
ஆட்சி மாறினாலும் காட்சி மாறாமல், இது போன்ற திமுகவின் அரசியல் பின்னணியில் பொறுப்பு பதிவாளராக நியமிக்கப்பட்ட குமரேசன் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்களை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் .

மேலும்,இந்த 200க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள், அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள், தொடங்கப்பட்ட நாளிலிருந்து இவர்கள் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார்கள்.
மேலும்,இந்த 15 ஆண்டுகளில் ,இந்த விரிவுரையாளர்களிடம் பயின்ற பொறியியல் பட்டதாரிகள், உலகம் முழுதும் இன்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையும், தகுதி நீக்கம் செய்துவிட்டு, இன்று பொறுப்பு பதிவாளர் குமரேசன் புதியதாக திமுக ஆட்சி முடிவதற்குள்ளே ,அதாவது தேர்தல் நெருங்குவதற்கு முன்னரே 200 க்கும் மேற் பட்டவர்களை பணி நியமனம் செய்து விட்டார். இது கொடுமையான பாதக செயல்.

மேலும்,அரசாங்கம் ஒருவருக்கு 15 ஆண்டுகளுக்கு வேலையை கொடுத்துவிட்டு, அவர்களைப் பணி நிரந்தரம் செய்யாமல், இப்போது ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலம் தங்களுக்கு வேண்டியவர்களை அதாவது பணம் கொடுத்தவர்களை (50 லட்சம்) பணி நியமனம் செய்து கொள்கிறோம் என்றால் !இது அரசாங்க அதிகாரமா? இல்லை அரசின் சர்வாதிகாரமா?
மேலும், ஒரு தனியார் நிறுவனம் கூட ஒருவனை 15 ஆண்டுகள் வேலையை வாங்கிக் கொண்டு ,அவனை வீட்டுக்கு அனுப்பாது. அப்படி இருக்கும்போது, அரசாங்கத்தில் 15 ஆண்டுகள் வேலை செய்த, இந்த விரிவுரையாளர்களை எப்படி திமுக அரசு வீட்டுக்கு அனுப்பலாம்?
மேலும், இவர்களை பணி நியமனம் செய்யும் போது ,அப்போது ஏன் இவர்கள், இந்த விரிவுரையாளர்களை தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யவில்லை? தவிர, பணியாற்றி வருபவர்கள் எல்லோரும் பிஇ முடித்து ,எம்.இ. முடித்து ,பிஎச்டி வரை படித்துள்ளவர்கள். அதற்கு அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள்? தவிர,அவர்கள் குடும்பம் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கும்?
மேலும்,அவர்கள் சம்பளமே 20 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரம் வரை தான், இந்த 15 ஆண்டுகளாக வாங்கி வந்திருக்கிறார்கள். தற்போது, தனியார் பள்ளியில் கூட ,ஒரு ஆசிரியருக்கு 45 ஆயிரம் கொடுக்கிறோம் என்று சொல்கிறார்கள்.
அப்படி இருக்கும் போது ஒரு கல்லூரி விரிவுரையாளர்களுக்கு இவ்வளவு குறைந்த சம்பளத்தை கொடுத்து ,அவர்களுக்கு பணி நியமனத்தை வழங்காமல், இன்று புதியதாக நியமனம் செய்வது, மனசாட்சி இல்லாத திமுக அரசு செய்த மிகப் பெரிய பஞ்சமா பாதக செயல் இது.
மேலும், இவர்களை எப்படி தகுதி நீக்கம் செய்வீர்கள்? எதன் அடிப்படையில் இவர்களை இப்பணிக்கு நியமனம் செய்தீர்கள்? இவர்களை தகுதி நீக்கம் செய்தால், 15 ஆண்டுகளாக இவர்களிடம் படித்த மாணவர்களின் கல்வித் தகுதியும், தகுதி நீக்கம் செய்யுங்கள். அது மட்டும் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
மேலும், விரிவுரையாளர்களே தகுதி நீக்கம் செய்யும் போது, அவர்கள் சொல்லிக் கொடுத்த மாணவர்கள் இன்று பல்வேறு நாடுகளில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் . தவிர, அந்த மாணவர்களின் கல்வித் தகுதி மட்டும், எப்படி ஏற்றுக் கொள்கிறீர்கள்? அது மட்டும் எப்படி தகுதியானதாக இந்த அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறது?
மேலும்,திமுக ஆட்சியில் மனசாட்சி இல்லாமல், இப்படிப்பட்ட காரியம் செய்திருப்பது ,இவர்களெல்லாம் ஆட்சி ஆள்வதற்கே தகுதியற்றவர்கள்.இது தவிர, அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்தப் பொறுப்பு பதிவாளர் குமரேசன் திமுக ஆட்சியில் தனக்கு வேண்டியவர்களுக்கு பணம் வாங்கிக் கொண்டு, போட்டு விட்டார்கள் என்பது தற்காலிக விரிவுரையாளர்களின் குற்றச்சாட்டு .

அது மட்டுமல்ல, 2003இல் ஜெயலலிதா ஆட்சியில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அளவுக்கு அதிகமாக நியமனம் செய்யப்பட்ட விரிவுரையாளர்கள் முதல் டிரைவர் ,ஓஏ, வரைக்கும், அதிகப்படியான ஆட்களை நிர்வாகம் நியமித்து விட்டது.
இதனால் அதனுடைய ஃபண்ட் (பணம்)மொத்தமாக அங்கே செலவிடப்பட்டது. அப்போது கூட அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்களை பணி நீக்கம் செய்யாமல், பணி நிரந்தரம் செய்து உத்தரவிட்டார். ஆனால், இங்கே விரிவுரையாளர் பணிக்கு தகுதியற்றவர்களாக இருந்தாலும், பரவாயில்லை.

மேலும்,15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி இருக்கிறார்கள். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்கள் இதை நம்பி தங்களுடைய வாழ்வாதாரமாக நினைத்து வாழ்ந்து வந்தவர்கள்.

அதனால், புதியதாக தமிழகத்திற்கு பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் விஜய் திமுக அரசின் பணியாளர்கள் நியமனத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று உளளது. அதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் விஜய்க்கு! தற்காலிக பணியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை .
இது சம்பந்தமாக அவர்கள் முதல்வருக்கு புகார் அனுப்பியிருப்பதாக தகவல்.
