நாட்டில் முதன் முறையாக எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக விஜய்க்கு மக்கள் கொடுத்த தீர்ப்பு. இது எப்படிப்பட்ட தீர்ப்பு? – மக்கள் அதிகாரம்! ஆசிரியர் .

அரசியல் ஆன்மீகம் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் 2026 இல் 4 முனை போட்டி நடைபெற்றது. இந்த நான்கு முனை போட்டியிலும் ,திமுக கிட்டத்தட்ட ஒரு 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிக் கூட்டணிகள் ,அதிமுக ஒரு இருபதுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சி கூட்டணிகள் ,தவிர சீமான் ,இத்தனை கட்சிகளும் களத்தில் போட்டி போட்டு உள்ளது.

இந்த போட்டியில் யார் வெற்றியாளர் ?என்று மனசாட்சிப்படி தேர்வு செய்தால், விஜய் மட்டும் தான் வெற்றியாளர் என்று சொல்ல வேண்டும். அவருக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை, அது வேறு.

ஆனால், மக்களுக்கு பணம் கொடுத்து, பல ஆயிரம் கோடிகளை செலவு செய்து, 20 கட்சி கூட்டணிகளை வைத்துக்கொண்டு, அதிமுக, திமுக அரசியல் கட்சிகளால்,வெற்றி பெற முடியவில்லை.

மேலும்,சீமான் இனிமேல் தான் அவருடைய ஓட்டு சதவீதம் தெரியும். எவ்வளவு ஓட்டு சதவீதம் என்று? ஆனால் ,விஜய் ஒவ்வொரு தொகுதியிலும், வேட்பாளரின் முகம் கூட தெரியாது. தவிர,எங்கள் தொகுதியின் வேட்பாளர் எனக்கே கூட தெரியாது. அவர் தொகுதிக்கு அறிமுகமும் கிடையாது.

மேலும்,வேட்பாளராக நிறுத்தப்பட்ட போது தான், அவர் யார் என்று பெயரை தெரிந்து கொள்கிறேன். இந்த நிலைமையில் மக்கள் , அவருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்து இருக்கிறார்கள் என்றால்! அது யாருக்காக? விஜய்க்காகத் தான்.மேலும்,

இந்த நிலை ஏன்? இந்த இரண்டு கட்சிகளுக்கு வந்தது? மக்கள் அதிகாரம் தொடர்ந்து ,இந்த அரசியல் கட்சிகளை பற்றி எழுதி வந்துள்ளது. அதில்,அதிமுக அரசியல் கட்சியை பற்றி பலமுறை எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு சில அறிவுரையாக கூட ,செய்திகள் வெளியிடப்பட்டது.

அதையெல்லாம் சிறிய பத்திரிக்கை என்று எடப்பாடி பழனிசாமி அலட்சியப்படுத்தி விட்டார?. எங்களது இணையதளத்தில் சென்று பார்த்தால், அதற்கு ஆதாரம் இருக்கும்.மேலும், உண்மைக்கு சிறிய பத்திரிக்கை! பெரிய பத்திரிக்கை! என்ற பட்டம் தேவையில்லை. எந்த பத்திரிக்கையில் வந்தாலும் ,அது உண்மைதான்.மேலும்,

ஆட்சி மாற்றம் உறுதி என்று வெளிப்படையாக எழுதினோம். இதை என்னிடம் நேரடியாகவே அதிகாரிகள் மற்றும் நண்பர்கள் கேட்டார்கள், அவர்களுக்கும் விளக்கம் சொன்னேன். இது எமது பத்திரிக்கை வாசகர்களுக்கும் நன்கு தெரியும்.

மேலும்,அதிமுகவின் தோல்விக்கு பிறகாவது எடப்பாடி பழனிசாமி இதைப் பற்றி தெரிந்து கொள்வரா? தவிர,அதிமுகவின் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி தான் முக்கிய காரணம்.

மேலும், திமுகவில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கார்ப்பரேட் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள் மட்டுமே பத்திரிக்கை என்று நினைத்து பேசிக் கொண்டிருந்தவர். அவர்களுக்காக மட்டுமே பத்திரிகையாளர்கள் நல வாரியம் .அது எதற்கு என்றால்?இவர் சொன்ன பொய்கள், அத்தனையும் அவர்கள் நியாயப்படுத்திக் கொண்டு இருந்தார்கள்.

மேலும், மக்களுக்கு உண்மை எது ?என்று புரிந்தும் கூட அந்த தொலைக்காட்சி பத்திரிகைகளுக்கு புரியாமல் இருந்தது.இப்போது அவருக்கும் ,அவருக்கு முட்டுக் கொடுத்த பத்திரிக்கை ,தொலைக்காட்சிகளுக்கும் ,சமூக நலன் ஊடகங்கள் எவ்வளவு வலிமையானது? என்பது புரிந்து இருக்குமா? இது சைலன்ட் கில்லர். மக்களிடம் சித்த மருத்துவம் போல் ஸ்லோவாக வேலை செய்தது.மேலும்,

அடுத்தது, சசிகலாவை ரொம்ப அலட்சியமாக எடப்பாடி பழனிசாமி பார்த்தார். இருப்பினும், அந்த அம்மா இனி எடப்பாடி பழனிசாமிக்கு நாம் யார் ?என்று நிரூபிக்க வேண்டும் என்று தென் மாவட்டங்களில் பத்தாயிரம், 20 ஆயிரம் வாக்குகளை பெறக்கூடிய அளவுக்கு செல்வாக்கு உள்ளவர்களை 10 ,15 தொகுதிகளில் போட்டு, அதிமுகவை பின்னுக்கு தள்ளி வைத்து விட்டார்.

அது இல்லையென்றால், திமுக இன்னும் படு தோல்வியை சந்தித்திருக்கும். இவர்கள் ஓட்டு பிரித்தார்கள் .அவர்கள் கொஞ்சம் ஓட்டு வாங்கினார்கள்.

மேலும், இவ்வளவு அரசியல் போராட்டங்களுக்கு இடையில் விஜய்யின் வரவு ! அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் கொடுத்திருக்கும் ஒரு தீர்ப்பு.

அந்த தீர்ப்புக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பாகவும், தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பாகவும், நிறுவனர் மற்றும் ஆசிரியர் என்ற முறையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ! 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வராக பொறுப் பேற்கும்! அவருக்கு எமது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள். 🙏. 🍀

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *