தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளில், இலவசத்தை அறிவித்து, வாக்காளர்களை கவர்வது அதற்கான நிதி ஆதாரத்தை தேர்தல் ஆணையம் கேட்காமல் இருப்பது தவறானது – சமூக ஆர்வலர்கள் .

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம் வெளிநாட்டு-செய்திகள்

தமிழ்நாட்டில் இலவசம் என்பது அரசியல் கட்சிகள் ,அவர்களுடைய சொந்த நிதியை கொடுப்பது போல், இலவசத்தை அறிவித்து விடுகிறார்கள்.

இந்த இலவசம் யாருக்கு? எதற்கு? ஏன்? கொடுக்க வேண்டும்? இது வரைமுறை இல்லாத இலவசமாக, தமிழ்நாட்டில் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,பெண்களுக்கு உரிமை தொகை கடந்த திமுக ஆட்சியில் ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். இதை ரூபாய் 2500 ஆக மாற்றினார். ஆனால், இதற்கான நிதி ஆதாரம்? வருவாய் ?தமிழ்நாட்டில் எதிலிருந்து இதற்கு கொடுக்கப்படும்? என்பதை இவர் சொல்லவில்லை. இது தவிர, பல இலவச திட்டங்கள் ,அறிவித்திருக்கிறார். கடன் வாங்கி இலவச சட்டத்தை செயல்படுத்தக் கூடாது. மேலும், இது எல்லாம் ஓட்டுக்காக கொடுக்கப்படுகின்ற இலவசம்.

யாருக்கு கொடுக்க வேண்டும்? என்றால்! முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், மிகவும் ஏழ்மையில் படிக்கக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு, இவர்களுக்கு மட்டும் தான் இந்த இலவசத்தை கொடுக்க வேண்டும்.

ஆனால், தமிழ்நாட்டில் இலவசம் என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல், இலவச சைக்கிள், இலவச பஸ் பாஸ், இந்த இலவசம் என்பது தகுதியானவர்கள் மட்டும்தான் இலவசம் இருக்க வேண்டும். வசதியானவர்களும், இலவசத்தை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,குடும்ப வருமானம், ஏழ்மை பின்னணி, உள்ளவர்களுக்கு மட்டும்தான் இலவசம். இங்கே தலித் சமுதாயம், தாழ்த்தப்பட்ட சமுதாயம், பிற்படுத்தப்பட்ட சமுதாயம் , இப்படி சமுதாயத்தை வைத்து இலவசங்கள் கொடுக்க முடியாது.

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு இலவச கல்வி கொடுக்கலாம். இதையெல்லாம் வரைமுறைப்படுத்தாமல் , தமிழக அரசு இலவசத்தை கொடுத்து கடன் சுமையை அதிகரிக்கிறார்கள். மேலும், ஸ்டாலின் கொடுத்தார் .இவரால் கொடுக்க முடியாதா ?இப்படி எல்லாம் வீடியோ போட்டுக் கொண்டு, பேசிக் கொண்டிருக்கிற ,ஒரு கூட்டத்திற்கு இதற்கு அர்த்தம் தெரியாது.

மேலும்,வெத்து வெட்டு கூட்டம், பேசுவதெல்லாம் இன்று செய்தி என்று பார்த்துக் கொண்டிருக்கின்ற சமூக ஊடகங்கள், உண்மை என்ன? என்று இதையெல்லாம் படித்து பார்க்கட்டும். வாய்க்கு வந்ததெல்லாம் பேசுவது, எல்லாம் கேட்டுவிட்டு ,அதற்காக வரைமுறை இல்லாமல் மக்களின் வரிப்பணத்தை செலவு செய்ய முடியாது.

அப்படி செலவு செய்ய வேண்டுமென்றால், அவர்களுடைய கட்சி நிதியை கொண்டு வந்து ,செலவு செய்யுங்கள். இதற்கு நீதிமன்றம் தாமாக முன்வந்து, இதை சுமோட்டா வழக்காக எடுக்க வேண்டும் என்பது சமூக நலன் பத்திரிகையாளர்கள் கோரிக்கை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *