நாட்டில் பல அரசியல் கட்சிகள் இருக்கின்றன. இது சமூகத்தை முன்னேற்றவா? அல்லது அவர்கள் குடும்பத்தினரையும், அரசியல் கட்சியினரை முன்னேற்றவா? – அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

தமிழ்நாட்டின் அரசியல் எப்படி மக்களிடம் நல்ல பெயர் வாங்குவது? சமூகத்தில் அந்த நல்ல பெயரை வைத்து அரசியலில் பதவிக்கு வருவது? பதவிக்கு வந்து தங்களையும் தங்கள் கட்சியினரையும் ,பலப்படுத்திக் கொள்வது? இதுதான் இன்றைய அரசியல் கட்சியினரின் நோக்கமும், அரசியல் கட்சிகளின் நோக்கமும், ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறது.

இதற்கு பக்கபலமாக இருப்பது பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ,சமூக ஊடகங்கள், இவை அத்தனையும் சேர்ந்தாலும் ,அரசியல் தெரிந்தவர்களை இவர்களால் ஏமாற்ற முடியவில்லை.

ஆனால் ,ஏங்க இவர்கள் கை ஓங்குகிறது? என்றால்! அரசியல் தெரியாத மக்களின் தலையில் தான் கை வைக்கிறார்கள். அரசியல் தெரியாதவர்கள் ஒரு பக்கம் தேவைக்காகவும், வறுமைக்காகவும் , குடும்பத்திற்காகவும்,அல்லது அவர்களின் எதிர்பார்ப்புகளை ஒரு விதத்தில் பூர்த்தி செய்யவும் , இப்படிப்பட்ட அரசியல்! அடிமட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை ஒருவித எதிர்பார்ப்புடன் தான் போய்க் கொண்டிருக்கிறது.

மேலும்,இன்று வரை திமுக பேச்சால் பதவிக்கு வந்து, பல லட்சம் கோடிகளை கொள்ளையடித்து, கொள்ளையடித்ததையும், நியாயப்படுத்தி பேசிக் கொண்டிருக்கிற ஒரு கொள்ளை கூட்டம் உலகத்திலே, வேறு எந்த நாட்டிலும் இருக்காது .

அதற்கு சற்று குறைவான இடத்தில் செகண்ட் ரேங்க் ,அவர்களுக்கு ஃபர்ஸ்ட் ரேங்க் ,இவர்களுக்கு செகண்ட் ரேங்க் ,அதில் அதிமுக வரும் .

மீதி கட்சிகளுக்கு ரேங்கே இல்லாமல் அதில் பயணித்துக் கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு சுழிக்க வேண்டிய அரசியல் கட்சிகள். இவர்கள் மக்களுக்காக பேசுவது போல்! பேசிக்கொண்டு, மக்களுக்காக செயல்படுவது போல், காட்டிக் கொண்டு, வருமானத்தைப் பார்க்கக் கூடிய அரசியல் கட்சி கூட்டங்கள்.

இதையும் இந்த பத்திரிக்கை, தொலைக்காட்சி ,சமூக ஊடகங்கள், மக்களிடம் நல்லவர்களாக அவர்கள் பேசுவதை எல்லாம் செய்திகள் என்ற போர்வையில் ,திணித்துக் கொண்டிருக்கிறது.

செய்திக்கு அர்த்தம் தெரியாதவர்கள் தான் ,இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். என்னைப் பற்றி எதை வேண்டுமானாலும் பேசட்டும் . இதற்கு அதை நான் நிரூபிக்க தயார் .இவர்களால் அதை நிரூபிக்க முடியுமா?

மேலும், உண்மை இருக்கிறது தைரியமாக இதை மக்களிடம் பேசுகிறேன் . அடுத்தது பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள் ,செய்தித்துறை அதிகாரிகள், இதையெல்லாம் வரைமுறைப்படுத்தாத வரை ,இந்த தவறுகள் தொடரும். இதை யார் வரைமுறைப்படுத்த முடியும்? என்ற கேள்வி எழுகிறது அல்லவா? ஐஏஎஸ் அதிகாரிகளின் மூலமாக இதை வரைமுறைப்படுத்த முடியும் .

நான் சொல்வது பத்திரிக்கை துறையை தான் சொல்கிறேன் .அரசியல் கட்சிகளை வரைமுறைப்படுத்த முடியாது .அது மக்கள்தான் வரைமுறைப்படுத்த வேண்டும்.

அப்போதுதான், பொதுநலத்திற்கும், சுயநலத்திற்கும் அர்த்தம் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளுக்கும் , கட்சியினருக்கும், இந்தப் பத்திரிகைகள் போர்வையில்! அந்த பொய்களை மக்களிடம் சொல்லிக் கொண்டிருக்கும் செய்திகளுக்கும் ,செய்தியாளர்களுக்கும் வித்தியாசம் புரிகிறதா?

எந்த நோக்கத்திற்காக அரசியல் ? அரசியல் கட்சிகள் எந்த நோக்கத்திற்காக? பத்திரிகைகள் எந்த நோக்கத்திற்காக ? இதற்குள் பல கேள்விகள் அடங்கி இருக்கிறது. அதை சிந்திக்காமல் மக்கள் வாங்கி படித்துக் கொண்டிருக்கிறார்கள். சிந்திப்பவர்கள் வாங்கிப் படிப்பதில்லை.

அரசியல் தெரிந்தவர்கள் ஏமாறுவதில்லை அரசியல் தெரியாதவர்கள் தொடர்ந்து ஏமாறுகிறார்கள். இனியாவது அரசியலில் ஏமாறும் மக்கள் இதை புரிந்து கொள்வார்களா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *