள்தான் வாக்குத்திருட்டு நடத்த இந்த அரசியல் நாடக கம்பெனி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதிலே, தேர்தல் ஆணையம் இன்னும் ,அதனுடைய வேலையை ஒழுங்காக செய்யவில்லை என்று தான் தெரிய வருகிறது. தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள பி .எல். ஓ அதிகாரிகள் கடமைக்கு வீட்டுக்கு, இரண்டு விண்ணப்ப வடிவங்களை கொடுத்துவிட்டு ,இதை பூர்த்தி செய்து கொடுங்கள் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

நியாயமாக பார்த்தால், அப்போதெல்லாம் ஆசிரியர்கள், ஒவ்வொரு வீடாக சென்று, எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? என்னென்ன வயது? இறந்தவர்கள் எத்தனை பேர்? இருப்பவர்கள் எத்தனை பேர் ?இதையெல்லாம் முறையாக சென்சஸ் கணக்கு எடுப்பார்கள்.
இப்போது அந்த முறை ,மாறி கடமைக்கு கொடுத்துவிட்டு போய் இருக்கிறார்கள். இதில் சில பேருக்கு புரியும். சில பேருக்கு புரியாது. இதை வைத்து கள்ள ஓட்டு போட்டுக் கொண்டிருக்கிற அரசியல் கட்சிகள், அரசியல் செய்து கொண்டிருக்கிறது. இது ஒரு பெரிய பிரச்சினையே அல்ல, ஆனால், பிரச்சனை மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதைப் போலியான ஊடக பிம்பத்தை கார்ப்பரேட் கம்பெனிகள் பெரிதுபடுத்தி விளம்பரப் படுத்திக் கொண்டிருக்கிறது.மேலும்,

சீமான் , திருமாவளவன் போன்ற அரசியல் பேச்சாளர்கள், என்னுடைய ஓட்டை ஆட்சியாளர்கள் எப்படி தீர்மானிக்கலாம்? என்று சம்பந்தம் இல்லாமல் தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் பொன்ராஜ் என்பவர் தேர்தல் ஆணையர் ஐஏஎஸ் படித்தவர் இவர் எப்படி மத்திய அரசின் அடிமையாக வேலை செய்யலாம்?

அப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் எவ்வளவு ஐஏஎஸ் இருக்கிறார்கள் ?அவர்களெல்லாம் அடிமையாக வேலை செய்து கொண்டிருக்கிறார்களா? அரசியல் என்பது தமிழ்நாட்டில் படிக்காதவனுக்கும் படித்தவனுக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசுகிறார்கள்.

வேல்முருகன் போன்றவர் எல்லாம் அரசியல் கட்சி நடத்துவதற்கே தகுதி இல்லாதவர்கள் எல்லாம் தங்களை தகுதி என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் தெரியாதவர்களை வைத்துக்கொண்டு, எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் ,பேசலாம். நீங்கள் பேசும் அரசியல், அவனுக்கு புரிகிறதோ ,இல்லையோ, ஆனால், கைத்தட்டி விசில் அடிக்க தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், தெரிந்தவனை வைத்து உங்களால் அரசியல் பேச முடியுமா? அவன் அப்போதே கேள்வி கேட்பான். ஒன்னு ஜாதி இழுத்துக் கொள்கிறீர்கள் இல்லையென்றால் மதத்தை எடுத்துக் கொள்கிறீர்கள் இல்லை என்றால் தமிழ்நாடு என்பது வேறு நாட்டில் இருப்பதாக நினைத்து பேசுகிறீர்கள். உங்களுக்கு தேவை அரசியல் என்றால் தெரியாதவனுடைய ஓட்டுக்களை குறி வைத்து அரசியல் செய்பவர்கள். இந்த தேசத்திற்காகவோ, மக்கள் நலனுக்காகவோ, நீங்கள் அரசியல் செய்ய தகுதியற்றவர்கள்.
மேலும், சீமான் போன்றவர்கள் அரசியல் வீடியோ கம்பெனி நடத்திக் கொண்டு அந்த காலத்தில் எம் ஆர் ராதா பேசிய வசனங்கள் எல்லாம் உங்களுக்கு தான் இன்றைய காலகட்டத்திலும் அது பொருந்தும் என்பது போல தெரிகிறது. இதை மக்களும் பார்க்கட்டும்.தவிர,
இங்கே யாருமே யாருடைய ஓட்டையும் தீர்மானிக்கவில்லை. தேர்தல் ஆணையம் தான் ஒவ்வொருவருடைய ஓட்டையும் தீர்மானிக்கிறது. தமிழ்நாட்டில் அரசியல் தெரியாத மக்கள் இருப்பதால் ,ஆளாளுக்கு ஒரு கருத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் இப்போது சோசியல் மீடியா வந்த பிறகு, படித்தவனும், படிக்காதவனும் வித்தியாசம் இல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் .தேர்தல் ஆணையம், மத்திய அரசின் அடிமை! இது எல்லாம் அடி முட்டாள்கள் இடம்தான் இந்த முட்டாள்கள் பேச்சு எடுபடும்.மேலும்,
தேர்தல் ஆணையம் இப்படி தவறாக பேசிக் கொண்டிருப்பவர்கள் மீது, மக்கள் மத்தியில் குழப்பத்தை விளைவிப்பவர்கள் மீது, தவறான குற்றச்சாட்டு வைப்பவர்கள் மீது ,ஆதாரத்தைக் கேட்டு, நோட்டீஸ் அனுப்புங்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்.

