அரசியல் கட்சிகளின் சுய உருவம் தெரியாமல் தான் மக்கள் ஏமாறுகிறார்கள். அந்த ஏமாற்றத்திற்கு பின்னால்! கார்ப்பரேட் ஊடகங்கள்- போலியான பத்திரிகை பிம்பங்கள் – இதை வரைமுறைப் படுத்தாமலிருப்பது, ஊழல் அரசியலுக்கு!மத்திய, மாநில அரசின் செய்தித் துறை துணை போகிறதா?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

இந்தியாவின் சட்டங்கள் அம்பேத்கர் கொண்டு வந்த போது, அவர் வாழ்ந்த காலத்தில் மனசாட்சி உள்ள மக்களுக்கு அவருடைய சட்டம் பொருத்தமானதாக இருந்தது.

இப்பொழுது மனசாட்சி இல்லாத மக்களுக்கு ,சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். அரசியலில் நேர்மையானவர்கள், மனசாட்சி உள்ளவர்கள், அப்போது அரசியலுக்கு வந்தார்கள்.

இப்போது மனசாட்சி இல்லாதவர்களும் நேர்மையற்றவர்களும் , ரவுடிகளும், தகுதியற்றவர்களும், எப்படியும் பேசுபவர்களும் தான் ,அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் கருணாநிதி வந்த பிறகு தான் அரசியலில் ஊழல் என்ற வார்த்தையே இந்த மக்களுக்கு தெரிந்துள்ளது. அதுவரை அதற்கு அர்த்தம் கூட தெரியாது.

அதனால் ,அதற்கு தகுந்தார் போல், சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். நாட்டில் எதிர்க்கட்சிகள் என்பது எதிரி நாட்டு அரசியல் கட்சிகள் போல செயல்படுகிறார்கள். மேலும்,

இவர்கள் மக்களுக்காக இருக்கிறார்களா ?இல்லை இவர்களுடைய கொள்ளை அடித்த சொத்துக்களை காப்பாற்றுவதற்காக அரசியல் கட்சிகள் நடத்திக் கொண்டு இருக்கிறார்களா? இதுதான் மிகப்பெரிய சிக்கலாக உள்ளது. மேலும், திருடனும் என்னைப்போல் உத்தமன் இல்லை என்கிறான். கொள்ளையடிப்பவனும் என்னைப்போல், உத்தமன் இல்லை என்கிறான்.

அவனும் சட்டப்படி நடப்பதாக பேசுகிறான். நான் சட்டப்படிதான் கொள்ளையடித்தேன் என்று விவாதிக்கிறான். அதே போல், கார்ப்பரேட் ஊடகங்களும் ,அதை நியாயப்படுத்துகிறது. அரசியல் கட்சிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், எப்படி இந்த ஓட்டை சட்டங்கள் இருக்கிறதோ, அதேபோல்தான் இவர்களுக்கும் சர்குலேஷன் என்ற ஓட்டை சட்டம் இருக்கிறது.

மேலும்,பத்தாயிரம் பிரதிகள் அடித்தால், அவர்களுக்கு தகுதி, செய்தியை பற்றியோ அல்லது விற்பனை பற்றியோ எதுவும் இல்லை. இந்த ஓட்டை சட்டங்களை வைத்து தான் போலியான பத்திரிகை பிம்பத்தில் மக்களை ஏமாற்றுகிறார்கள் .

அது மட்டுமல்ல,தினசரி பத்திரிகை அவர்கள் பேசுவதை அப்படியே போட்டுவிட்டு ,நோகாமல் இவர் சர்குலேஷனில் கணக்கு காட்டி ,பத்திரிக்கை வியாபாரம் நடத்தி விட்டு போவார்கள் . உண்மை எது? என்று மக்கள் ஆராய்ந்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் ,நாங்கள் எல்லாம் இதில் உண்மை எது? பொய் எது? ஆய்வு செய்து மக்களுக்கு கொடுக்க வேண்டும். அப்போதும் எங்களுக்கான சலுகை, விளம்பரங்கள் கிடைக்காது. இந்த ஓட்டை சட்டங்களை மத்திய மாநில அரசு அடைக்க வேண்டும். இந்த செய்திகளால் மக்களுக்கு என்ன பயன் ?அதை வரைமுறை படுத்துங்கள் .மக்களின் வரிபணம் என்பதை மத்திய, மாநில அரசு செய்தித்துறை புரிந்து கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்ல, கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களை உடனடியாக அரசாங்கம் கைப்பற்ற முடியாமல் வழக்குகள் நீதிமன்றத்தில் பல ஆண்டுகள் இழுக்கப்பட்டு வருகிறது. இந்த சட்டங்களின் ஓட்டைகளை பயன்படுத்தி தான் திமுக அமைச்சர்கள் நீதிமன்றத்திலே வழக்காடி கொண்டு இருக்கிறார்கள்.

இங்கு தான் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் . இவர்களுக்கு ஒரு சட்டம், சாமானிய மக்களுக்கு ஒரு சட்டம் ,அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டம் ,அதிகாரிகளுக்கு ஒரு சட்டம்,இப்படி பல முகங்களாக ஒரே சட்டம் சட்டங்கள் இருப்பது ஏன்? மேலும், இதற்குள் தான் அரசியல் ஏமாற்றங்கள் மக்களிடையே நடந்து கொண்டிருக்கிறது. உண்மை எது? தெரியாமல், அவர்கள் புரியாமல் ,வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,உண்மையைப் பற்றி சொல்வதற்கு 10 பத்திரிகைகள் இருக்கிறது என்றால்! பொய்யைப் பற்றி சொல்வதற்கு நூறு பத்திரிகைகள் இருக்கிறது. அதற்கும் சலுகை விளம்பரங்கள் மத்திய மாநில அரசின் செய்தித்துறை கொடுக்கிறது அதுதான் வேதனை.

இந்த நிலையில் தான் மக்களுக்கு அரசியல் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதில் சில யூடியுபர்கள் உண்மையை பேசினாலும், பல யூடியுபர்கள் பொய்யை தான் அவர்களுக்கு வேண்டியவர்களை வைத்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,

நமக்கு என்ன? எவன் வந்தாலும் ?அப்படித்தான் இருப்பான் .இப்படி பேசக்கூடிய மக்கள், இப்படிப்பட்ட ஊழல்வாதிகள் இடம் ,ஆயிரம் ,500க்கு தங்களுடைய வாக்குரிமைகளை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு ஏஜென்ட்கள் அவரவர் அரசியல் கட்சியினர் .அந்தந்த பகுதியில் மக்களுக்கு ஏதோ பாதுகாவலர்கள் போல பேசிக்கொண்டு, அவர்களை வழிநடத்துபவர்கள் போல இருந்து கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு பெரிய சுயநலமான அரசியல்? இதிலிருந்து மக்கள் வெளிவர வேண்டும்.

இனிமேலாவது உண்மை எது? பொய் எது? அன்று புரிந்து கொள்ள வேண்டும் .சாதாரண விஷயத்திற்கே மக்களை ஏமாற்றும் போது, ஒரு நாட்டின் அரசியலின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு எவ்வளவு ஏமாற்றுவார்கள்? எவ்வளவு ராஜதந்திர பேச்சுக்கள் பேச மாட்டார்கள்? இனிமேலாவது சிந்திப்பீர்களா? சிந்திப்பது உங்களுக்கான வெற்றி !சிந்திக்காமல் செயல்படுவது, போலி அரசியல்வாதிகளுக்கு அந்த வெற்றி!

மேலும், அரசியல் கட்சி பத்திரிகைகள், கட்சி தொலைக்காட்சிகள், வியாபார நோக்கம் கொண்டவைகள், இது அத்தனையும் பட்டியல் எடுத்து அதற்கான சலுகை ,விளம்பரங்களை குறையுங்கள் .மக்களுடைய வரி பணத்தை மிச்சபடுத்துங்கள். சமூக நலன் ,தேசநலன் பத்திரிகைகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய முன்னுரிமைகளை அவர்களுக்கு கொடுத்து ,மக்களுடைய வரிப்பணத்தை வீணடிக்காதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *