
புதுச்சேரியில் 1971ல் நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தான் போர் வெற்றி தினத்தை இன்று ,புதுச்சேரி அரசு அதை அரசு விழாவாக கொண்டாடியுள்ளது.

மேலும், கடற்கரை சாலையில் பிரெஞ்சு தூதரகம் எதிரில் அமைந்துள்ள, போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில், துணைநிலை ஆளுநர் கே .கைலாஷ் நாதன், முதலமைச்சர் நா. ரங்கசாமி, ஆகியோர் மலர் வளையம் வைத்து போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மேலும், சட்டப்பேரவைத் தலைவர் ஆர் .செல்வம் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பி. ஆர். என் திருமுருகன், சட்டப்பேரவை துணைத் தலைவர் வே ராஜவேலு, அரசு கொறடா பி.வி. ஆறுமுகம் , சட்டமன்ற உறுப்பினர் ஆர். தட்சிணாமூர்த்தி, தலைமைச் செயலாளர் சரத் சவுகான், காவல்துறை இயக்குனர் ஷாலினி சிங், செய்தி மக்கள் தொடர்பு துறை செயலாளர் முகமது அசன் அபித்,
மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், மற்றும் கடலோர காவல் படை தேசிய மாணவர் படை ,முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்க நிர்வாகிகள், ஆகியோர் இந் நிகழ்ச்சியில் பங்கேற்று உயர்நீர்த்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.