
கிராமங்களில் ராமதாசுக்காக கொடி பிடித்தவர்கள், பிடித்துக் கொண்டிருக்கிறவர்கள், படித்தவனையும் விஷயம் தெரிந்தவர்களையும் இன்னும் கிராமங்களில் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும்,இவர்கள் ராமதாஸ் எம் .பி. சி இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்தார் என்று இந்த முட்டாள் கூட்டம் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறது. தவிர,இந்த எம் பி சி இட ஒதுக்கீடு, ராமசாமி படையாட்சி 1957 இல் 39 ஜாதிகள் ஒன்றாக சேர்த்து வாங்கினார்.

அதன் மூலம் ,அப்போது வன்னியர்களுக்கு 13 சதவீதம் இந்த எம்.பி.சி இட ஒதுக்கீட்டால் பயன்கள் கிடைத்திருக்கிறது. அதன் பிறகு, 1972ல் கருணாநிதி முதலமைச்சர் ஆன பிறகு ,108 ஜாதிகளை அதில் தன் ஜாதியும் இணைத்து, எம் பி சி யில் கொண்டு வந்துள்ளார். இதனால் ,மூன்ற சதவீத இட ஒதுக்கீடு கூட, இந்த சமுதாயத்திற்கு கிடைக்கவில்லை. மேலும்,

பெரும்பான்மையான சமுதாயமாக இருந்தாலும் ,எப்படி எல்லாம் இந்த சமுதாயம் ஏமாற்றப்பட்டுள்ளது.? ஏமாந்து கொண்டிருக்கிறது? இப்போது தான் இந்த பெரும்பான்மை மக்கள், ராமதாஸ் இன துரோகி என்பதை புரிந்து கொண்டார்கள்.
ஆனால், ராமதாசுக்கு கொடி பிடித்துக் கொண்டு, கோஷம் போட்டுக் கொண்டிருக்கிற, ஊருக்கு ஒரு 10,20 குடும்பங்கள் உடம்பு காட்டிக் கொண்டு, இந்த வரலாறு தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறது. அது யாரிடம் பேச வேண்டும் ?

ஊரில் ஆடு ,மாடு மேய்ப்பவனுக்கு தெரியாது. இவன் சொல்றதை அவன் நம்பி மேலும்,படிப்பறிவு இல்லாதவனும் உண்மை எதுயென்று தெரியாது. நம்புவான்.ஆனால், படித்தவர்களிடம் சொன்னால் ,அதை எப்படி அவன் கேட்டுக் கொள்வான்? மேலும்,
வன்னியர்களின் இன துரோகி ராமதாஸ் போல, ஒருவனுக்கும் யோகம் அடிக்கவில்லை. இந்த இன துரோகியால் வன்னியர் சமுதாயம், இட ஒதுக்கீடு பிரச்சனை தேர்தல் வரும் நேரத்தில் தான் பேசிக் கொண்டிருப்பார்கள். தேர்தல் முடிந்து விட்டதும், ஒவ்வொரு வேட்பாளனும் வன்னியர்களை மறந்து விடுகிறார்கள்.
இப்படிப்பட்ட கூட்டத்தால், தான் வன்னியர் சமுதாயத்திற்கு மரியாதையில்லை. மதிப்பு இல்லை. அரசியல் கட்சிகளில் இருக்கக்கூடிய வன்னியர்கள் ஓட்டுக்காக அவர்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் ஒரு பக்கம் இன்னொரு பக்கம் ராமதாஸ் போன்ற இன துரோகிகள் வன்னிய சமுதாயத்தை இட ஒதுக்கீடு பிரச்சனையை 50 ஆண்டு காலமாக ஏமாற்றிக் கொண்டு ,எல்லோரையும் சேர்ந்து முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,நீங்கள் இட ஒதுக்கீடே வாங்கி தர வேண்டாம். அவரவர் உழைப்பில் முன்னேறுவார்கள்.தவிர திமுகவின் அமைச்சர், துரைமுருகன் திமுகவின் பொதுச்செயலாளரும் முக்கிய இலாக்கா மந்திரி ஆகவும் இருந்தவர் இந்த இட ஒதுக்கீடு பிரச்சனையை ஸ்டாலின் கிட்ட ஏன் பேசவில்லை?
எடப்பாடி கொடுத்த 10.5 % இட ஒதுக்கீட்டை சட்டமன்றத்தில் நிறைவேற்றி இருந்தால் போதுமே, ஆனால், அதையும் இந்த துரைமுருகன் கேட்கவில்லை. ராமதாஸும் அதை கேட்டு பெறவில்லை. இந்த நிலையில் வன்னியர்கள் எதற்காக இவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்?

எனவே, இனி வன்னிய சமுதாயத்தின் வாக்குகள், வேற்று சமுதாயத்தினருக்கு தான் போடுவார்களா? அல்லது தொடர்ந்து ஏமாறுவார்களா?அந்த அளவுக்கு இவர்கள் தொடர்ந்து, இந்த சமுதாயத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் .மேலும்,
வன்னியர் சமுதாயம் முட்டாள்களாக இருந்தால் தொடர்ந்து ஏமாற்ற முடியும். அவர்கள் விழித்துக் கொண்டால்,நிச்சயம் இந்த தேர்தலில் வன்னியர்கள் !வன்னியர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். மேலும்,

அவர்கள் எந்த கட்சியில் நின்றாலும், வன்னியர்களுக்கு வாக்கை கேட்டு, எந்த முகத்துடன் வருகிறார்கள்? துரைமுருகனுக்கு எல்லாம் இந்த வன்னியர்கள் ஓட்டு போடுவார்களா? மேலும், சமுதாயத்தை மதிக்கத் தெரியாதவர்களுக்கு வாக்களிப்பது உங்களுடைய முட்டாள்தனம்.
மீண்டும் ,அப்படி வாக்களிக்கும் போது ,தொடர்ந்து மீண்டும் பதவிக்கு வந்தால், இதே நிலைதான். மறந்து விடுவார்கள். .
மேலும்,ஓட்டு கேட்கும் போது ,இட ஒதுக்கீடு பற்றி பேசுவார்கள். பதவிக்கு வந்தவுடன் சமுதாயத்தை மறந்து விடுவார்கள். இதுதான் வன்னிய சமுதாயத்தின் தொடர் ஏமாற்றம். இனியாவது விழித்துக் கொள்ளுமா? வன்னியர் சமுதாயம்……!