அரசு மருத்துவமனையில் பணியாற்றக்கூடிய டாக்டர்கள், நர்சுகள் நேரத்திற்கு வராவிட்டால் சுகாதாரத் துறை எச்சரிக்கை .

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர்கள் மற்றும் உதவியாளர்கள், செவிலியர்கள், டிரைவர்கள் போன்ற அனைவரும் நேரத்திற்கு வர வேண்டும் என்று தமிழக அரசு எச்சரிக்கை என இவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ,கடந்த கால ஆட்சிகளில் இவர்கள் இஷ்டத்திற்கு வருவார்கள், இஷ்டத்திற்கு போவார்கள், இதனால், பொதுமக்கள், நோயாளிகள் எவ்வளவு வேதனைகள் அனுபவித்தாலும், அதைப்பற்றி கண்டு கொள்ள மாட்டார்கள்.

மேலும்,தங்களுடைய உயிர் மட்டும் தான் முக்கியத்துவமானது. மற்ற உயிர்களுக்கு வந்த வரைக்கும், அதற்கு மருத்துவம் பார்ப்பார்கள். அதிலும் ஏழை, எளிய நடுத்தர மக்கள், தான் பெரும்பாலும் மருத்துவமனைக்கு வருவார்கள். அவர்களுக்கு உரிய சிகிச்சையை சரியான முறையில் கொடுக்கப்பட வேண்டும்.

கூடுமான வரைக்கும் நோயாளிகளை நோயிலிருந்து பாதுகாப்பது தான், மருத்துவர்களின் நோக்கமாக இருக்க வேண்டும். கடமைக்கு வேலை செய்வது, சம்பளத்திற்காக வேலை செய்வது, ஒரு டாக்டரின் திறமையை வெளிப்படுத்த முடியாது.

தவிர, டாக்டர்கள் மருத்துவத்துறையில், அவர்களுடைய பங்களிப்பு மிகவும் மகத்தானது. ஒவ்வொரு உயிரும், நாட்டில் மதிக்கப்பட வேண்டியது, முக்கியத்துவம் ஆனது என்று தான் அவர்கள் சிகிச்சை அளிக்கப் பட வேண்டும்.

ஆனால், கடந்த காலங்களில் தூய்மை பணியாளர்கள் ஊசி போடவும், பி. எச் .இல். ஆயா வேலைக்கு வந்தவர்களை ஊசி போடவும் ,பயன்படுத்திக் கொண்டிருப்பது போல, இப்போது அப்படிப்பட்ட தவறுகளை எல்லாம் செய்தால், நிச்சயம் டாக்டர்கள் மீதும், செவிலியர்கள் மீதும், நடவடிக்கை பாயும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

மேலும்,புற நோயாளிகள் பிரிவு டாக்டர்கள் காலனி 7:30 மணிக்கு வர வேண்டும். உள் நோயாளிகள் பிரிவில் இருக்கக்கூடிய டாக்டர்கள், 24 மணி நேரமும் இருக்க வேண்டும். என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *