நீதிபதி சுவாமிநாதன் ஒரு தலை பட்சமாகவும், அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாகவும் நடந்து கொள்கிறார் – திருமாவளவன்.

அரசியல் ஆன்மீகம் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஜி ஆர் சுவாமிநாதனுக்கு எதிராக கொடுக்கப்பட்ட இம் பீச்மெண்ட் நோட்டீஸில், நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் ஒரு தலைப்பட்சமாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும், ஒரு குறிப்பிட்ட வழக்கறிஞர்களுக்கு ஆதரவாகவும், ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு ஆதரவாகவும், தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார் என்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை அதில் சுட்டிக்காட்டி உள்ளோம்.

மேலும், இவர் தொடர்ந்து வழக்குகளை விசாரித்தால், தமிழ்நாட்டில் மேலும் பல குழப்பங்கள் ஏற்படுத்துவார். அதற்கு நேற்று அவர் பிறப்பித்துள்ள உத்தரவே சாட்சி. நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் வரம்புகளை மீறி, அதற்கு தொடர்பில்லாத தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், டி ஜி பி மற்றும் இந்திய மத்திய அரசின் உள்துறை செயலாளர், ஆகியோர் இந்த வழக்கில் சேர்த்து விசாரணைக்கு அழைத்துள்ளார்.இது சட்டத்தை மீறுவதோடு, மத்திய மாநில அரசின் அரசுகளை அவமதிப்பதாகும்.

எனவே, இவர் மீது இம்பீச்மெண்ட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இவர் தன் மீதான விசாரணை தடையின்றி நடப்பதற்கு ஏதுவாக தானே, முன்வந்து பதவி விலக வேண்டும் என்று திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.மேலும்,

திருமாவளவன் மிகவும் சட்டத்தை மதித்து நடக்கக்கூடிய, ஒரு நேர்மையான அரசியல் தலைவர் அப்படித்தான் இவர் பேசியிருக்கிறார். ஆனால், இவர் கட்சியினருடைய ராஜகங்கள் பற்றி பேசினால், அல்லது அதற்கான ஆதாரங்களை காட்டினால், திருமாவளவன் தாமாக முன்வந்து இவருடைய கட்சியை கலைத்து விடுவாரா? இது நான் சொல்லவில்லை, அரசியல் தெரிந்தவர்களின் கேள்வி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *