
தேர்தல் வருவதற்கு முன்பே அதிமுக அரசியல் கட்சியை பற்றி, மக்கள் அதிகாரத்தில் ஈபிஎஸ்-க்கு நிறைய செய்திகள் வெளியிடப் பட்டுள்ளது.
அதுவெல்லாம் அலட்சியப்படுத்தியதன் விளைவு இன்று அதிமுக படு தோல்விக்கு மிகப் பெரிய காரணம். இருப்பினும் இந்த 47 எம்எல்ஏ வை பெரிய வெற்றி என்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.
மேலும்,இந்தத் தொடர் தோல்வியை சி.வி. சண்முகம் மற்றும் எஸ் பி வேலுமணி ஆகியோர் கேள்வி கேட்பதால், அதற்கு பதில் சொல்ல முடியாத எடப்பாடி பழனிசாமி இவர்களை கட்சியிலிருந்தும், எம்எல்ஏ பதவியில் இருந்தும், நீக்கி விட்டோம் என்கிறார்.
இப்போது பொதுக்குழுவை கூட்டினால், தோல்விக்கான காரணத்தை அங்கே கட்சியினரிடம்,எடப்பாடி பழனிசாமியால், பதில் சொல்ல முடியாது.
மேலும்,அதிமுகவினர் யாருமே இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால், இந்த கட்சிக்கு இருந்த மக்களின் செல்வாக்கை இவர் குறைத்துவிட்டார்.தவிர, யாரெல்லாம் இவரை எதிர்க்கிறார்களோ ,அவர்களை எல்லாம் கட்சியில் இருந்து நீக்கி, இவர் மட்டுமே கட்சி என்று பேசிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.
மேலும்,நான் ஏற்கனவே சொன்னது போல் இன்றைய அக் கட்சியின் பலம் குறைந்து விட்டது. இதற்கு ஆகத்தான் மோடி பலமுறை எல்லோரும் ஒன்றாக சேருங்கள் என்று ,அமித்ஷாவும் பலமுறை இவர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.
இதனுடைய அலட்சியம் இன்று எடப்பாடி பழனிசாமி ,விஜய்க்கு ஆதரவு கொடுக்கக் கூடாது என்று பேசி வந்தவர், திடீரென்று தனக்கு துணை முதல்வர் பதவி கொடுங்கள். அவர்கள் என்ன? ஆதரவு கொடுப்பது ?நாங்கள் கொடுக்கிறோம்.
இவர் அந்தப் பொறுப்புக்கு தகுதியற்ற ஒரு நபர் என்பது இதன் மூலம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இனி அதிமுகவில் கட்சியினர் மத்தியில் என்ன குழப்பத்தை ஏற்படுத்தப் போகிறதோ, இப் பிரச்சனை கட்சி இரண்டாக உடையுமா? அல்லது பொதுக்குழு கூட்டி எடப்பாடி பழனிசாமி அப்பொறுப்பிலிருந்து நீக்குவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.