
சட்டமன்ற உறுப்பினர்கள்! வாக்களித்த மக்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவர்களுடைய உழைப்புக்கு, உண்மைக்கு, சட்டத்துக்கு, நீதிக்கு பயந்து ,மனசாட்சிக்கு பயந்து, சட்டமன்ற உறுப்பினர்கள் இனியாவது அப்படி பேசுவார்களா?
தவிர,சட்டமன்றம் எப்படியும் பேசுவதற்கு சட்டமன்றம் அல்ல! உங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கும் சட்டமன்றம் அல்ல! மேலும்,

சட்டமன்றத்தின் கால நேரம் தமிழக மக்களுக்கு பயனுள்ள செய்திகளை கொடுப்பதாக இருக்க வேண்டும். மேலும்,அங்கே சட்டமன்ற உறுப்பினர்கள் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கும் பேச்சுக்களை பேசிக்கொண்டு, தேவையற்ற கருத்துக்களை பேசிக்கொண்டு ,கால நேரத்தை வீணடிப்பது தேவையற்றது.
மேலும்,அதை லைவாக வேற காட்டுவது, அரசியல் தெரிந்தவர்கள் பார்க்க மாட்டார்கள். தெரியாதவர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அது போலத்தான், எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகள் இதையெல்லாம் மிகப் படுத்தி பேசுவதற்கு ஒன்றுமே இல்லை.மேலும்,

என்ன சொல்ல வேண்டுமோ ,அதை சொல்லுங்கள். எதை பேச வேண்டுமோ, அதை பேசுங்கள் . எதிர்க்கட்சியாக இருந்தாலும் ,ஆளும் கட்சியாக இருந்தாலும், மக்களுக்காக பேசுகின்ற அது ஒரு மாமன்றம்.அதை விட்டு, விட்டு தேவையற்றதை எல்லாம் பேசு நேரத்தை வீணாக்குகிறார்கள்.

மேலும்,நேரு கேட்கிறார்? நாங்கள் என்ன தீய சக்தியா?தீய சக்தி என்றால் அதற்கு அர்த்தம் என்ன ? எதை வைத்து எங்களை தீய சக்தி என்று சொல்கிறீர்கள்? சட்டமன்றத்தில் இதைக் கேட்பதற்கு இது ஒரு முக்கியமான கேள்வியா? அரசியல் மேடை போட்டு, பேச வேண்டியது எல்லாம் ,சட்டமன்றத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,

அதேபோல், அன்புமணி மனைவி சௌமியா ,பேசும்போது ,குழந்தைகள் எல்லாம் ஐந்து வயது முதல் பத்து வயது குழந்தைகள், எல்லாம் செல்போனில் அடிக்ட் ஆகி இருக்கிறார்களாம் .அவர்கள் இணையதளத்தை பார்க்கக் கூடாது.

மேலும், இதையெல்லாம் தவிர்க்க குழந்தைகளுக்கு வெளிநாட்டில் சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள் .இந்தியாவிலும் அது போல் சட்டம் கொண்டு வர தமிழக சட்டமன்றத்திலே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பேசுகிறார்கள். இதைப் பற்றி ஒரு நண்பரிடம் சொன்னேன் அவர் சொல்கிறார், முதலில் இவர்களுடைய பேரக்குழந்தைகளுக்கு அந்த சட்டம் அங்கே அமுல்படுத்துவார்களா?
சட்டம் ! நாட்டுக்கும் ,நாட்டு மக்களுக்கும் , மட்டும் தானா? ஊரை ஏமாற்றும் ,அரசியல் கட்சியினர்க்கும் அரசியலில் கொள்ளை அடிப்பவர்களுக்கும், அவர்களுக்கு எல்லாம் சட்டம் இல்லையா?

மேலும் ,டாஸ்மாக் குறித்து செந்தில் பாலாஜி சொல்வதெல்லாம் சட்டம் ஏற்றுக் கள்ள வேண்டும். மக்கள் ஏற்றுக் கள்ள வேண்டும்.அதைக் கேட்டுக் பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க வேண்டும் .இதுதான் நான்காவது தூண் வேலையா?

மேலும் , இந்த சட்டங்களை கடைப்பிடிக்க வேண்டியது,அரசியல் கட்சியினருக்கோ, தேர்வு செய்த பிரதிநிதிகளுக்கோ கிடையாதா? திமுகவில் உண்மையிலே எங்களைப் போன்ற அரசியல் தெரிந்தவர்கள் எல்லாம் நீங்கள் தீய சக்தி அல்ல! மகா, மகா, தீய சக்திகள் என்றுதான் எழுதுவோம்.
அரசியல் என்றால் என்ன? என்று தெரியாமல், இருப்பவர்களிடம் பேசினால் நீ சொல்வதை கேட்டுக் கொள்வான். இல்லையென்றால் கூலிக்கு ,விலை போகக்கூடியவர்கள், தான் உங்களை பாராட்ட முடியும்.
தகுதியான பத்திரிகைகள் எல்லாம் எப்படி இதை ஏற்றுக் கொள்ள முடியும் ?மேலும், உங்களை பாராட்டுபவன் பத்திரிக்கைக்கு, தொலைக்காட்சிக்கு அர்த்தம் தெரியாதவன் தான், பாராட்ட முடியும். அல்லது ஒரு வேலை அது உண்மை என்று அப்படியே போட்டுக் கொண்டிருப்பது,தமிழ்நாட்டு மக்களில் அரசியல் தெரியாத குருடர்களாக இருந்தால், அது ஒருவேளை உண்மை என்று ஏற்றுக்கொள்வார்களா? மேலும்,

மக்கள் அதிகாரம் மக்களிடம் அரசியலில் எது உண்மை? என்று புரிய வைக்கும். உணர வைக்கும் .அதுதான் மக்கள் அதிகாரம்! மக்களுக்காக, மக்களுடன் என்றும் …..!மக்கள் அதிகாரம்.
