ராகவா லாரன்ஸ் நடிகராக இருந்தாலும், சமூக சேவை செய்பவர், இப்படிப்பட்டவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் – மக்கள் அதிகாரம் ஆசிரியர்.

அரசியல் ஆன்மீகம் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழ்நாட்டில் அரசியலை கேவலப்படுத்தியவர்கள் ,ரவுடிகளும், சுயநலவாதிகளும் ,ஊழல்வாதிகளும், அரசியல் கட்சி என்ற ஒரு லேபில் வைத்துக் கொண்டு, மக்களை ஏமாற்றி கொள்ளை அடிக்க வந்த கூட்டமாகத் தான் அவர்களைப் பார்க்கிறேன்.

மேலும்,அரசியலுக்கு அர்த்தம் தெரியாமல் வந்து விட்டு, அரசியல் தெரியாதவர்களிடம் பணம் கொடுத்து கொண்டு ஜெயித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை இந்த கார்ப்பரேட் மீடியாக்கள் விளம்பரப்படுத்தி , அவருடைய ஊழல்களையும், அராஜகங்களையும் நியாயப்படுத்தி, தமிழ்நாட்டின் அரசியலை மிக கேவலமாக கொண்டு சென்றதில், இந்த கார்ப்பரேட் ஊடகங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. இது தகுதியான பத்திரிக்கையாளர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை .

மேலும்,அவர்கள் அரசியலுக்கு தகுதியானவர்களா ?அல்லது நேர்மையானவர்களா ?அதைப்பற்றி எல்லாம் சொல்லாமல், இவர் அவரைப் பற்றி இதை சொன்னார் ,அதைச் சொன்னார், அதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்? இது தவிர, இன்று ஜி கே வாசன் அதிமுக பிஜேபி யின் கூட்டணியில் விலகுவதாக சொன்ன செய்தி பெரிய அளவில் விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

மேலும்,இவர் விலகினால் என்ன? விலகாவிட்டால் என்ன? அதனால், மக்களுக்கு என்ன பயன்? இதுதான் கார்ப்பரேட் ஊடகத்தின் உண்மையான நிலை! இதுக்கு அர்த்தம் தெரியாதவன் எல்லாம் தன்னை ஜர்னலிஸ்ட் என்று சொல்லிக் கொள்வார்கள். அதனால், செய்தித் துறைக்கு என்னை போன்ற தகுதியான பத்திரிகையாளர்கள்! பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் முக்கிய பொறுப்பில் இடம் பெற வேண்டும்.

அப்போதுதான் இதையெல்லாம் சீர் செய்ய முடியும். இதை தமிழக முதல்வரின் கவனத்திற்கு இச்செய்தியை தெரிவிக்கிறேன். மேலும், அவருக்கு இது சம்பந்தமாக, மனுவும் அளிக்க இருக்கிறேன் .

எனவே, நான் இந்த பொய்யும் போலியும் ஊடக பிம்பத்திற்கு பயப்படுபவன் அல்ல. அதையெல்லாம் அரசியல் தெரியாதவனும், பத்திரிக்கை தெரியாதவனும் ,தான் பார்த்துக் கொண்டிருப்பான். இதை வைத்து பத்திரிகை வியாபாரம் செய்து மக்களை ஏமாற்ற முடியும் .ஆனால், தெரிந்தவர்களை ஏமாற்றுவது கடினம்.

மேலும்,இதையெல்லாம் ஒரு மீடியா என்று தகுதி வாய்ந்த பத்திரிகையாளர்களிடம் பேச முடியாது. ஊரை ஏமாற்றுபவனுக்கு இவர்கள் பத்திரிக்கையும், தொலைக்காட்சியும், நடத்திக் கொண்டு அவர்களை வைத்து இவர்கள் பத்திரிகை வியாபாரம் நடத்துவார்கள்.

இவர்களுக்கு சர்குலேஷன் சட்டத்தின் மூலம் ,அரசின் சலுகை ,விளம்பரங்கள் கொடுக்க வேண்டும். செய்தி துறையில் முட்டாள்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த முட்டாள்களுக்கு பத்திரிக்கை என்றால் எது ?என்று தெரியாது. அரசு செய்தி தான் தெரியும் . இந்த அரசு செய்தி போடுகிறார்கள் என்று மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் இவர்கள் அவர்களுக்கு கொடுத்து, வாக்களிக்கும் மக்களையும், ஏமாற்ற இவர்கள் துணை போய்க் கொண்டிருக்கிறார்கள்.

இதை சொல்வதற்கு தகுதியான சமூக நலன் பத்திரிகைகள் கூட அதிகம் இல்லை .அவர்களுக்கும் அர்த்தம் தெரியாமல், பத்திரிக்கை நடத்திக் கொண்டு, நானும் பத்திரிக்கை ,நானும் RNI வாங்கி பத்திரிகை நடத்திக் கொண்டிருக்கிறேன் என்று, போலியான பத்திரிக்கை பிம்பத்தில், சேர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கும் கூட்டமும் இருக்கிறது.

மேலும்,ஐ.டி .கார்டு இருந்தால், பத்திரிக்கை என்று சொல்லிக் கொண்டு திரியும் கூட்டமும் இருக்கிறது. இந்த போலிகள் தான் பத்திரிக்கை துறையும், பொதுமக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது .

மேலும் ,ராகவா லாரன்ஸ் எத்தனையோ பேருக்கு மருத்துவ உதவி செய்திருக்கலாம். எத்தனையோ பேருக்கு ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி வசதி இருக்கலாம். அதுவெல்லாம் கூட பத்திரிக்கை கிலோ தொலைக்காட்சியிலோ செய்திகள் வெளியிட்டு, அதிகம் விளம்பரப்படுத்தியது இல்லை.

ஆனால் ,எங்களுடைய உறவினர்களில் ஒரு குழந்தைக்கு 3 லட்சம் அவருடைய டிரஸ்ட் மூலம் அந்த குழந்தைக்கு பணம் கொடுத்திருக்கிறார். அந்த குழந்தைக்கு அந்த மருத்துவமனையில் சுமார் பத்து லட்சம் செலவாகி உள்ளது. இவர் யார் என்றே தெரியாமல் இவருடைய டிரஸ்டிலிரந்து, மூன்று லட்சம் கொடுத்திருக்கிறார். உண்மையிலேயே பாராட்ட வேண்டிய விஷயம் .

இது தவிர, நிறைய குழந்தைகளுக்கு ஹார்ட் ஆபரேஷன் 5 லட்சம், 10 லட்சம் என்று ஜாதி, மதம் பார்க்காமல், உதவி செய்திருக்கிறார். மேலும், என்னுடைய மக்கள் அதிகாரம் பேஸ்புக்கிலும், இணைந்து இருக்கிறார். சில தினங்களாக இவர் மக்களிடம் நான் அரசியலுக்கு வரலாமா? என்று கருத்து சொல்லுங்கள் என்று கேட்டிருந்தார்.

நான் இவரைப் போன்ற நபர்கள் தான் அரசியலுக்கு வர வேண்டும். அப்போது தான் அரசியல் தூய்மையானதாகவும், நேர்மையானதாகவும், மக்களுக்காகவும், இருக்கும் என்று நம்புகிறேன்.

மேலும்,இவர் எந்த தொகுதியில் வேட்பாளராக நின்றாலும், அந்த தொகுதி மக்கள் கொடுத்து வைத்தவர்கள். தவிர, தவெக வில் திருவள்ளூர் தொகுதிக்கு அருண்குமார் என்ற ஒரு டாக்டரை ஜோசப் விஜய் நியமித்தார். அவர் வெற்றி பெற்று, அதிமுக ,திமுக பாணியில் ஊர் ,ஊராக நன்றி தெரிவிக்க பத்து கார்களை வைத்துக்கொண்டு, கார்ப்பரேட் மீடியாக்களில் ஷோ காட்டிக் கொண்டிருக்கிறார். இந்த அரசியல் எல்லாம் மக்களுக்கான அரசியல் அல்ல.

மேலும் எங்களைப் போன்ற பத்திரிகைகளை மதிக்காத இவர், ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்பதை தெரிந்து கொண்டேன் .முதல்வர் விஜய் இதையெல்லாம் உங்கள் கவனத்தில் எடுத்து, தகுதியான பத்திரிகைகளுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும், இவர்கள் எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துங்கள்.

எனவே, எங்களுக்கு தெரியும், இவருடைய அரசியல், வியாபார அரசியல் !இவர் சமூக அரசியல் செய்ய வந்தவர் அல்ல . மேலும், இவர்களைப் போன்றவர்கள், இந்த கார்ப்பரேட் ஊடகங்களில் ஒளிந்து கொண்டு, மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள்.

ஆனால், ராகவா லாரன்ஸ் போன்ற நல்ல சேவை மனம் கொண்டவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அப்போதுதான் மக்களுக்கான ஆட்சி கிடைக்கும்.எனவே, மக்கள் அதிகாரம் பத்திரிக்கை சார்பில், ராகவா லாரன்ஸ்சுக்கு மனப்பூர்வமான நல் வரவு வாழ்த்துக்கள் -ஆசிரியர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *