
உலகில் வெப்பநிலை உயர்வுக்கு என்ன காரணம் என்பதை அந்தந்த நாடுகள் அதற்கான தீர்வு என்ன என்பதை இன்னும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்காதது மிகப்பெரிய வேதனை. மேலும், இதனால் மக்களின் வாழ்க்கை போராட்டம், வேலை செய்யும் திறன், குறைந்துவிட்டது.
இது பொருளாதார வளர்ச்சிக்கும் சவால்களாக தான் இருக்கும். இதனால், விவசாயம் பாதிக்கப்படுகிறது. உணவுப் பொருள் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இது எதனால்? சுற்றுச்சூழல் பாதிப்பு ,அதிக வெப்பநிலையை பூமியின் மீது அதன் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.மேலும்,

உலகில் சுற்றுச்சூழல் பாதிப்பு எதனால்? வளர்ந்து வரும் தொழிற்சாலைகள், நகரங்கள் ,காடுகள் அழிப்பு ,மலைகள், இயற்கை வளங்கள் அழிப்பு ,இவை அத்தனையும் இன்று சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உருவாக்கி இருக்கிறது. இதில் ,இந்தியா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

இதுவரையில் கடந்த திமுக ஆட்சியில் அது போன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .இயற்கை வளங்கள் கொள்ளை அடிக்க பட்டது தான், திமுக, அதிமுக ஆட்சியில்! சாதனைகள். இன்று மக்கள் வெய்யலுக்கு பயந்து, வாழவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். எந்த காலத்தில் இப்படி ஒரு வெப்பம் தமிழ்நாட்டில் பார்த்ததில்லை.

மேலும்,ஆட்டோ, பஸ், டிரெய்ன், போன்றவற்றில் பயணிக்கும் போது கூட அந்த வெயிலின் தாக்கம், அனல் காற்று வீசுகிறது. அதுவும் இந்த வெயில் மாலை 5:30 மணி வரை இந்த வெப்பம் குறையவில்லை.மக்கள் வேறு வழியில்லை என்று வெயிலையும், பொருட்படுத்தாமல், ஓடிக் கொண்டிருக்கிறார்கள். சில தினங்களுக்கு முன்,ஐரோப்பாவில் வெப்பநிலை அதிகரித்தன் விளைவு ஆயிரக்கணக்கான பேர் இறந்திருக்கிறார்கள்,

அதுமட்டுமல்ல, இன்றைய வாகனங்களின் புகை ,சுற்றுச்சூழலுக்கு அச் சுறுத்தலாக உள்ளது. நகரங்களில் இயற்கையான காற்றே பார்க்க முடியாது. அந்த அளவுக்கு சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்று வரை சுற்றுச்சூழல் நிபுணர்கள் ,ஆய்வாளர்கள் அரசுக்கு என்ன பரிந்துரை செய்தார்கள்?

அதுதான் எங்களை போன்ற பத்திரிக்கையாளர்கள் கேள்வி? மேலும், நாட்டில் இருக்கக்கூடிய ஏரி, குளம், குட்டைகளில் மரங்கள் வளர்ப்பது தான் ,சுற்றுச்சூழல் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க முடியும். இது தவிர ,வேறு எந்த வழியும் இல்லை .

மேலும் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவது, கொள்ளையடிக்கப்படுவது, தடுக்கப்பட வேண்டும். மலைகள், காடுகள், பாதுகாக்கப்பட வேண்டும். திமுக ஆட்சியில் இயற்கையை அழித்து விட்டு, மக்களை வாழ வைப்பேன் என்று முட்டாள்களிடம் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,ஸ்டாலின் ஆட்சி !தமிழகத்தின் இருண்டகால ஆட்சி! இதுதான் திமுக ஆட்சிக்கு தகுதியான பத்திரிகையாளர்கள் கொடுக்கின்ற சான்று. இது தவிர,இயற்கை வளங்கள் எந்த அளவுக்கு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் இன்றும் ,நீதிமன்றத்தில் வழக்காக போய்க் கொண்டிருக்கிறது.

அதனால், திமுக மக்களை வாழ வைப்பதற்கு ஆட்சி செய்யவில்லை. இவர்களை பல தலைமுறைகளுக்கு சொத்து கொள்வதற்கு ஆட்சி செய்தார்கள்.மேலும், இயற்கையை அழித்து, மனிதன் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.

இதை புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் விஜய் புரிந்துகொண்டு ,நடவடிக்கை எடுப்பாரா? -தமிழக மக்கள்.
