மத்திய மாநில அரசின் செய்தித்துறை கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கும், சாமானியர்கள் நடத்தும் பத்திரிகைகளுக்கும் ஒரே விதிமுறையா? பத்திரிக்கைகளை, வரைமுறை படுத்தி, விதிமுறை மாற்றம்! நாட்டில் சமூகத்தின் மாற்றத்திற்கானது.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

மத்திய மாநில அரசின் செய்தித்துறை! கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கும் ,சாமானியர்களின் பத்திரிகைகளுக்கும், விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வருவது, நாட்டில் சமூக மாற்றத்திற்கான முக்கியத்துவமானது என்பதை மத்திய மாநில ,அரசின் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் .

மேலும்,பத்திரிக்கைத்துறை என்பது மக்களுக்கானதாக இருக்க வேண்டும். அதுதான் சமூக மாற்றத்தின் முக்கியத்துவமானது. ஆனால், கார்ப்பரேட் பத்திரிகைகள் ஆட்சியாளர்களின் நலங்களுக்காகவும், அரசியல் கட்சிகளின் நலன்களுக்காகவும், சலுகை, விளம்பரங்களுக்காகவும், தங்கள் பத்திரிகை ,தொலைக்காட்சிகளை பத்திரிக்கையின் நோக்கத்தை மாற்றி, இதனால் வரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதில், தற்போது பத்திரிக்கை துறையில் ,கால மாற்றத்தின் வளர்ச்சியால், இணையதள பத்திரிகை முக்கியத்துவம் ஆனதாக பத்திரிக்கை துறையில் வளர்ந்து வருகிறது.

மேலும்,இந்த இணையதள பத்திரிகைகள், பத்திரிக்கை துறையின் (Digital/Online News Media )வாக தற்போது அச்சு ஊடகங்களை விட இணையதள பத்திரிகைகள் (websites) பெருகிவிட்டன. இவற்றுக்கு சர்குலேஷன் என்ற அச்சு பிரிதிகள் கிடையாது.

எனவே, தற்போது அரசு புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளதாக தகவல் .இருப்பினும், மக்கள் அதிகாரம் தொடர்ந்து இணையதள பத்திரிகையின் முக்கியத்துவத்தை மத்திய ,மாநில அரசுக்கு எடுத்துரைத்து வருகிறது.

அந்த வகையில், தற்போது மத்திய அரசு! இணையதளத்தின் பார்வையாளர்களையும், அதனுடைய சந்தாதாரர்களையும் ,கணக்கில் எடுத்துக் கொள்வதாக தற்போது விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், சிறு பத்திரிகைகளுக்கு முன்னுரிமையும் ,சலுகைகளும் வழங்கப்படுகின்றன என்பதை மத்திய அரசின் செய்தித் துறை அரசாணை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

அது எப்படி என்றால் (unique users) தனித்துவமான வாசகர்கள், மற்றும் (Page Views ) பக்கம் பார்வைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

மேலும் ,இதை சரிபார்க்க Google analytics அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட டிஜிட்டல் தணிக்கை கருவிகள் பயன்படுத்தப்படுவதாக மத்திய அரசின் செய்தித் துறையிலிருந்து வெளிவரும் தகவல்.

மேலும், அச்சு ஊடகங்களில்,சிறிய பத்திரிகைகளுக்கு சர்குலேஷனில் தளர்வு ஏற்படுத்தி இருப்பதாக வரும் தகவல் என்ன ?என்றால், தினசரி சிறு பத்திரிகைகள் 2000 முதல் 5000 பிரதிகள் வரை விநியோகம் செய்தாலே, அரசின் விளம்பர பட்டியலுக்கு விண்ணப்பிக்க தகுதியானது.

