கடவுளுக்கே தீபத்தை ஏற்றக்கூடாது என்று சொல்பவர்கள் இருளின் ஆட்சியாளர்களா?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நாட்டில் இருள் சூழ்ந்த ஆட்சியை நடத்துவதற்கு தான் தீபத்தை ஏற்றக்கூடாது.

ஆனால் ,ஒளி சூழ்ந்த ஆட்சியை நடத்துவதற்கு தமிழ்நாட்டில் எவ்வளவு எதிர்ப்புகள்? ஒளிக்கும், இருளுக்கும் அர்த்தம் தெரியாத கூட்டம், இருளில் எப்படி வேண்டுமானாலும், பேசட்டும் .

ஆனால் ,ஒளிக்கு அர்த்தம் தெரிந்தவன் பேசுவான். நியாயத்தின்படி பேசுவான். ஆனால், இருளுக்கு அர்த்தம் தெரியாதவன் எப்படியும் பேசுவான்.. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ,இருளும் இருக்கிறது ஒளியும் இருக்கிறது.

இருள் கூட்டம் இருளுக்கு உள்ளே வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஒளி கூட்டம், அது ஒளிக்குள் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இருளுக்கும் ,ஒளிக்கும் அர்த்தம் தெரியாத கூட்டம், ஆட்சி செய்யும்போது ,அது இருளாட்சி தான் செய்து கொண்டிருக்கும். ஒளி இருளை நெருங்க முடியாது. அதனுடைய ஆட்டம் ,பாட்டம் எல்லாம் இருளுக்கு உள்ளே முடிந்து விடும். இது மனித வாழ்க்கை.

ஒரு மனிதனின் பிறப்பு இருளாக இருந்தால் ,அவன் கேட்டதை தான் அதிகம் செய்வான் ,அவன் கேடு கெட்டதை தான் அதிகம் பேசுவான் ,அவன் சுயநலமாக இருப்பான், அவன் தர்ம சிந்தனை அற்று இருப்பான் .நியாயத்தை பேச மாட்டான். அநியாயத்தை நியாயம் போல் பேசிக் கொண்டிருப்பான் .

அவனால் ,வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு, திமுகவின் ஆட்சி, திமுக கட்சியினர் ,இப்போது யார்? என்று இந்த நாட்டு மக்கள் சிந்தியுங்கள். ஒளியை விரும்பாதவன், இருளுக்குள் வாழ்பவன். அவன் மனதில் இருள்தான் இருக்கும்.

ஒளியை விரும்புபவன்,மனசாட்சி இருக்கும். மனசாட்சி இல்லாதவன் எப்படி பேசுவான்,மனசாட்சி இருப்பவன், இப்படி தான் பேச வேண்டும் என்று இருப்பான். கோடியை கொள்ளை அடிப்பவன், திறமை என்று நினைத்துக் கொண்டிருக்கிறான்.சட்டத்தை ஏமாற்றுபவன் ,திறமை என்று நினைத்துக் கொண்டிருக்கிறான்.

ஏன்? கடவுளை ஏமாற்றுபவன் கூட ,திறமை என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். பத்திரிக்கை பற்றி தெரியாதவன், எல்லாம் பத்திரிகை என்று எழுதிக் கொண்டிருக்கிறான். எது பத்திரிக்கை? எது பத்திரிக்கை இல்லை ?என்று தெரியாமல் ,இந்த அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

எது அரசியல்? என்று தெரியாமல், அரசியல் பேசிக் கொண்டிருக்கிறான்.இதுதான் இருள் ஆட்சியின் விளக்கம் போதுமா? இல்லை, இன்னும் தேவையா? எனவே, திமுகவினர் எல்லாம் தெரிந்த மேதை போல் பேசாதீர்கள்.

உங்களுடைய மேதை தனம் எல்லாம் ஊரை ஏமாற்றுவதற்கு, உங்களைப் போன்ற இருளோடு, இருளாக இருப்பவர்களுக்கு தான் ,அது பொருந்தும். ஒளிக்கு அது பொருந்தாது.

சட்டத்தை ஏமாற்றி, சட்டத்துக்குள் ஒளிந்து கொண்டிருப்பவன், திறமை என்று நினைக்கக் கூடாது. நீ என்னைக்கு இருந்தாலும், நீ அதுக்கு பதில் சொல்லிவிட்டு தான் போக வேண்டும்.

இன்று இல்லை என்றால்! உனக்கு நாளை அந்த கணக்கு இருக்கிறது. நீ மந்திரியாக இருந்தாலும், சாதாரண மனிதனாக இருந்தாலும் ,இயற்கையின் கணக்கிலிருந்து ஒருவனும் தப்பிக்க முடியாது.

எங்கெங்கு அடிக்க வேண்டும் என்று இயற்கைக்கே தெரியும். அதனால், திமுக நீங்கள் பெரிய ஆளு என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் எல்லாம் சின்ன ஆள்.

சட்டத்தை ஏமாற்றி, கொள்ளையடித்து, சமூகத்தை ஏமாற்றிக் கொள்ளையடித்து நீ காரில் போவது, சொகுசு பங்களாவில் வாழ்வது, பெரிய திறமையும், ஆளும் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்.

போன ஜென்மத்தில் ஏதோ செய்த புண்ணியம் என்று திருடனுக்கும், கொள்ளையடிப்பவனுக்கும், இயற்கை கொடுத்து விட்டது. ஆனால், அதே இயற்கை கொடுக்கப் போகும் தண்டனை என்ன என்று உங்களுக்கு தெரியாது.

இருள் ஆட்சி செய்யும் போது, அதற்கு மட்டும் தான் பலன். ஆனால், ஒளி ஆட்சி செய்யும் போது ,அந்த ஒளியால் பல பேருக்கு பலன், மனிதரிலும் அப்படித்தான் இருளாக வாழ்ந்து கொண்டிருப்பவன், அவன் மட்டுமே வாழ்ந்து கொண்டிருப்பான்.

ஆனால், ஒரு மனிதன் ஒளியாக வாழ்பவன், அவனை சார்ந்து 10 பேருக்கு நல்லதை செய்வான் .இப்போது திமுகவினர் ஆட்சி ஒளியா? அல்லது இருளா? என்பதை இதை படிக்கும் வாசகர்கள் முடிவு செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *