முதல்வர் விஜய் தமிழ்நாட்டு சீனியர் ஐஏஎஸ் களை தலைமைச் செயலாளராக நியமிக்காமல் , ஆந்திராவை சேர்ந்த சாய் குமாருக்கு அதிகம் முக்கியத்துவம் தருவது ஏன்?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் ரிசன்ட் போஸ்ட்

தமிழ்நாட்டில் அனுபவம், திறமை ,தகுதி உள்ள ஐஏஎஸ் களுக்கு தலைமைச் செயலாளராக முக்கியத்துவம் தராமல், வேறு மாநிலத்திலிருந்து வந்தவர்களுக்கு தமிழக முதல்வர் விஜய் ஏன் முக்கியத்துவம் தருகிறார்? தமிழ்நாட்டில் எத்தனையோ சீனியர் ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள்.

அவர்களில்,தற்போதைய கூடுதல் தலைமைச் செயலாளர் விஜயகுமார் ஐஏஎஸ் 1993 பேட்ச்! எவ்வளவு ஷார்பானவர்? அவரைப் பற்றி விசாரித்த போது, உட்கார்ந்த இடத்திலே அவர் எல்லா ஐஏஎஸ் பெயரை சொல்லி, கூப்பிடக் கூடிய தகுதி உள்ளவர் என்கிறார்கள் ஐஏஎஸ் வட்டாரம்.

தவிர,உட்கார்ந்து இடத்திலேயே வேலையை வாங்கி விடுவாரம். இப்படிப்பட்ட திறமைமிக்க ஐஏஎஸ் அதிகாரிகளை ஏன்? தலைமைச் செயலாளராக நியமிக்க கூடாது ? இதற்குள் இருக்கும் அரசியல் என்ன?

மேலும்,அவருடைய சர்வீஸ் ரெக்கார்டு அதற்கான அனைத்து தகுதிகளும், சீனியாரிட்டிகளும் இருக்கிறது என்பதுதான் எனக்கு கிடைத்த தகவல். தவிர,இவரைப் பற்றி நான் சேகரித்த தகவல்கள் மக்களுக்கு தெரிய வேண்டும்.

மேலும், முதல்வர் விஜய் தமிழ்நாட்டில் படித்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களை தலைமைச் செயலாளராக நியமியுங்கள். அதுதான் தமிழ்நாட்டுக்கு பெருமை, தமிழ் மக்களுக்கும் பெருமை. மேலும்,

இவர் எந்தவித அரசியல் சார்பும் இல்லாதவர்.
டாக்டர் S. விஜயகுமார், IAS — தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.
இவர் 1993-ஆம் ஆண்டு ஐ ஏ எஸ் பேட்ச்
மூத்த அதிகாரி

மேலும், இவருக்கு தலைமைச் செயலாளர் பதவிக்கான அவருடைய சர்வீஸ் ரெக்கார்டு என்ன சொல்கிறது?

இவர் தற்போது உயர்நிலை Additional Chief Secretary நிலையில் உள்ளார். தொழில் மற்றும் முதலீட்டு நிர்வாகத்தில் மிக முக்கியமான பொறுப்பு
தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அவர் Additional Chief Secretary to Government, Industries, Investment Promotion & Commerce Department

மேலும், SIPCOT-ன் அதிகாரப்பூர்வ Board பதிவிலும் இவர் Chairman, SIPCOT மற்றும் Industries, Investment Promotion & Commerce Department-ன் Additional Chief Secretary ஆவார் .

SIPCOTஇது சாதாரண துறை நிர்வாகப் பதவி அல்ல. தொழில் முதலீடு, தொழிற்பூங்காக்கள், நிலம், உட்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு, முதலீட்டாளர்களுடன் ஒருங்கிணைப்பு போன்ற பல துறைகள் ஒன்றோடொன்று இணையும் மிக முக்கியமான நிர்வாகப் பொறுப்பு.

மேலும்,தொழில்–முதலீட்டு சூழலை வலுப்படுத்தும் அனுபவம்
2026 மே மாதத்தில் Southern India Chamber of Commerce and Industry அவருடன் நடத்திய கலந்துரையாடலில், தமிழ்நாட்டின் industrial, technological and international trade ecosystem தொடர்பான முக்கிய முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக இவரைப் பற்றி கிடைத்த தகவல்.

மேலும்,
தொழில் வளர்ச்சியில் ,நிர்வாக ரீதியாக அணுகும் அனுபவம், அவருக்கு இருப்பதைப் பார்க்க முடிகிறது.

மேலும்,பல்வேறு நிர்வாகப் பொறுப்புகளில் அனுபவம்,
அவருடைய பணிப்பதிவில் Secretary, Commissioner, Additional Chief Secretary, Chairman/Managing Director போன்ற பல்வேறு உயர்நிலைப் பொறுப்புகள் இருந்ததாக , அவரைப் பற்றிய தகவல். மேலும்,
தலைமைச் செயலாளர் என்பவர் ஒரு குறிப்பிட்ட துறையின் செயலாளர் மட்டுமல்ல, முழு மாநில நிர்வாகத்தையும், ஒருங்கிணைத்து செயல்பட வேண்டியவர்.

அந்த வகையில் பல்வேறு துறைகளில் நிர்வாக அனுபவம் பெற்றவர். தலைமைச் செயலாளருக்கான தகுதியும், நிர்வாக அனுபவமும், அவருடைய சர்வீஸ் ரெக்கார்ட் சொல்கிறது.

எனவே,முதல்வர் விஜய்! தமிழ்நாட்டு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதுதான் சமூக நலன் பத்திரிகைகளின் கோரிக்கை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *