
அரசியல் கட்சிகள் பணத்தை கொடுத்து வாக்குகளை வாங்க முடியுமா? என்ற பயம் வந்துவிட்டது.

அந்த பயம் கடந்த தேர்தல் முதல் திமுக, அதிமுகவுக்கு மக்கள் கொடுத்து விட்டனர். தற்போது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் ,தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி மக்கள் பயத்தை கொடுத்துள்ளனர். இங்கே யாருக்கு வெற்றி என்பது மிகப் பெரிய கேள்வியாகவே உள்ளது?
மேலும்,மக்கள் பிரச்சனைகளை பேசுவதற்கு தகுதியில்லாத அரசியல் கட்சிகள்! ஓட்டுக்காக தேர்தல் என்று வந்தால், நடிப்பும் ,பாட்டும், பேச்சும் அது எங்கிருந்து வருகிறது? சீமான் தேர்தல் வந்தால், பேசியே, பாட்டு பாடியே , தேர்தலில் ஜெயிக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்.

மேலும்,மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்காத அரசியல் கட்சிகள்! இதையெல்லாம் காட்டக்கூடிய பத்திரிக்கை, தொலைக்காட்சிகள், அரசியல் கட்சியினரின் ஊழல்கள், அராஜகங்கள், அநியாயங்கள், இதையெல்லாம் எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் எத்தனை பேர்?

இதற்குப் பின்னாடி போய் நின்று கொள்கிறார்கள். இருப்பினும்,மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். வாக்களிப்பது நம்முடைய உரிமை !அதற்கு பணம் வாங்கி வாக்களிப்பது, நாம் அவர்களின் அடிமை, இது புரியத் தொடங்க ஆரம்பித்துவிட்டது. அதனால்தான், மக்கள் இப்போது தைரியமாக கேள்வி கேட்கிறார்கள்.

இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், அரசியல் கட்சிகள் தினறிக் கொண்டிருக்கிறார்கள். வெற்றி வாய்ப்பு யாருக்கு? என்பது இரண்டு தொகுதிகளிலும், கடும் போட்டியாக தவெக விற்கும் ,அதிமுக விற்கும், இருக்கும் நிலையில், திமுக மூன்றாவது இடத்திற்கு செல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இங்கே இரண்டு தொகுதிகளிலும், வெற்றி பெற்ற வேட்பாளர்களே !களத்தில் நிற்பது தவெக விற்கு ஒரு மைனஸ். இதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி வருகிறது.
இது தவிர, மக்கள் எந்த மாற்றத்தை எதிர்பார்த்தார்களோ ,அந்த மாற்றத்தை தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில் கொண்டுவர முடியாததும், இதற்கான முக்கிய பின்னடைவு.

மேலும்,திமுக ஆட்சியில் என்ன தவறுகள் நடந்ததோ, அதுவே தொடர்வதற்கு மக்கள், தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களிக்கவில்லை என்பதை எப்போது அவர்கள் புரிந்து கொள்வார்கள்?

மேலும்,இதில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது கணிக்க முடியாத தேர்தலாக தான் இந்த இடைத்தேர்தலா…?