அதேபோல் ஊடகங்கள், சோசியல் மீடியாக்கள், மக்களை தேர்தல் என்பது ஆளாளுக்கு குழப்பிக் கொண்டிருக்கும் வேலையல்ல. வாய்க்கு வந்ததெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு தேர்தல் ஆணையம் சட்ட நடைவடிக்கை எடுப்பது அவசியமானது. காலத்தின் கட்டாயம்.
கடந்த காலங்களில் இப்படி எல்லாம் யாரும் பேச மாட்டார்கள். மனசாட்சியுடன் பேசுவார்கள் அரசியல்வாதிகள். உண்மையை மட்டுமே பேசி வந்தார்கள். இப்போது பொய்யை மட்டும் தான் பேசுகிறார்கள். உண்மை லட்சத்தில் ஒருவர் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அதனால், எது உண்மை ?எது பொய்? என்பது அரசியல் தெரியாதவர்களுக்கு இன்னும் புரியவில்லை. அவர்கள் குழப்பத்தில் தான் இருக்கிறார்கள். இதற்கு தேர்தல் ஆணையம் அப்படிப்பட்டவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் நாட்டில் பேசுவது அர்த்தமுள்ளதாக இருக்கும்.

மேலும், தேர்தல் என்பது கடுமையான சட்ட விதிகளை உள்ளே கொண்டு வராமல், தற்போதைய காலகட்டத்தில் இந்த அரசியல் கட்சிகள் மக்களை ஏமாற்றிக் கொண்டே இருக்கிறது.
இதில் ஆளும் கட்சி ,ஆளாத கட்சி ,அங்கீகார கட்சி, அங்கீகாரம் இல்லாத கட்சி, என்ற பாகுபாடு இருக்கத் தேவையில்லை. தேர்தல் ஆணையம் ஒரு தனி அதிகாரமிக்க பவர் சென்டர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு, அதன் செயல் திட்டத்தை வகுத்து செயல்பட வேண்டும்.

மேலும், தேர்தல் நெருங்குவதால் இந்த அரசியல் கட்சிகள் கம்பெனிக்காரர்களிடம் தேர்தல் செலவுக்கு என்று பணத்தை வாங்குகிறார்கள்.
வாங்கிய பணத்தை ஒரு ரூபாய் கணக்கு காட்டி, ஒரு லட்சம் ரூபாயை கணக்கில் வராமல் வைத்துக் கொள்கிறார்கள். அதனால் ,தேர்தல் ஆணையம் எந்த ஒரு தனியார் கம்பெனி நிறுவனங்களும், எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் தேர்தல் நிதி கொடுக்கக் கூடாது என்பதை அறிவிக்க வேண்டும்.தவிர ,

அப்படி கொடுக்கும் கம்பெனிகள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் தேர்தல் நிதியை கொடுத்து, அந்த கம்பெனிகள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை அதிக விலைக்கு மக்கள் தலையில் தான் சுமத்துகிறார்கள். இது தடுக்கப்பட வேண்டும்.மேலும்,

பணம் என்பது தேர்தல் செலவுக்காக கோடிக்கணக்கில் ,கருப்பு பணத்தை தேர்தல் நேரத்தில் செலவு செய்யக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக இருக்கட்டும், அங்கீகாரம் இல்லாத கட்சிகளாக இருக்கட்டும், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால், அல்லது அதிக செலவு கணக்கு காட்டினால், சம்பந்தப்பட்ட கட்சியின் வேட்பாளர்கள் மீது தேர்தல் விதிமுறைகளை மீறும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுத்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

மேலும், தமிழ் நாட்டில் வாக்காளர்கள் திருத்தம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இன்னும் அவர்களுக்கு பயிற்சி அளித்து, வீடு வீடாக சென்று வாக்காளர்களின் திருத்தத்தை வாக்காளர்களிடமிருந்து பெற்று ,அவர்களே அதை மேற்கொள்ள வேண்டும்.
அப்படி மேற்கொண்டால் திமுகவின் ஐடி விங் உள்ளே வராது . மேலும், ஆளாளுக்கு அரசியல் கட்சிகளும், பல கருத்துக்களை சொல்லி மக்களை குழப்பிக் கொண்டிருக்கும் வேலைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். தேர்தல் ஆணையம் தேர்தலை முறைப்படி சட்ட விதிகளின் கீழ் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் தேர்தல் என்பது மக்களிடம் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்த முடியும்.
மேலும்,தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஜெயித்தால் தேர்தல் ஆணையமும், ஈ வி எம் மெஷினும் சரியாக வேலை செய்திருக்கிறது என்று பாராட்டுகிறார்கள். தோற்றுவிட்டால்! வாக்கு திட்டு மூலம் தோற்கடிக்கப்பட்டோம் .இது என் மிஷின் மோசடியால் தோற்கடிக்கப்பட்டோம் என்று மீசையிலே மண் ஓட்டவில்லை என்று பேசிக் கொண்டிருப்பார்கள்.மேலும்,
தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஜெயித்தால் தேர்தல் ஆணையமும் ஈ வி எம் மெஷினும் சரியாக வேலை செய்திருக்கிறது என்று பாராட்டுகிறார்கள். வாக்கு திட்டு மூலம் தோற்கடிக்கப்பட்டோம் இது என் மிஷின் மோசடியால் தோற்கடிக்கப்படும் என்று மீசையிலே மண் ஓட்டவில்லை என்று பேசிக் கொண்டிருப்பார்கள்.