நீதிமன்ற உத்தரவை விமர்சிக்கக் கூடாது… !மீறினால் கடும் நடவடிக்கை – உயர் நீதிமன்றம்

அரசியல் ஆன்மீகம் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை விமர்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.மேலும்,

உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுகள் குறித்து சமூக ஊடகங்களில் தேவையின்றி விமர்சிக்கக் கூடாது என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.தவிர,

கார்த்திகைத் தீபத்தன்று, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டு இருந்தார்.

மேலும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான உத்தரவுகள் பொதுவெளி மற்றும் சமூக ஊடகங்களில் தேவையின்றி விமர்சனம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தவிர,சமூக ஊடகங்களில் எவ்விதமான விவாதங்களும் செய்யக் கூடாது என்று கூறிய நீதிபதிகள், நீதிமன்ற மரபுக்கு மீறி நடந்துகொள்ளக் கூடாது என்றும் குறிப்பிட்டனர்.

அவ்வாறு மரபுகளை மீறி நடந்துகொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *