அரசியல் கட்சியினரும், சோசியல் மீடியாக்களும், போலி பத்திரிக்கை பிம்பத்தை உருவாக்கி, அதை,படிப்பவர்கள், பார்ப்பவர்களை வைத்து பணம் சம்பாதிக்கும் நோக்கம்! சமூக மாற்றத்தை எப்படி உருவாக்கும்? – லட்சத்தில் பார்வையாளர்கள்.

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் டிராவல் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பயணங்கள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம்

அரசியல் என்பது தற்போது சுயநலமாக மாறிவிட்டது. ஒரு கட்சிக்கு நிர்வாகியாகவோ அல்லது அந்த கட்சியின் உறுப்பினராகவோ சேர்ந்து கொண்டால், அவர்கள் அதன் மூலம் எத்தனை லட்சம்? எத்தனை கோடி ?எத்தனை ஆயிரம்? சம்பாதிக்கலாம்? அதாவது அரசியல் கட்சிகளை,ஒரு வியாபார நிறுவனமாக மாற்றிவிட்டார்கள்.

அது ஜாதி கட்சியாக, இருந்தாலும் சரி, மத கட்சியாக இருந்தாலும் சரி, அரசியல் கட்சிகளாக இருந்தாலும் சரி, எல்லாம் ஒரே தராசில் தான் நிற்க வைக்க வேண்டும். இதில் தலைவர்கள் மக்களுக்கு செய்ய வேண்டும் என்ற நோக்கம் இருந்தால், அந்த கட்சி ஓரளவுக்கு மக்களுக்கு நலனில் அக்கறை காட்டுகிறது.

இல்லையென்றால், திமுக கட்சியினர் போன்று, நல்லவர்களாக, நயவஞ்சகர்களாக பேசிக்கொண்டு, மக்களுக்கு எதிரான அரசியலில் ஈடுபட்டு, சொத்துக்களை சேர்ப்பதும், கோடிகளை பார்ப்பதும் ,அராஜகங்களை கட்டவிழ்த்து விடுவதும், இதை எல்லாம் எப்படி அரசியல் !என்று ஏற்றுக்கொள்ள முடியும்?

மேலும்,அதுதான் அரசியல் என்று பல ஊடகங்களும், சோசியல் மீடியாக்களும் நியாயப்படுத்தி பேசுகிறார்கள் . அதாவது குற்றவாளிகள் தன்னை நிரபராதி என்று நியாயப்படுத்துவார்கள் அது போல் தான் அரசியல் கட்சிகளில் பேசி மக்களையும் சமூகத்தையும் முட்டாள் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால், யார் பாதிக்கப்படுகிறார்கள் ?என்றால், உழைப்பவன் பாதிக்கப்படுகிறான் .உழைப்பவனின் முன்னேற்றம் பாதிக்கப்படுகிறது. உழைக்கும் சமூகத்தின் முன்னேற்றம் கேள்விக்குறியாகிறது. அவர்கள் நியாயப்படுத்தி பேசும் வித்தையால் ஏமாற்றப்படுகிறார்கள். இவர்கள் ஏமாறுகிறார்கள் .அவர்கள் உழைக்காமலே அரசியல் கட்சிகளில் முன்னேறுகிறார்கள்.எனவே,

உழைக்காமல் பதவிக்கு வந்து, அரசியல் கட்சிகளின் மூலம் கோடிகளை பார்ப்பது, இன்றைய அரசியலும் , அரசியல் கட்சிகளும்,வியாபார நிறுவனங்களாக மாறி விட்டது. மேலும்,இந்த வியாபாரம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது? என்றால், அடித்தட்டு மக்களிடமிருந்து ஆரம்பிக்கிறது.

அவர்களிடம் ஓட்டுக்கு பணத்தை கொடுத்து ,விலை பேசி, இந்த அப்பாவி மக்களுக்கு ,இலவச பொருட்கள் கொடுத்து ,இலவச அறிவிப்புகளை கொடுத்து, அரசியல் கட்சியினர் ஜெயிக்கிறார்கள். இதில் கட்சி ஒரு பக்கம், மக்களை ஈர்க்கக்கூடிய பேச்சு ஒரு பக்கம், இதற்கிடையில் அரசியல் மக்களுக்கு பெரிய போராட்டமாக இருந்து வருகிறது. அது ஏன்?

ஒரு பக்கம் சோசியல் மீடியாக்கள் ,அரசியல் தலைவர்கள் முதல் கட்சியினர் வரை அவர்களுடைய சொந்த விஷயங்களை தான் அதிகமாக மக்களிடம் பேசுகிறார்கள். பொதுநலன் என்று பார்த்தால் 10 லிருந்து 15 சதவீதம் இருக்கும் . தவிர,அவர்களுடைய சொந்த விஷயங்களை பேசும்போது, அதாவது அந்தரங்க விஷயங்கள் ,அதிலும் வைப்பாட்டி, கள்ளக்காதல், குடும்பத் தகராறுகள், அவர்களுடைய சொத்து விஷயங்கள், அவர்களுடைய வியாபாரங்கள் ,இதைப்பற்றி பேசும்போது ,சோசியல் மீடியாக்களில் அதற்கான பார்வையாளர்கள் அதிகரிக்கிறது .

இது ஒரு வியாபாரமாக சோசியல் மீடியாவாக, இந்த குறுக்கு வழியை பயன்படுத்தி போலியான பத்திரிகை பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மக்களுக்கு இதனால்,என்ன நன்மை? என்று பார்த்தால் ,ஒரு நன்மையும் இருக்காது. வீடியோ வெளியிடுபவர்களுக்கு தான் நன்மை. தவிர நடிகரோ அல்லது அரசியல் தலைவரோ அல்லது அதிகாரியோ அவர்களுடைய குடும்ப விஷயத்தையும் ,சொந்த பிரச்சனைகளையும், கொண்டு வந்து பத்திரிக்கை என்று இவர்கள் சோசியல் மீடியாவில் பேசிக் கொண்டிருப்பது மக்களை முட்டாளாக்கும் வேலை .

மேலும்,அது பத்திரிக்கை வேலையும் அல்ல, இதை பலமுறை மக்கள் அதிகாரத்தில் எழுதி இருக்கிறேன். மேலும், சமூகத்திற்காக தான் பத்திரிக்கை. சமூக நலனுக்காக தான் பத்திரிக்கை ஒருவருடைய தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கையை விமர்சிப்பதற்கு ,பத்திரிக்கை துறை இல்லை.

மேலும், எந்த நோக்கத்திற்காக பத்திரிக்கை என்பதும் தெரியாமல் பத்திரிக்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் இந்த அரசியல் கட்சியினருக்கு, ஜால்ராவாக, எடுப்பாக ,அவர்கள் என்ன தவறுகள் செஞ்சாலும், எப்படி பேசினாலும் ,அதற்கு நியாயப்படுத்தி செய்திகளை வெளியிடுவது பத்திரிகையின் வேலை அல்ல.

மேலும் ,சோசியல் மீடியாவில் பேசுவதும், பத்திரிகை என்று சொல்லி மக்களை முட்டாளாக்கும் வேலை.தவிர, இதனால் ,அரசியலின் நோக்கம் தவறாக சமூகத்தில் எதிரொலிக்கிறது.

மேலும்,சொந்த விஷயத்திற்கும், பொது விஷயத்திற்கும், அர்த்தம் தெரியாதவர்கள், எல்லாம் சோசியல் மீடியாவில் பத்திரிக்கையாளர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தனிப்பட்ட ஒருவரின் சொந்த விஷயங்களை விமர்சிக்கின்ற சோசியல் மீடியாக்கள் தான் அதிகமாக இருந்து வருகிறது.

இதுவரை நான் பார்த்ததில் எந்த ஒரு சோசியல் மீடியாவும் தமிழ்நாட்டில் பொது விஷயங்களை பேசுபவர்கள் மிகவும் சிலர் குறைந்த எண்ணிக்கையில் இருக்கிறார்கள் .மீதி எல்லாம் ஒருவருடைய சொந்த விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும், அரசியல் கட்சியினரின் எதிர்பார்ப்புகள், மக்களின் எதிர்பார்ப்புகளை விட ,இவர்களின் எதிர்பார்ப்புகள் தான் அதிகமாக இருக்கிறது .அதை நிறைவேற்றிக் கொள்வதற்காகத்தான், இன்று அரசியல் கட்சியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், 1965 க்கு முன் தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் அரசியல் கட்சிகள் மக்களுக்காக இருந்தது என்பதை இப்போது மக்கள் இந்த உண்மையை தெரிந்து கொள்வார்களா? மேலும்,

இந்த அரசியல் கட்சிகளின் மீது உள்ள நம்பிக்கை முற்றிலுமாக போய்விட்டது. இப்போது மாற்றத்தை கொண்டு வந்திருக்கும், தமிழக வெற்றிக் கழகம் இவர்கள் கட்சியினரின் எதிர்பார்ப்புகளை, செய்து கொண்டிருந்தால், மக்களின் எதிர்பார்ப்புகள் கனவாகி விடும்.தவிர, தேர்தல் வாக்குறுதிகள் பொய்யாகிவிடும். மேலும்,

அரசியல் கட்சிகளில் இருக்கக்கூடிய சமூக விரோத கும்பல்களை, ஒட்டுமொத்த அரசியல் கட்சியினரும், களை எடுக்க வேண்டும். அவர்களை வைத்து நாங்கள் கட்சியை நடத்துகிறோம் என்றால், படிக்காத மக்களிடம், ஆடு, மாடு மேய்ப்பவர்களிடம் தான், இவர்கள் கட்சி நடத்த வேண்டும்.

அதனால், வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிக்கொண்டு, இருக்கின்ற சோசியல் மீடியா பேச்சாளர்கள் மற்றும் அரசியல் சமூக விரோத கும்பல்கள் சமூகத்திற்கு எதிரான ஒரு அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பது நாட்டுக்கும், சமூகத்திற்கும், மக்களுக்கும், நல்லது. ஏனென்றால் உழைப்பவனின் முன்னேற்றம் கேள்விக்குறியாகிறது. உழைக்கும் சமூகத்தின் முன்னேற்றம் கேள்விக்குறியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *