வ. உ .சிதம்பர பிள்ளை போல் தமிழகத்தில் ஒரு சுதந்திர தியாகி வாழ முடியுமா?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பயணங்கள் பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

வ .உ .சி யின் பிறந்த நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் விஜய் ,அவரை நினைவுகூர்ந்து வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்

ஆங்கிலேயர்களை எதிர்த்து வாழ்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி . வ .உ. சிதம்பரம் பிள்ளை நாட்டுக்காக தன்னுடைய சொத்துக்களை எல்லாம் இழந்தார்.

இவருடைய சுதந்திரப் போராட்டம்! சிறையில் பட்ட வேதனை ,ஆங்கிலேயர்களால் அடித்து துன்புறுத்தப்பட்ட வேதனை, இன்று வாழ்கின்ற நம் மக்களுக்கு ஒரு நிமிஷம் கூட அதை நினைத்துப் பார்க்க நேரமெல்லாம் இருக்கிறது.

இவர்களெல்லாம் அவ்வளவு பெரிய துன்பங்களை அனுபவித்ததால் தான், இன்று சுதந்திர காற்றை நாம் சுவாசிக்கிறோம். அது மட்டுமல்ல, சிதம்பரம் பிள்ளை சிறையிலிருந்து வெளிவந்தவுடன் அவரை வரவேற்க பத்து பேர் கூட இல்லையாம்.

அப்போதே நல்லவர்களுக்கு அரசியலில் எப்படிப்பட்ட வரவேற்பு இருந்தது? என்பது இதன் மூலம் தெரிகிறது. அதன் பிறகு ,இவர் அன்றாட வாழ்க்கைக்கே போராட வேண்டிய காலகட்டத்தில் ,பிறரிடம் கையேந்த வேண்டிய நிலைமை வந்து விட்டது. ஒரு கப்பலை வைத்து நிர்வாகம் செய்த ஒருவருக்கு நேர்மை அவருக்கு அளித்த பரிசு! தன் கடைசி நேர வாழ்க்கை எவ்வளவு துன்பகரமானது என்பதை எழுதி வைத்துவிட்டு போயிருக்கிறார். மேலும்,

அந்த மாமனிதரைப் பேச நாட்டில் ஆள் இல்லை. ஆடம்பரத்தில் வாழ்ந்த அவருடைய வாழ்க்கையில் இறுதி காலகட்டத்தில்,அவருடைய வாழ்க்கை எவ்வளவு எளிமையானது? ஆடம்பரம் இல்லாமல் வாழ்ந்து விட்டுப் போனார்.

அதே போல் தான் ,அப்துல் கலாம் தான் ஜனாதிபதி ஆன பிறகு கூட, ஒரு பத்து கோட்டு வாங்கி வைத்துக் கொள்ளவில்லை. இவர்களெல்லாம் மாமனிதர்கள் ,மதங்களைக் கடந்து ,இனங்களைக் கடந்து ,இவர்கள் பிறவி எடுத்த நோக்கம் ,சமுதாயத்திற்கு அர்ப்பணிப்பு செய்துவிட்டு போனவர்கள்.

ஆனால், இன்றைய தலைமுறைகளும் ,கடந்த கால தலைமுறைகளும், வாழ்கின்ற இக்காலத்தில், மாமனிதர்களையும், நல்லவர்களையும், மறந்ததன் விளைவு என்று அரசியலில் கொள்ளை கூட்டத்தினரால் ,கதறிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் கொள்ளை கூட்டங்களை நல்லவர்களாக, வல்லவர்களாக பேசுவதை நமது கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் எந்த அளவுக்கு அவர்களை சமுதாயத்தின் அர்ப்பணிப்பாளர்களாக காட்டுகிறார்கள் ?அவர்கள் பேசும் பொய்களை எல்லாம் நியாயப்படுத்துகிறார்கள் ?

உண்மை மக்களிடம் எப்போது மறைக்கப்பட்டதோ !அப்போதே அவர்களுடைய வாழ்க்கையிலும் துன்பங்கள், இருள் சூழ்ந்து கொண்டு இப்படிப்பட்ட அரசியல் கட்சியினரால் தகுதி இல்லாதவர்களை எல்லாம் பதவியில் உட்கார வைத்து விட்டு அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எப்போது இவர்கள் திருந்த போகிறார்கள்?

ஆனால், திருந்தியவர்கள் தான் இன்று தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். மக்களுக்காக! என்றும் மக்களுடன் மக்கள் அதிகாரம்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *