
திமுக அரசு மக்களிடம் இலவசத்தின் மூலமும்,பொங்கள் தொகுப்பு, மூளை சலவு செய்யக்கூடிய பேச்சாளர்கள் மூலம், ஓட்டுக்களை பெற்று விடலாம். மேலும்,தி.மு .க கட்சியினர் வீடு, வீடாக சென்று பணத்தை கொடுத்து ஓட்டுக்களை வாங்கி விடுவார்கள் என்று குருட்டு நம்பிக்கையில் கூட இருக்கலாம். ஆனால், இவர்களுடைய திட்டம் பலிக்குமா? இது தவிர, தற்போதைய தேர்தல் வாக்குறுதிகள் ,ஊடகச் செய்திகள் மற்றும் பிரச்சாரங்கள், பலன் அளிக்குமா? இது மிகவும் கஷ்டமானது தான்.

ஏனென்றால் !இது பற்றி மக்களிடம் மக்கள் அதிகாரம் பத்திரிகை, ஆய்வு செய்த போது, மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். சென்னையைப் பொறுத்தளவில் சுமார் பத்து லட்சத்திற்கும், மேற்பட்ட ஆட்டோக்கள் மற்றும் கால் டாக்ஸி போன்ற பல வகை வாடகை வண்டிகள் ஓட்டுபவர்கள், சொந்தமாக வைத்திருப்பவர்கள், திமுகவுக்கு எதிரான மன நிலையில் இருக்கிறார்கள் என்பது அவர்கள் தெரிவிக்கின்ற உண்மைகள் .

மேலும், கடந்த வாரம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் சுமார் 2500 ரூபாய் மதிப்புள்ள உங்கள் தொகுப்புகளை இலவசமாக கொடுத்திருக்கிறார்கள். அதில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான யூனிபார்ம் மற்றும் மளிகை பொருட்கள் எல்லாம் சேர்ந்து ரூபாய் 2500 , மதிப்புள்ள பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது கூட கட்சியினரா? என்று பார்த்து ,பார்த்து கொடுத்தார்களாம் ,இவர்கள் சென்னையை பொருத்தமட்டில்,சுமார் 50 லட்சம் வாக்குகள், தற்போதைய சூழ்நிலையில் திமுகவுக்கு எதிராக உள்ளது.

அது மட்டுமல்ல, அவர்கள் சொல்வது அடுத்த முறை திமுக வந்தால், நாங்கள் இந்த ஆட்டோ ஓட்டிக் கூட பிழைக்க முடியாது . மேலும்,இதையும் பிடுங்கிக் கொண்டு, தெருவில் விட்டு விடுவார்கள் என்கிறார்கள். அந்த அளவுக்கு வெறுப்பில் இருக்கிறார்கள் ,

இது தவிர,திமுக வாக்குகளிலே 50 சதவீத வாக்குகள் திமுகவுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்கின்றனர் திமுகவினர் . மேலும், அவர்கள் சொல்வது நாட்டையே நாசமாக்கி விட்டார்கள். இதுதான் அவர்கள் வாயில் இருந்து வருகிறது.

இது தவிர, பெண்கள் போதைப் பொருள் கலாச்சாரம் மற்றும் பெண்களின் பாதுகாப்பு ,சட்டம் ஒழுங்கு பிரச்சனை ,இதைப் பற்றி சிந்திக்கும் அளவில் முக்கிய பிரச்சனையாக பெண்கள் பார்க்கிறார்கள்.

மேலும், அடுத்தது, மருத்துவத்துறை மிக, மோசமான சூழ்நிலையில் நிர்வாகம் இருந்து வருகிறது.மற்றொரு புறம் ,அரசு ஊழியர்கள் பென்ஷன் , போக்குவரத்து தொழிலாளர்கள்,ஆசிரியர்கள் போராட்டம், இவையெல்லாம் எப்படி திமுக எதிர் கொள்ளப் போகிறார்கள்? தவிர, பஞ்சாயத்து செயலாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள், இப்படி பல்வேறு துறை சார்ந்தவர்கள் , அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராடுகிறார்கள். இதையெல்லாம் தற்போதைய அரசால் அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற முடியுமா? கஷ்டமான ஒன்று. இருப்பினும்,

உண்மையிலே பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஏதாவது கருணை அடிப்படையில் ஆவது, திமுக அரசு குறைந்த ஊதியத்தில் ஆவது அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்திருக்க வேண்டும்.
மேலும், திமுக அரசு அவர்களுக்கு தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை நிறைவேற்றுவார்கள் என்று நம்பினார்கள். நம்பியவர்களை ஏமாற்றி விட்டார்கள். அது மட்டுமல்ல,
திமுக அரசு கார்ப்பரேட்டுக்குத்தான் முக்கியத்துவம் தருகிறது என்று ஆட்டோ ஓட்டுநர்கள் முதல் சமூக நலன் பத்திரிகைகள் வரை இதைத்தான் தெரிவிக்கிறார்கள்.
தவிர,பிஜேபி கார்ப்பரேட்டுத் தான் முக்கியத்துவம் தருகிறார்கள் என்று திமுகவின் கூட்டணி கட்சிகள், மக்களிடம் பேசியதை மறுக்க முடியாது. ஆனால், இன்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே கார்ப்பரேட்டை தான் ஆதரிக்கிறார்கள் என்று மக்கள் பேசுகிறார்கள் . மேலும்,

இதைவிட ஒரு முக்கியமானது, காவல்துறையை மக்களின் பாதுகாப்பிற்கு பயன்படுத்தாமல், இவர்களுடைய சுயநலத்திற்காக அவர்களை அடியாட்கள் போல, ஆக்கிவிட்டார்கள். அதாவது மக்கள் தங்களுடைய உரிமைக்காக போராடும் போது, அவர்களை ஒடுக்க காவல்துறையை திமுக அரசு பயன்படுத்திக் கொண்டிருக்கிறது .
இவ்வளவு பிரச்சினைகளை, இப்போது கடைசி நேரத்தில் நல்லவர்கள் வேஷம் மற்றும் பேச்சுக்கள் ,திமுகவின் பிரச்சாரங்கள், இதையெல்லாம் மீறி இந்த தேர்தலில் மக்களிடம் எடுபடுமா?