தவிர, இதன் கணக்கு வழக்குகளை, கார்ப்பரேட் பத்திரிக்கை நிறுவனங்கள், கண்டிப்பாக பெரிய ஆடிட்டர் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், மிகச் சிறிய பத்திரிகைகளுக்கு மாவட்ட அளவில் உள்ள பட்டய கணக்காளர் (Chartered Accountant certificate ) போதுமானது. இதை அரசு அதை ஏற்றுக் கொள்கிறது.

தவிர ,இந்த விளம்பர ஒதுக்கீடு அதாவது( Reservation in ads) மத்திய அரசின் விளம்பர கொள்கைப்படி ,அரசு வழங்கும் விளம்பர பட்ஜெட்டில் குறிப்பிட்ட சதவீதம் உதாரணமாக (15% முதல் 30% வரை) சிறு மற்றும் நடுத்தர பத்திரிகைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.

ஆனால், திமுக ஆட்சியில் ,இந்த சட்டங்கள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டு, அவர்களுக்கு வேண்டிய பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மட்டுமே ,அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகைகளாக இருந்துள்ளது. ஏன் பத்திரிக்கையாளர்கள், நலவாரியமே திமுக நல வாரியம் ஆக தான் செயல்பட்டது.

இதற்கு செய்தித் துறை அதிகாரிகளும், திமுக கட்சியினராகவே செயல்பட்டார்கள். இன்னும் பலர் செய்தித் துறையில் அவர்கள் மாற்றப்படாமலே இருப்பது, இந்த மாற்றங்கள் கொண்டு வருவதற்கு ,அவர்கள் முட்டுக்கட்டையாகவே இருப்பார்கள்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால்? அரசு அடையாள அட்டைக்கு சென்னையில் ஒரு பத்திரிக்கை! மத்திய அரசின் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்து இருந்துRNI வாங்கி இருந்தால் தான் ,அவர்களுக்கு அரசின் அடையாள அட்டை கொடுக்க முடியும் என்று சொன்னவர்கள்.

பிறகு, நான் மத்திய அரசின் அரசாணை கொண்டுவந்து அவர்களிடம் கொடுத்து காண்பித்த பிறகு தான் ஒத்துக் கொண்டார்கள். இதுவே எத்தனையோ பத்திரிகைகளுக்கு தெரியாமல் இவர்கள் சொல்வது தான் சட்டமாக கேட்டுக் கொண்டு இருந்தார்கள். அப்படி என்றால் இந்த அதிகாரிகள் கார்ப்பரேட் ஏஜென்ட்களின் பிரிதிநிதிகள் ஆகத்தான் செயல்படுகிறார்கள். காரணம் அவர்களின் 30% கமிஷன்.

மேலும்,மத்திய அரசின் விதிமுறைகளையும் ,மாநில அரசின் விதிமுறைகளையும், கருத்தில் கொண்டு செய்தித்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? அது மட்டுமல்ல,

பாண்டிச்சேரி மாநிலத்தில் எல்லா பத்திரிகைகளுக்கும் சமமாக சலுகை, விளம்பரங்கள் அரசின் அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், இங்குதான் பத்திரிக்கை துறை! அரசியல் கட்சி துறையாக மாற்றிய அவலம் செய்தித் துறைக்குள், இருப்பதால்தான் நாட்டில் ஊழல்வாதிகள், மோசடி பேர்வழிகள், ஊழல்கள் ,அரசியலில் தலைவிரித்தாடுகிறது.

இதற்கு யார் காரணம்? செய்தித்துறை இதற்கு முக்கிய காரணம், என்பதை தகுதியான பத்திரிக்கையாளர்கள் தெரிவிக்கும் உண்மை. இனியாவது செய்தித் துறையில் ,தமிழக வெற்றி கழகத்தின் தலைமையில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசின் முதல்வர் ஜோசப் விஜய் ,இந்த மாற்றத்திற்கான செயல்முறை திட்டத்தை வகுப்பரா? சமூக நலன் பத்திரிகைகளின் எதிர்பார்ப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *