விஜயின் அரசியல் உறுதிமொழி மக்களை திரும்பி பார்க்க வைக்கிறது – இதுதான் மக்களுக்கான அரசியல் .

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சினிமா செய்திகள் ட்ரெண்டிங்

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஒரு அரசியல் யாருக்காக இருக்க வேண்டும்? என்பதை தன்னுடைய வேட்பாளர்களுடன் ,தானும் உறுதிமொழி எடுத்து ,மக்களிடம் அதை உறுதிப்படுத்தி உள்ளார். இதுதான் தேவை.

ஒரு மக்களுக்கான ஆட்சி? யார் அதைத் தர முடியும்? மக்களை நேசிப்பவர்களால் தான் ,அதை கொடுக்க முடியும். மக்களுக்காக தன்னை அர்ப்பணிப்பவர்களால் தான் ,அந்த மக்களாட்சி !மக்களுக்கான, ஆட்சி தர முடியும்.

எத்தனையோ பேர் தேர்தலில் வாக்குறுதிகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வாக்குறுதிகள் மீது மக்களுக்கும் நம்பிக்கை இல்லை. எனக்கும் நம்பிக்கை இல்லை. ஏனென்றால் சொன்னதை உயிரை கொடுத்தாவது அதை நிறைவேற்றி இருக்க வேண்டும். திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

ஆனால் நிறைவேற்றியதாக கார்ப்பரேட் ஊடகங்கள், பொய்யைச் சொல்லிக் கொண்டிருக்கிறது. தவறுகளையும் அராஜகங்களையும் நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட பொய்யை வைத்து மக்களை ஏமாற்றி, அரசியல் செய்கிறார்கள். எங்களுக்கு தெரியும் .

ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவர்களை பற்றியும் ,கட்சியை பற்றியும் ,அவர்களுடைய பல்ஸ் ,அவர்களுடைய நாடித்துடிப்பு ,என்ன? என்பது எங்களை போன்ற பத்திரிகையாளர்கள் (ஜர்னலிஸ்ட்களால் journalist)அதை ஆய்வு செய்து பார்க்க முடியும்.

இந்த உறுதி மொழியை விஜய் கொடுத்திருப்பது, அவர் உள்ளத்தில் இருந்து வந்த வார்த்தைகள், உதட்டில் இருந்து வந்த வார்த்தைகள் அல்ல. மேலும்,அதையும் எங்களால் புரிந்து கொள்ள முடியும். அதனால், விஜய் அரசியலில் நிச்சயம் வெற்றி பெறுவார் அதில் மாற்றுக்கருத்து இல்லை .மக்கள் அவரை நம்பலாம் . அவரால் நிச்சயம் அரசியல் மாற்றத்தை கொண்டு வர முடியும்.

அந்த அரசியல் மாற்றம் மக்களுக்கான அரசியல் மாற்றமாக இருக்கும். மகளீருக்கு , 5000,2000 கொடுப்பதெல்லாம், மக்களை ஏமாற்றும் வேலை. ஐயாயிரத்தைக் கொடுத்து 50 ஆயிரம் அவர்கள் தலையில் வரி சுமையை ஏற்றி வாழ்க்கையை படாதபாடு திமுக படுத்தி விடுவார்கள்.

ஏற்கனவே ,அனலில் ஐந்தாண்டுகள் மக்களை வாடி எடுத்தது போதும். இயற்கை என்ற கடவுள் நீங்கள் தான் இந்த மக்களுக்கு இந்த உண்மையை புரிய வைக்க வேண்டும். எல்லாம் தெரிந்த பரம்பொருள் தான் உங்களுக்கு இந்த உண்மையை உணர்த்த முடியும்.

இல்லையென்றால் போலிகள் சொல்லும் பொய்யை நம்பி விடுவீர்கள். தமிழ்நாட்டு வாக்காளர்களே ஐந்து ஆண்டு ஏமாந்தது போதும் ,இலவசத்தை நம்பி ,இவர்களுடைய தேர்தல் வாக்குறுதிகளை நம்பி, என்ன ? 5 ஆண்டுகளில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்தார்களா? என்பதை மீண்டும் ஒருமுறை சிந்தியுங்கள்.

அப்போதுதான் இவர்களுடைய அராஜக ஆட்சி, நினைவில் எப்போதும் இருக்கும். ஏமாந்தால் அரக்கன் உங்கள் தலையில் ஏறி உட்கார்ந்து கொள்வான். அதனால் , விழித்துக் கொள்ளுங்கள் தூங்கினால், உங்களை அரக்கன் பிடித்துக் கொள்வான். தர்மம் வெல்ல அதர்மத்தை எதிர்ப்பது தவறல்ல. நீங்கள் ஒவ்வொருவரும் அதர்மத்தை எதிர்த்து தர்மத்திற்காக போராடுங்கள். அதுதான் உங்களின் வெற்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *