புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர்கள்! திமுக அமைச்சர்களை விட மக்களுக்காக இறங்கி, செய்வார்களா? – மக்களின் எதிர்பார்ப்பு.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

முதல்வர் விஜய் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள அமைச்சர்கள் மீது மக்களுக்கு கேள்விக்குறியாகவே இருந்து வருவது ஏன்?

தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சரவையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஒருவர் மட்டும்தான் அமைச்சரவையில் இடம் பெற்று இருந்தவர். அவர் ஓரளவு அனுபவம் உள்ளவர்.

மீதி அத்தனை பேரும் இந்த இலாக்கப் பொறுப் பேற்று, எப்படி செயல்பட போகிறார்கள் ?என்பதுதான் மக்களிடம் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. மேலும் ,முதல்வர் விஜய் படித்தவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு அமைச்சர் பொறுப்புக்களை கொடுத்தால் ஆவது ,விரைவில் அந்தத் துறையைப் பற்றி அனுபவத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள்.

தவிர,இவர்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் பாடம் எடுத்து, அதில் ஒவ்வொன்றையும் புரிந்து ,வெளி வருவதற்கே குறைந்தபட்சம் ஆறு மாத காலமாகும். இது நிர்வாக செயல்பாடுகள் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் ,அந்த துறைகளில் இருக்கக்கூடிய ஓட்டைகள் ,சட்ட ஓட்டைகள், இதையெல்லாம் எப்படி இவர்கள் சரி செய்வார்கள்?

மேலும்,திமுக கொள்ளை அடித்துக் கொண்டிருந்தது, அவர்களுக்கு அந்த ஓட்டை சட்டங்கள் தான் லாபமாக இருந்தது. ஆனால், மக்களின் எதிர்பார்ப்பு அரசியல் மாற்றம், மக்களுக்கான அரசியல்! இதில்,இவர்கள் என்ன மாற்றத்தை கொடுக்கப் போகிறார்கள்? எப்படி கொடுக்க போகிறார்கள்? இதுதான் மக்களிடையே எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி?

மேலும்,தவெகவைச் சேர்ந்த 9 எம்.எல்.ஏ.க்களின் கல்வித் தகுதி குறித்த ஆவணங்கள் தவறானவை என்றும், அவர்கள் குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தியுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின.மேலும்,
இந்த குற்றச்சாட்டுகளுக்குத் தவெக தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ விளக்கங்கள் மற்றும் மறுப்புகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன.

மேலும்,ஏற்கனவே மத்திய அரசில் ஸ்மிருதி ராணி இதுபோல் தவறான பட்டப் படிப்பை காட்டியதால், அவருடைய அமைச்சர் பதவி காலி செய்யப்பட்டது. இந்த குளறுபடி எல்லாம் எதிர்க்கட்சிகள் கையில் எடுத்தார்கள் ,ஆனால், இது அவர்களுக்கு அல்வா சாப்பிட்டது போல் இருக்கும்.

மேலும்,இதைப் பற்றி எல்லாம் விஜய் மேலோட்டமாக எடுத்துக்கொண்டு செயல்பட முடியாது. சினிமாவில் நினைத்ததை செய்வதுபோல், நிஜத்தில் அவ்வாறு செய்ய முடியாது. சட்டத்துக்குள் கட்டுப்பட்டு தான், ஒவ்வொன்றையும் செயல்பட வேண்டி இருக்கும்.

எனவே, இந்த பிரச்சனை ஒரு பக்கம் ,எதிர்க்கட்சிகள் என்ன பிரச்சனை பண்ண போகிறார்கள் ? அதை இவர்கள் எப்படி சமாளிக்க போகிறார்கள்? மேலும்,அதற்கு இவர்கள் இது போன்ற வழிவகைகளை ஏற்படுத்தினால், அதை வைத்து அவர்கள் அரசியல் செய்வார்கள், மேலும்,

இது அத்தனையும் அவர்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல, விஜய் அரசியலின் செயல்பாடு எந்த அளவுக்கு ,மக்களிடம் நல் வரவேற்பை பெறுகிறதோ, அதைப் பொறுத்து தான் ,இவருடைய ஆட்சி தக்க வைத்துக் கொள்ள முடியும்.

மேலும் அதிமுகவின் 25 எம்எல்ஏக்கள் நிலைமை பரிதாபகரமானதாக ஆகிவிட்டது. எனவே,

தமிழ்நாட்டில் மக்களின் எதிர்பார்ப்புக்கு இந்த அமைச்சர்கள் செயல்படுவார்களா?

ஆசிரியர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *